Published:Updated:

``பிரபு - குஷ்பு டான்ஸ்... சிரஞ்சீவி ஆங்கர்... மோகன்லால் மேஜிக்!'' - 80'ஸ் மீட்டில் என்ன நடந்தது?

நடிகை லிசி மற்றும் சிரஞ்சீவி
நடிகை லிசி மற்றும் சிரஞ்சீவி

சிரஞ்சீவி வீட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த 80'ஸ் ஸ்டார்ஸ் மீட் அப் குறித்துப் பேசுகிறார் நடிகை லிசி!

``2009-லிருந்து வருஷா வருஷம் 80'ஸ் நடிகர்கள் நடிகைகள் சந்திக்கிற ஸ்டார்ஸ் மீட் அப்தான் இது. முடிஞ்ச வருஷத்தைவிட வரப்போகிற வருஷம் இன்னும் நல்லயிருக்கணும்னு நினைச்சுதான் இதுக்காக வேலைபார்ப்போம். இந்த வருஷம் இந்த சந்திப்பு ரொம்ப ஸ்பெஷல். ஏன்னா, இது எங்களின் பத்தாவது வருஷம்'' என்ற லிசியிடம் 80'ஸ் மீட் சுவாரஸ்யங்கள் குறித்துப் பேசினேன்.

80'ஸ் குரூப்
80'ஸ் குரூப்

``மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கையில கடைசி 10 வருஷம் அவரை யாருமே கண்டுக்கல. பெரிய பேச்சுகள்கூட எங்கேயும் இல்லை. ஆனா, அவர் இறந்ததுக்கு அப்புறம் அவரோட பேச்சுதான் உலகம் முழுக்க. அவரோட டான்ஸ் போட்டிகள் எல்லா இடத்துலயும் நடந்தது. எல்லாரும் அவரைப்பத்தியே பேசிட்டிருந்தாங்க. உயிரோட இருந்தப்போ யாருமே கண்டுக்கல. இறந்ததுக்கு அப்புறம் இப்படியெல்லாம் பண்றாங்களேனு வருத்தமா இருந்தது. அந்த நேரத்துல நடிகை சுமலதாவுடைய வீட்டுக் கல்யாணத்துக்கு நானும் சுஹாசினியும் போயிருந்தோம். அங்கே நடிகர் மோகனைப் பார்த்தோம். மூணு பேரும் சேர்ந்து `ஆனந்த ஆராதனை'னு ஒரு படத்துல ஒன்னா நடிச்சிருக்கோம். ஆனா, கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கு அப்புறம் மோகனை அந்தக் கல்யாணத்துலதான் நான் பார்த்தேன்.

ஒரே ஊர்ல இருந்தும்கூட இடையில எங்கேயும் சந்திக்கல. போன்லகூட விசாரிக்கல. இந்த நிகழ்வு ரொம்ப யோசிக்க வெச்சது. ஒண்ணா பல படங்கள் நடிச்சிருக்கோம். ஆனா, ஒரு நட்பு இல்லையேன்னு தோணுச்சு. மைக்கேல் ஜாக்சன் விஷயமும் இந்த நிகழ்வும் சேர்ந்துதான் 80'ஸ் மீட்டைப் பற்றி எங்களைப் பிளான் பண்ண வெச்சது. நான் தனியாளா இதைப் பண்ண முடியாது. அப்போ இதைப் பத்தி சுஹாசினிகிட்ட சொன்னேன். எல்லாரையும் கூப்பிட்டுப் பெருசா பண்ணலாம்னு அவங்கதான் சொன்னாங்க. சினிமால ஆக்டிவா இருந்தாலும் இல்லாட்டியும் எல்லாரும் ஒண்ணா இருக்கணும் நட்பு தொடரணும்னு முடிவு பண்ணிதான் இந்தச் சந்திப்பை வருஷா வருஷம் பண்ணிகிட்டு இருக்கோம்.

