Published:Updated:

“‘ரோஜா’ மாதிரி சவாலான கேரக்டர்களில் நடிக்கணும்!”

மதுபாலா
பிரீமியம் ஸ்டோரி
மதுபாலா

ரம்யா கிருஷ்ணனும் நானும் நெருங்கிய தோழிகள். மும்பையில ஷில்பாவைப் பார்ப்பேன். அரவிந்த் சாமி சாரும் இந்த லிஸ்ட்ல உண்டு

“‘ரோஜா’ மாதிரி சவாலான கேரக்டர்களில் நடிக்கணும்!”

ரம்யா கிருஷ்ணனும் நானும் நெருங்கிய தோழிகள். மும்பையில ஷில்பாவைப் பார்ப்பேன். அரவிந்த் சாமி சாரும் இந்த லிஸ்ட்ல உண்டு

Published:Updated:
மதுபாலா
பிரீமியம் ஸ்டோரி
மதுபாலா
‘சின்ன சின்ன ஆசை’ என்று குறும்புப்பெண்ணாய் ஆடிப் பாடியபோது தமிழகமே கொண்டாடிய மதுபாலா. ‘தலைவி’யில் வி.என்.ஜானகியாக நடித்து இன்னொரு இடத்துக்கு நகர்ந்திருக்கிறார். வெப்சீரிஸ் படப்பிடிப்புக்காகச் சென்னை வந்தவரைச் சந்தித்தேன்.
“‘ரோஜா’ மாதிரி சவாலான கேரக்டர்களில் நடிக்கணும்!”

``சினிமாவில் 31-வது ஆண்டைக் கொண்டாடுறீங்க. வாழ்த்துகள்!’’

‘‘சந்தோஷமா இருக்கு. சினிமாவுக்கு வரணும் என்பது நானாக எடுத்த முடிவு. தமிழில்தான் அறிமுகமானேன். தென்னிந்திய மொழிகள், இந்தின்னு பல மொழிகளிலும் நடிச்சிட்டேன். எந்த மொழியாக இருந்தாலும் சரி, உணர்வுகளும் அதை வெளிப்படுத்தும் விதமும் ஒண்ணுதான். ஆனா, அந்த எமோஷனைச் சுத்தி இருக்கற சூழல்கள் மாறிட்டே இருக்கும். நான் நடிக்க வந்த புதுசுல, தென்னிந்திய சினிமா உலகம்தான் ரொம்பத் திட்டமிட்டு இயங்கியது. இப்போ பாலிவுட்டும் அதுமாதிரி மாறிடுச்சு.

ஒரு மாதத்துக்கு முன்னாலயே டயலாக் பேப்பர் வந்துவிடுவதால் கேரக்டரை உள்வாங்கி, தயாராகி நடிக்க முடியுது. அதேநேரம் ரொம்பத் திட்டமிட்டு நடிச்சாலும் கிரியேட்டிவிட்டி குறைய வாய்ப்பிருக்கு. கொஞ்சம் கூடுதல் சுதந்திரமும் இருந்தால்தான் இன்னும் கிரியேட்டிவிட்டியா நடிக்க முடியும்.’’

“‘ரோஜா’ மாதிரி சவாலான கேரக்டர்களில் நடிக்கணும்!”

``பல வருடங்களாக மும்பையில் வசித்தாலும் தமிழ்ல அவ்ளோ அழகா பேசுறீங்களே?’’

‘‘அதுக்கு காரணம் விகடன் போன்ற இதழ்கள்தான். நான் தமிழ்ப்பொண்ணுதான். சென்னையில பிறந்தவதான். ஆனா, மும்பையில இருந்ததால அப்ப தமிழ் அவ்ளோ பேச வராது. ஆனா, எங்க அம்மாவுக்கு தமிழ் வார, மாத இதழ்கள் படிக்கறது பிடிக்கும். நிறைய வாசிப்பாங்க. ஆனந்த விகடனும், ராணியும் எங்க வீட்ல வரும். அதுல பெரிய எழுத்துகள்ல இருக்கறதை வாசிக்கச் சொல்லிக் கொடுப்பாங்க. இது ‘வி’, இது ‘க’, ‘இது ‘ட’ இது ‘ன்’னு ஒவ்வொரு எழுத்தையும் எழுத்துக் கூட்டி வாசிக்கக் கத்துக் கொடுத்த பழக்கம்தான் இப்ப வரை, ஓரளவு வாசிப்பேன். ஆனா, எழுத வராது.’’

“‘ரோஜா’ மாதிரி சவாலான கேரக்டர்களில் நடிக்கணும்!”

``உங்க முதல் படம், முதல் நாள் ஷூட் ஞாபகம் இருக்கா?’’

