Published:Updated:

"நடிகையின் வாழ்வு ஏமாற்றம் நிறைந்தது!" - கே.ஆர்.விஜயாவின் ஒப்புதல் #VikatanVintage

எந்த ஒரு தொழிலைச் செய்பவர்களுக்கும், அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கும், அவர்கள் பணியாற்றும் வருடத்தையட்டி ஊதிய உயர்வு உண்டு.

கே.ஆர்.விஜயா
கே.ஆர்.விஜயா

திரைத் துறையில் செஞ்சுரி போட்டிருக்கிறார் திருமதி கே.ஆர்.விஜயா. 'கற்பகம்' விஜயாவுக்கு 'நத்தையில் முத்து' 100-வது படம்!

'' 'திரைப்படத்தில் கவர்ச்சியாக நடிப்பதில் என்ன தவறு?’ என்று இன்றைய புதுமுகங்களில் பலர் கேட்கிறார்கள். ஓரிரு படங்களில் கவர்ச்சியாக நடிப்பதில் தவறு இல்லை. ஆனால், தொடர்ந்து அதேபோன்ற பாத்திரங்களில் நடிப்பது நல்லதல்ல!

நான் கவர்ச்சி வேடங்களில் மட்டுமே நடித்துப் புகழ் பெற்றிருந்தால், இன்று திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தாயான பின்பும் ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டு இருக்க மாட்டார்கள். குணச்சித்திரப் பாத்திரங்களை ஏற்று நான் நடித்ததாலேயே, என் திருமணத்துக்குப் பிறகும் அதிகமான படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறேன்.

"நடிகையின் வாழ்வு ஏமாற்றம் நிறைந்தது!" - கே.ஆர்.விஜயாவின் ஒப்புதல் #VikatanVintage

எந்த ஒரு தொழிலைச் செய்பவர்களுக்கும், அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கும், அவர்கள் பணியாற்றும் வருடத்தையட்டி ஊதிய உயர்வு உண்டு. ஆனால், நடிகைகளின் வாழ்வு அப்படிப்பட்டது அல்ல. படவுலகில், அவர்களின் திறமையைப் பொறுத்தும், மக்கள் மத்தியில் அவர்களின் செல்வாக்கைப் பொறுத்தும்தான் ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது.

அலுவலகத்தில் ஓய்வு பெறுவதற்கு என்று குறிப்பிட்ட வயது வரம்பு உண்டு. ஆனால், மக்கள் மத்தியில் நடிகைகள், என்று செல்வாக்கை இழக்கிறார்களோ... அன்றே அவர்கள் ஓய்வு பெற வேண்டியதுதான். பெரும் புகழுடன், பணத்துடன், செல்வாக்குடன் விளங்கும் ஒரு நடிகை, 25 வயதிலேயே ஓய்வு பெறும் நிலை ஏற்பட்டால்... அவளுடைய கற்பனைகள், ஏமாற்றங்கள் வாழ்க்கை மீது அவளுக்கு எந்த அளவுக்கு எரிச்சலை, கசப்பை ஏற்படுத்தும் தெரியுமா?''

- சியாமளன்

| ஆனந்த விகடன் - 26.8.1973 இதழில் இருந்து |

ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக இப்போது ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய க்ளிக் செய்க... > http://bit.ly/2X6Z1Bo

"நீச்சல் உடையில் நடிக்கத் தயார்!" - ஸ்ரீப்ரியா துணிச்சல்

ஸ்ரீப்ரியாவுடன் ஒரு சடாசட் பேட்டி...

''ஒளவையார் பாத்திரத்தைத் திரைப்படத்தில் ஏற்க நேர்ந்தால், நீங்கள் நடிக்கத் தயாரா?''

ஸ்ரீப்ரியா
ஸ்ரீப்ரியா

''நீங்கள் பார்க்கத் தயாரா?''

''எந்த நடிகை மீதாவது உங்களுக்குப் பொறாமை உண்டா?''

''நிறைய உண்டு! ஸ்ரீதேவியின் உயரத்தைப் பார்த்தால்... ஸ்ரீவித்யாவோட 'வாய்ஸ்’... சுஜாதாவின் கண்கள் - இப்படிச் சொல்லிக்கிட்டே போகலாம்!''

''தமிழ்ப் படங்களில் நல்ல 'கேரக்டர் ரோல்’ செய்யும் நடிகைகள், தெலுங்குப் படங்களில் நீச்சல் உடையில் தோன்றுகிறார்களே... அதைப்பற்றி உங்கள் கருத்து?''

''யெஸ்! நானும் சான்ஸ் கிடைச்சா... நடிப்பேன்! தெலுங்குல மட்டுமில்லே, தமிழ்ப் படத்துலேயே நீச்சல் உடையில் நான் நடிக்கத் தயார்!''

- பாகி | ஆனந்த விகடன் 15.08.81

ஸ்ரீதேவியின் 1,03,017 கடிதங்கள்!

தன் அசிஸ்டென்ட் செல்வத்திடம் கேட்டு செக் செய்து கொண்டு ஒரு புள்ளிவிவரம் தந்தார் ஸ்ரீதேவி. 1984-ம் வருடத்தில் மட்டும் ஸ்ரீதேவிக்கு வந்த ரசிகர் கடிதங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து மூவாயிரத்துப் பதினேழு!

ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி

| ஆனந்த விகடன் - 13.10.1985 இதழில் இருந்து |

# விகடன் சந்தாதாரர்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்களின் முக்கியமானது, 2006 முதல் இன்று வரையிலான அனைத்து விகடன் இதழ்களையும் எப்போது வேண்டுமானாலும் வாசிக்கலாம் என்பதே. நம் தளத்திலுள்ள லட்சக்கணக்கான கட்டுரைகளும் பேட்டிகளும் பொக்கிஷங்களாக வாசிக்கக் கிடைக்கின்றன. > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக இப்போது ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய க்ளிக் செய்க... > http://bit.ly/2X6Z1Bo