சிரஞ்சீவி
சிரஞ்சீவி

ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு இடத்துல எங்களோட இந்தச் சந்திப்பு நடக்கும். முதல் ரெண்டு வருஷத்துக்கான எங்களின் சந்திப்பை நானும் சுஹாசினியும் சேர்ந்து தொகுத்து வழங்கினோம். பெங்களூர்ல இந்தச் சந்திப்பு நடந்தப்போ அம்ரீஷும் சுமலதாவும் நடத்தினாங்க. சென்னையில் நடந்தப்போ மோகன்லால் தொகுப்பாளரா இருந்திருக்கார். இந்த வருஷம் தொகுப்பாளரா இருந்தது சிரஞ்சீவி. அவரோட வீட்டுலதான் இந்த வருஷத்துக்கான சந்திப்பு நடந்தது.

நானும் சுஹாசினியும்தான் 80'ஸ் கிளப்புடைய ஃபவுண்டிங் மெம்பர்ஸ். எங்க கோர் கமிட்டி உறுப்பினரா பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பு, ராஜ்குமார் சேதுபதி இருக்காங்க. நடக்கப்போகிற சந்திப்பு எப்படியிருக்கணும் என்னவெல்லாம் நிகழ்ச்சியில் சுவாரஸ்யமா இருந்தா நல்லயிருக்கும்னு, நாங்க 5 பேரும் முதல்ல கூடி சென்னையில் பேசிட்டு அதுக்கு அப்புறம் நிகழ்ச்சி தொகுப்பாளர்கிட்ட சொல்லுவோம். இந்த வருஷம் சிரஞ்சீவி சார்கிட்ட சந்திப்பு குறித்த எல்லா விஷயங்களையும் அப்டேட் பண்ணிக்கிட்டே இருந்தோம். அவர் பிஸியா இருந்தப்போவும் நிகழ்ச்சியை சுவாரஸ்யமா நடத்த நிறைய ஐடியாஸ் எங்களுக்கு கொடுத்தார்.

போன்ல அடிக்கடி கூப்பிட்டுப் பேசுவார். சந்திப்புக்கு வந்தவங்களுக்கான ரூம் வசதி, சாப்பாடு, அவங்களுக்கு தேவையான அனைத்தையும் சிரஞ்சீவி சார் பார்த்துக்கிட்டார். நானும் சுஹாசினியும் பார்க்க வேண்டிய பெரும்பாலான வேலைகளை அவரே எடுத்துக்கிட்டு எங்களுக்கு ஓய்வு கொடுத்துட்டார். அவரோட மனைவியும் அவருக்கு ஒத்தாசையா இருந்து உதவி பண்ணுணாங்க. சிரஞ்சீவி சார் ஆபீஸ்ல இருந்த ஜிகே மற்றும் சில எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர்ஸ் இதற்கான வேலைகள் பார்த்தாங்க. 80'ஸ் நடிகர், நடிகைகளுக்குனு தனி வாட்ஸ்அப் குரூப் இருக்கு. அதுல எங்க சந்திப்புகான மெசேஜ் போட்டுவிட்டோம். போன்ல எல்லோரையும் அழைக்க ஆரம்பிச்சோம். சிரஞ்சீவி சாரும் தனிப்பட்ட முறையில் எல்லாரையும் கூப்பிட்டார்.

குஷ்பு
குஷ்பு

கிட்டத்தட்ட 5 மாநிலத்தைச் சேர்ந்த பிரபலங்கள் எல்லாரும் ஒண்ணா கூடினோம். இந்த வருஷ சந்திப்புக்கு `பொற்காலம்'னு பேர் வெச்சிருந்தோம். அதனால டிரெஸ் கோட் கோல்ட் வித் பிளாக். எல்லா பிரபலங்களும் இந்த நிறத்துல அவங்களுடைய ஸ்டைலில் என்ட்ரி கொடுத்தாங்க. மொத்தம் 37 மெம்பர்ஸ். ரம்யா கிருஷ்ணன் எல்லா வருஷமும் வருவாங்க. ஆனா, இந்த வருஷம் அவங்களால் வர முடியல. அதே மாதிரி பாலிவுட் நடிகர் அனில் கபூர் வர்றதுக்கு ஆர்வமா இருந்தார். கடைசி நேரத்துல அவரால் வர முடியல. கமல் சாரோட கால் ஆப்பரேஷனால அவரும் வரல. ரஜினி சார் ஷூட்டிங் பிஸியால மிஸ் பண்ணிட்டார். இருந்தும் நாங்க எல்லாரையும் ஒருங்கிணைக்கத் தேவையான எல்லா விஷயங்களையும் பண்ணிகிட்டு இருந்தோம்.