‘‘அதெப்படி மறக்க முடியும்! கே.பாலசந்தர் சார், மம்மூட்டி சார்னு கிரேட் டீம். ‘அழகன்’ல என்னோட டான்ஸ்தான் முதலில் படமாக்கினாங்க. ரகுராம் மாஸ்டர், மம்மூட்டி சார், சுரேஷ் சக்ரவர்த்தி, நிறைய குழந்தைகள் செட்ல இருந்தாங்க. அந்தக் குழந்தைகள்ல ஒருத்தர்தான், இப்போ டான்ஸ் மாஸ்டரா இருக்கற ராபர்ட். வேற ஜென்மத்துல ஷூட்டிங் போனது மாதிரி இருக்குது. 30 வருஷம் கடந்தும், தமிழ் ரசிகர்கள் என்னை இன்னும் மறக்காமல் இருக்காங்க. ‘அழகன்’ல அறிமுகமானேன். அடுத்து மணிரத்னத்தின் ‘ரோஜா’, இன்னிக்கு வரை என் தனிப்பட்ட அடையாளமாகப் பார்க்குறாங்க. அதே மாதிரி ஒரு சவாலான ரோலை, நடிச்சு, மறுபடியும் நல்ல பெயரெடுக்கணும்னு இப்பவும் ஆசைப்படுறேன்.’’

“‘ரோஜா’ மாதிரி சவாலான கேரக்டர்களில் நடிக்கணும்!”

``சென்னை, மும்பையில உங்க சினிமா ஃப்ரெண்ட்ஸ் யாரெல்லாம்..?’’

“ரம்யா கிருஷ்ணனும் நானும் நெருங்கிய தோழிகள். மும்பையில ஷில்பாவைப் பார்ப்பேன். அரவிந்த் சாமி சாரும் இந்த லிஸ்ட்ல உண்டு. சமீபத்தில் ‘தலைவி’யோட பிரெஸ்மீட் போயிருந்தேன். மேடைக்கு ஒரு பெரிய ஹைஹீல்ஸ் செருப்பு போட்டு ஏறிட்டேன். ஆனா, அங்கிருந்து திரும்ப கீழே படி இறங்கும்போது, என்னோட ஹீல்ஸ் செருப்பை நினைச்சு, ஒரு பயம் வந்திடுச்சு. மேடை முன் வரிசையில் நிறைய பேர் எனக்குத் தெரிஞ்சவங்க இருந்தாங்க. ஆனா, நான் அரவிந்த்சாமி சாரையைப் பார்த்து, என் கை நீட்டினேன். மத்தவங்க என்னைப் புரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி, அவர் அந்த இடத்துல எழுந்து வந்து எனக்குக் கைகொடுத்தார். அவருக்கும் எனக்கும் ஒரு நல்ல புரிதல் இருக்கு.’’

“‘ரோஜா’ மாதிரி சவாலான கேரக்டர்களில் நடிக்கணும்!”

``குடும்பம் பத்திச் சொல்லுங்க...’’

‘‘என் குடும்பம்தான் என் உலகம். அழகான அன்பான குடும்பம். மும்பையிலதான் இருக்கோம். கணவர் பிசினஸ்மேன். என் ரெண்டு மகள்களும் லண்டன்ல படிக்கறாங்க. அவங்க சின்ன வயசுல இருக்கும்போது, டி.வி-யில நான் நடிச்ச படம் ஒளிபரப்பாகும்போது இறந்து போற சீனைப் பார்த்துட்டு அழுதுடுவாங்க. அவங்களுக்கு நான் ரொமான்ஸ் சீன்ல நடிக்கறதும் பிடிக்கவே பிடிக்காது. ‘இரு... அப்பாகிட்ட சொல்றேன்’னு சொல்வாங்க. ஆனா, அடுத்து அவங்க பெரிய பொண்ணா ஆன பிறகு பிரியங்கா சோப்ரா, அலியா பட் ரசிகர்களானாங்க. என்னோட ஆரம்பக் கால படங்களப் பார்த்துட்டு, ‘மம்மா, யூ லுக் ஓல்டு ஃபேஷன்’ம்பாங்க.’’

``தமிழ்ப் படங்கள் பார்க்கிறீங்களா?’’

‘‘நேரம் கிடைக்கறப்ப பார்க்கறேன். இப்ப ‘தலைவி’யைக்கூட சென்னையில திருவான்மியூர்லதான் பார்த்தேன். அடுத்து தமிழ்ல ஒரு படம் பண்ணிட்டு இருக்கேன். மலையாளத்துலேயும் ஒரு படம் பண்றேன். தெலுங்கில் ‘ருத்ரமாதேவி’ குணசேகர் சார் இயக்கத்தில ‘சாகுந்தலம்’னு ஒரு படம் பண்ணியிருக்கேன். ரொம்ப அருமையான கேரக்டர். இனி, தொடர்ந்து தமிழ்ல நடிக்கணும்னு நினைக்கறேன். என் செகண்ட் இன்னிங்ஸை ‘தலைவி’ ஆரம்பிச்சு வச்சிருக்கிறது மகிழ்ச்சியா இருக்கு’’ கண்கள் மின்னப் பூரிக்கிறார் மதுபாலா.