Published:Updated:

“என் வாழ்க்கையை படமா எடுத்தா சினிமா உலகமே மிரண்டிடும்!” - மனம் திறக்கும் நடிகை லீலாவதி

நடிகை லீலாவதி
பிரீமியம் ஸ்டோரி
நடிகை லீலாவதி

நல்ல சாப்பாடும் துணிமணியும் கிடைக்கு மேங்கிற ஆசையில நடிக்க சம்மதிச்சேன். பிறகு, நிறைய நாடகங்கள்ல நடிச்சேன்.

“என் வாழ்க்கையை படமா எடுத்தா சினிமா உலகமே மிரண்டிடும்!” - மனம் திறக்கும் நடிகை லீலாவதி

நல்ல சாப்பாடும் துணிமணியும் கிடைக்கு மேங்கிற ஆசையில நடிக்க சம்மதிச்சேன். பிறகு, நிறைய நாடகங்கள்ல நடிச்சேன்.

Published:Updated:
நடிகை லீலாவதி
பிரீமியம் ஸ்டோரி
நடிகை லீலாவதி

தமிழ் மற்றும் கன்னட சினிமாவின் சூப்பர் சீனியர் நடிகைகளில் முக்கியமானவர் லீலாவதி. ‘அவள் ஒரு தொடர்கதை’யில் மனதை ரணமாக்கும் மகளின் (சுஜாதா) கேள்வி களுக்குப் பதில் சொல்ல முடியாமல் பரிதவிக் கும் அம்மாவாகவும், ‘அவர்கள்’ படத்தில் மகன் (ரஜினி) செய்த தவற்றுக்குப் பரிகாரமாக, மருமகளுக்குப் பணிவிடைகள் செய்யும் மாமி யாராகவும் நடிப்பில் ஸ்கோர் செய்திருப்பார்.

லீலாவதி இப்போது எங்கே, எப்படி இருக் கிறார் என்று தேடினோம். கர்நாடக மாநிலத்தில் விவசாயத்துடன் ஓய்வுக்காலத்தை மகிழ்ச்சி யாகக் கழிப்பவரைக் கண்டுபிடித்து, பிரயத் தனப்பட்டு பேட்டிக்குச் சம்மதிக்க வைத்தோம்.

“என் வாழ்க்கையை, புனைவில்லாம அப்படியே சினிமாவா எடுத்தா, கன்னட சினிமாவே மிரண்டு போகும்...” ஒன்லைனி லேயே அதிர வைப்பவர், திருப்பங்கள் நிறைந்த தனது வாழ்க்கையை முழுமையாகப் பகிர்ந்தார்...

“வறுமையின் பிடியில குடும்பம் தத்தளிக்க, ரெண்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திட்டு, பாத்திரங்கள் தேய்க்கிறது, கூட்டிப் பெருக் குறதுனு வீட்டு வேலைக்குப் போக ஆரம்பிச் சேன். அவங்க கொடுக்கிற மிச்ச மீதி சாப்பாட்டுலதான் பசியைப் போக்கிப்பேன். ஸ்டேஜ் டிராமா கம்பெனி நடத்திட்டிருந்த ஒருத்தரோட வீட்டுல நான் வேலை செஞ்சு கிட்டிருந்தேன். அவங்க ஒத்திகை நடத்துறதை ஆர்வமா கவனிப்பேன். ‘உனக்கு நடிக்க விருப் பமா?’னு வீட்டு முதலாளி என்கிட்ட கேட்டார்.

பண்ணையில்...
பண்ணையில்...

நல்ல சாப்பாடும் துணிமணியும் கிடைக்கு மேங்கிற ஆசையில நடிக்க சம்மதிச்சேன். பிறகு, நிறைய நாடகங்கள்ல நடிச்சேன். கன்னட சினிமாவுலயும் சின்னச் சின்ன வேஷங்கள் கிடைச்சது’’ என்று வெள்ளந்தி யாகச் சிரிப்பவருக்கு, ‘மாங்கல்ய யோகா’ கன்னடப் படம் மூலம் கதாநாயகி வாய்ப்பு கைகூடியிருக்கிறது.