முதல்நாள் காலையில 6 மணிக்கு ஆரம்பிச்சு அடுத்தநாள் காலை வரைக்கும்... கிட்டத்தட்ட 24 மணி நேரம் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தினோம். இந்த முறை என்டர்டெய்ன்மென்ட் செக்மென்ட் அதிகமா பண்ணோம். பழைய பாடல்களுக்கு எல்லோரும் டான்ஸ் ஆடினாங்க. சிவாஜி சாரோட `மெல்ல நட மெல்ல நட' பாட்டுக்கு பிரபு- குஷ்பு சேர்ந்து டான்ஸ் ஆடினாங்க. இது மாதிரி ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாட்டுக்கு டான்ஸ் ஆடினாங்க. நிகழ்ச்சியோட ஹைலைட் மோகன்லால் சாரோட கேம்ஸ் மற்றும் மேஜிக் ஷோ. ஒவ்வொரு வருஷமும் அவர் ஏதாவது மேஜிக் பண்ணுவார். இந்த வருஷம் லெவிட்டேஷன் மேஜிக் பண்ணார். அந்தரத்தில் அப்படியே ஒருவரைத் தூக்கி நிறுத்துவது. இது ரொம்ப ஸ்பெஷல் மொமன்ட்டா இருந்தது. எல்லா மொழி சார்ந்த பிரபலங்களும் இருந்ததுனால எல்லா மொழிகளும் பேசி சிரிச்சிக்கிட்டிருந்தோம். மொழிகள் தாண்டி ஒன்றிணைந்தோம்னுகூட சொல்லலாம். எங்களோட இந்த நிகழ்வு எமோஷனல் பாண்டிங்கோட ரொம்ப நல்லபடியா முடிஞ்சது.

நதியா
நதியா
`` `நேர்கொண்ட பார்வை' ரொம்பப் பிடிச்சது... அஜித் நல்ல படங்களில் நடிக்கிறார்!'' - சிரஞ்சீவி!

80-களில் நடிச்சவங்க நிறைய பேர் இருக்காங்க. எங்களைவிட திறமைசாலியான நபர்களும் இருக்காங்க. இந்த 80-களின் சந்திப்பு எங்களுக்குத் தெரிஞ்ச பழக்கமான நண்பர்களின் சந்திப்புதானே தவிர, ஒட்டுமொத்த 80-களின் சந்திப்பு கிடையாது. பெரியவங்க, சின்னவங்க, திறமைசாலிங்க, லைம் லைட்ல இருக்குறவங்கனு பார்த்து இந்தச் சந்திப்பை நாங்க நடத்தல. சிலரை நாங்க கூப்பிடாததனால அவங்க நல்ல ஆர்ட்டிஸ்ட் இல்லைன்னு அர்த்தம் கிடையாது. அவங்க எல்லாரும் எங்களைவிட பெரிய ஆட்கள்தாம். நட்பு ரீதியாகத்தான் நாங்க சந்திக்கிறோம். இந்த வருஷம் வந்திருந்த 37 பேரும் ஒரே ஃப்ரேமில் போட்டோ எடுத்தது மறக்க முடியாத நிகழ்வு. இந்த உலகத்துல வேற எந்த சினிமா பிரபலங்களும் இப்படி ஒண்ணாகூடி போட்டோ எடுத்திருக்க மாட்டாங்கனு நினைக்கிறேன். எங்களுக்குள்ள பெரிய நடிகர், சின்ன நடிகர்கள்னு எந்த வேறுபாடும் கிடையாது. நாங்க எல்லோரும் ஃப்ரெண்ட்ஸ்... அவ்வளவுதான்'' என்கிறார் லிசி.

அடுத்த கட்டுரைக்கு