“பிடிச்ச சினிமா தொழில் மூலமா வறுமை யிலேருந்து மீண்டுடலாம்னு ஆசைப்பட்டேன். ஆனா, ‘கூத்தாடி பொழப்பு நமக்கு வேணாம்’னு என் பெற்றோர் உறுதியா இருந்தாங்க. அவங்க விருப்பத்துக்கு எதிரா நடந்துகிட்டதால, பெற்றோர் என்னைவிட்டு முழுமையா விலகிட்டாங்க. ‘வீட்டு வேலைகள் செய்து கிட்டிருந்தவ, நடிகையாகிட்டாளே’ன்னு பலரும் பலவிதமா பேசினாங்க. அதை யெல்லாம் மறக்கடிக்கிற அளவுக்கு ரசிகர்கள் என்மேல அன்பு காட்டினாங்க...” உதாசீனங் களைப் புறந்தள்ளி கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்த லீலாவதி, சிறந்த நடிகைக்கான தேசிய விருதை இரண்டு முறையும், கர்நாடக அரசின் விருதை ஆறு முறையும் வென்றிருக்கிறார்.

கன்னட சூப்பர் ஸ்டாராக கோலோச்சிய ராஜ்குமாருடன் 30-க்கும் அதிகமான படங் களில் லீலாவதி இணைந்து நடித்திருக்கிறார். இவர்களின் ஜோடி இன்றளவும் பேசப்படும் ஹிட் கூட்டணி. அந்த ராஜ்குமார்தான் லீலாவதியின் கணவர் என்பது பலரும் அறியாதது. ‘ராஜ், லீலா வினோதா’ என்ற பெயரில் வெளியான லீலாவதியின் சுயசரிதை நூலில், இடம்பெற்ற இவர்களின் மண வாழ்க்கை குறித்த விஷயங்கள் அதிர்வலை களை ஏற்படுத்தின.

“என் வாழ்க்கையை படமா எடுத்தா சினிமா உலகமே மிரண்டிடும்!” - மனம் திறக்கும் நடிகை லீலாவதி

“எங்க காதலும் கல்யாணமும் ரகசியமாதான் நடந்துச்சு. அதுக்கப்புறமா பல பிரச்னைகள் ஏற்பட்டுச்சு. நான் யார் வாழ்க்கையையும் பங்கு போடவோ, மத்தவங்களுக்குத் தொந்தரவு கொடுக்கவோ விரும்பலை. அதனால, என் குழந்தையோடு தனியாவும், சுய சம்பாத்தியத் துடனும் வாழ்க்கையை நடத்தினேன். எனக்குக் கொடுத்த வாக்குறுதிப்படி, என் கணவரால கடைசிவரைக்கும் எங்க பந்தத்தைப் பொதுவெளியில சொல்ல முடியலை. எனக்கு இப்போ 86 வயசாகிடுச்சு. நான் வாழ்ந்த வாழ்க்கை தப்பாகிடக் கூடாதுங்கிறதால 2017-ல் வெளியான என் சுயசரிதையில சில உண்மைகளை வெளிப்படுத்தினேன்...” தன் வாழ்வின் முக்கியமான அத்தியாயத்தை உருக்கமான குரலில் வெளிப்படுத்தியவர், ‘வளர்பிறை’, ‘சுமைதாங்கி’, ‘நான் அவனில்லை’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங் களிலும் நடித்திருக்கிறார்.

“ ‘அவள் ஒரு தொடர் கதை’யில நடிச்சது பெரிய கோர்ஸ் கத்துகிட்ட மாதிரி யான அனுபவம். ‘கல்யாணத் துக்கு முன்னாடி ஒரு பெண் கர்வமா இருந்தா தப்பில்லை; கர்ப்பமா இருந்தால்தான் தப்பு’ உட்பட சுஜாதா என்னைப் பார்த்து பேசுற பல வசனங்கள் நெருப்பால சுடுற மாதிரி இருக்கும். ‘உங்க நடிப்பு சாமானிய தாயின் உணர்வுகளைப் பிரதிபலிக்கணும்’னு கே.பி சார் சொன்னதை உள்வாங்கிக்கிட்டு நடிச்சேன்.

அவர்கள் படத்தில்...
அவர்கள் படத்தில்...

‘இந்தப் படத்துக்கு அப்புறமா தமிழ் நாட்டுலயும் உங்களுக்குப் புகழ் கிடைக்கும்’னு கே.பாலசந்தர் சார் சொன்னது அப்படியே நடந்துச்சு. அந்தப் படத்தோட கன்னட ரீமேக்லயும் அதே அம்மா ரோல்ல என்னை நடிக்க வெச்சார் கே.பி சார். அதே நம்பிக்கை யில, ‘அவர்கள்’ படத்துல ரஜினிக்கு அம்மாவா நடிக்க வாய்ப்பு கொடுத்தார். குடும்பத்துக்காக உழைச்சு மெழுகா கரையுறது, புருஷன் உட்பட யார் தயவுமில்லாம குழந்தையை வளர்க்க கஷ்டப்படுறதுனு அந்த ரெண்டு படங்களோட ஹீரோயின் ரோலும், என் வாழ்க்கையை நினைவு படுத்துறதா இருந்துச்சு. அதனாலதான் என்னவோ, அந்தப் படங்கள்ல என்னால உணர்வுபூர்வமா நடிக்க முடிஞ்சது” என்று பெருமிதப் படுபவர், 650 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.

கன்னட நடிகரான தன் மகன் வினோத் ராஜுவுடன் பெங்களூருவை அடுத்த சொலதேவனஹல்லி மலைப்பகுதியில் வசித்து வருகிறார் லீலாவதி. அந்தப் பகுதியிலுள்ள பழங்குடி மக்களின் நலனுக்காக 50 லட்சம் ரூபாய் செலவில் மருத்துவமனை கட்டிக் கொடுத்திருக்கிறார்.

ஓய்வுக்கால விவசாயப் பணிகளைப் பசுமையுடன் பேசுபவர், “சினிமாவைப் போலவே விவசாய வேலையும் என் மனசுக்கு நெருக்கமானது. அதனால, சிறுகச் சிறுக சேமிச்ச பணத்துல, சென்னையை அடுத்த கேளம்பாக்கத்துல 1960-கள்ல கொஞ்ச நிலம் வாங்கினேன். ஓய்வு நேரங் கள்ல தோட்ட வேலை களைச் செய்வேன். அப்போ நெற்பயிர் விளைச்சல் அங்க அமோகமா நடந்துச்சு.

மகனுடன்
மகனுடன்

1980-ல் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சென்னை வந்தப்போ, என் கேளம்பாக்கம் தோட்டத்துக்கு வந்து விவசாய வேலைகளைப் பார்த்து ஆச்சர்யப் பட்டார். 2000-ம் வருஷம் வரை சென்னையில வசிச்ச நிலையில, அப்புறமா நடிக்கிறதை நிறுத்திட்டு கர்நாடகாவுல குடியேறினேன்.

“என் வாழ்க்கையை படமா எடுத்தா சினிமா உலகமே மிரண்டிடும்!” - மனம் திறக்கும் நடிகை லீலாவதி

இப்ப ஏழு ஏக்கருடன் கூடிய இந்தப் பண்ணை வீட்டுல வசிக்கிறோம். நிறைய பழ வகை பயிர்களுடன், மிளகு, காபி, தென்னைனு பணப்பயிர்களும் இங்க அதிகமா விளையுது. வெளியுலகத்துலேருந்து எல்லா விதத்துலயும் விலகி, அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கிட்டிருக்கேன்” என்று நிறைவான புன்னகை யுடன் முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism