Published:Updated:

`` `தலைவி'ல அரவிந்த்சாமிகூட நிக்கும்போது 20 வருஷம் பின்னாடி போயிட்டேன்; ஏன்னா?!" - மதுபாலா

மதுபாலா

``ரொம்ப சந்தோஷமா இருக்கு. செகண்ட் இன்னிங்ஸ்ல நிறைய நல்ல இயக்குநர்கள் படத்துல நடிச்சிட்டிருக்கேன். பாலசந்தர், ஷங்கர், மணிரத்னம் படங்கள்ல நடிச்சப்போ லெஜண்ட்களைப் பற்றி தெரியல. ஆனா, இப்ப புரிஞ்சு நடிக்குறப்போ சினிமாவுக்காக நிறைய உழைக்கிறேன்''

`` `தலைவி'ல அரவிந்த்சாமிகூட நிக்கும்போது 20 வருஷம் பின்னாடி போயிட்டேன்; ஏன்னா?!" - மதுபாலா

``ரொம்ப சந்தோஷமா இருக்கு. செகண்ட் இன்னிங்ஸ்ல நிறைய நல்ல இயக்குநர்கள் படத்துல நடிச்சிட்டிருக்கேன். பாலசந்தர், ஷங்கர், மணிரத்னம் படங்கள்ல நடிச்சப்போ லெஜண்ட்களைப் பற்றி தெரியல. ஆனா, இப்ப புரிஞ்சு நடிக்குறப்போ சினிமாவுக்காக நிறைய உழைக்கிறேன்''

Published:Updated:
மதுபாலா

பிரபுவுடன் `காலேஜ் குமார்' மற்றும் இயக்குநர் விஜய்யின் `தலைவி' படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் மதுபாலாவிடம் ஒரு மாலைப் பொழுதில் பேசினோம்.

`` `தலைவி'ல அரவிந்த்சாமிகூட நிக்கும்போது 20 வருஷம் பின்னாடி போயிட்டேன்; ஏன்னா?!" - மதுபாலா

``பிடிச்ச மாதிரியான புரொஜக்ட்கள் இப்ப வந்துட்டு இருக்கு. என்னோட திருமணத்துக்குப் பிறகு சிலகால இடைவெளிகள் சினிமாவுல விழுந்துருச்சு. திரும்பவும் சினிமாவுக்கு வந்தப்ப பாலாஜி மோகனின் `வாயை மூடி பேசவும்'ல வாய்ப்பு கிடைச்சது. வாய்பேச முடியாத நபரா நடிச்சிருப்பேன். அதுக்குப் பிறகு என்னோட மொத்த இமேஜுக்கும் எதிரான கேரக்டரில் `அக்னிதேவ்' படத்தில் நடிச்சிருந்தேன். இந்தப் படம் ரிலீஸாகுறப்ப சில பிரச்னைகள் வந்தது. இருந்தும் என்னோட ரோல் நல்லா இருந்தது. நானும் மாறுபட்ட கேரக்டரில் நடிச்சதுக்கு சந்தோஷப்பட்டேன். இப்ப பிரபு சார்கூட கிட்டதட்ட இருபத்து நாலு வருஷத்துக்குப் பிறகு `காலேஜ் குமார்' படத்துல சேர்ந்து நடிச்சிருக்கேன். அப்ப மாதிரி பிரபு சார்கூட நடிக்குறப்ப எப்பவும் மதியம் லஞ்ச் அவர் வீட்டுல இருந்துதான் வரும். `பாஞ்சாலங்குறிச்சி' படத்தோட ஷூட்டிங் பொள்ளாச்சியில நடந்திட்டிருந்தப்ப எனக்கும் சேர்த்து அவர் வீட்டுல இருந்து லஞ்ச் வரும். தயிரும் நெய்யும் ரொம்பப் பிடிக்கும். அதனால கண்டிப்பா எனக்காக அதைக் கொண்டு வந்திருவாங்க. பல வருடங்களுக்குப் பிறகும் `காலேஜ் குமார்' ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்தப்ப தயிரும் நெய்யும் லஞ்ச்சுக்காக வந்திருந்தது. பிரபு சார் இன்னும் அப்படியே இருக்கார்னு தோணுச்சு. அதே மாதிரி `பாஞ்சாலங்குறிச்சி' படத்துல `உன் உதட்டோர' பாட்டு செம ஹிட். இந்தப் படத்துலயும் இந்தப் பாட்டை யூஸ் பண்ணியிருக்கோம்."

'தலைவி' படத்துக்குள்ள எப்படி வந்தீங்க?

`` 'எப்போ எது நடக்கணுமோ அது அப்போ நடக்கும்' இதுதான் வாழ்க்கையில நான் கத்துக்கிட்ட விஷயம். அப்படித்தான் எனக்குக் கிடைச்சிருக்குற `தலைவி' வாய்ப்பைப் பார்க்கிறேன். ஏர்போர்ட்ல இயக்குநர் விஜய் என்னைப் பார்த்திருக்கார். ஆனா, அந்த நேரத்துல அவரை நான் பார்க்கல. அப்போதான் அவரோட மைண்ட்ல `ஜெயலலிதா மேடமுடைய அம்மா சந்தியா கேரக்டர்ல என்னை நடிக்க வைக்கணும்'னு தோணியிருக்கு. இதை யோசிச்சிட்டு இருந்தப்ப என்னோட மேனேஜரை சென்னையில் பார்த்திருக்கார். விஜய் சாருக்கு என்னோட போன் நம்பர்கூட அப்போ கிடைக்கல. அதுக்குப் பிறகு மேனேஜர்கூட தொடர்பு பண்ணிட்டு மும்பையில என்னை வந்து சந்திச்சுப் பேசினார். அப்போ `தலைவி' கதையைச் சொன்னார். கதையைச் சொல்லி முடிச்சவுடன் எம்.ஜி.ஆரின் ஜானகி கேரக்டருக்கு பொருத்தமா இருப்பேன்னு தோணியிருக்கு. எனக்கும்கூட இதுதான் தோணுச்சு. இப்போ ஜானகி கேரக்டரில் நான் நடிச்சிட்டு இருக்கேன்."

`ரோஜா' படத்துக்குப் பிறகு அரவிந்த்சாமிகூட சேர்ந்து நடிக்குறது எப்படியிருக்கு?

ரோஜா
ரோஜா

``இந்தப் படம் மூலமாதான் பயோபிக்ல முதன்முதல்ல நடிக்குறேன். செகண்ட் இன்னிங்ஸ்ல இந்த மாதிரியான படங்கள்ல நடிக்குறது திருப்தியா இருக்கு. ஜானகி அம்மா பத்தி கேள்விப்பட்டிருக்கோம். ஆனா, பார்த்ததில்லை. நம்மளுடைய இயல்பான கேரக்டர் எங்கேயும் எட்டிப்பார்க்காம அவங்களோட முகசாயலில், உடல்பாவனைகளைக் கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டு நடிக்கிறேன். புதுசான அனுபவமா இருக்கு. இதுல கூடுதல் ஸ்பெஷல், அரவிந்த்சாமி சார்கூட 20 வருஷத்துக்கு அப்புறம் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்குறது. தவிர, நாசர் சாரும் இருக்கார். எங்கே விட்டோமோ அங்க இருந்தே ஆரம்பிச்ச உணர்வைக் கொடுத்திருக்கு. முதல் ஷாட்லயே என்னோட அரவிந்த்சாமி மற்றும் நாசர் இருந்தாங்க. கட் சொல்லி முடிச்ச அடுத்த நிமிஷம், `The legend of roja collecting here'னு விஜய் சார் சொன்னார். ரொம்ப உணர்ச்சிவசப்பட்டேன். 90'களில் இருந்து நடிச்சிட்டு வந்தாலும் செட்ல புதுசா வந்த நடிகை மாதிரி ஃபீல் பண்ணிட்டிருந்தப்ப இந்த மாதிரியான வார்த்தைகள்ல இன்னும் உற்சாகம் ஆகிடுச்சு. என்னோட வழியில கஷ்டப்பட்டுதான் பெரிய ரோல் கிடைக்குற இடத்துக்கு வந்திருக்கேன். இந்தப் படத்தோட ஷூட்டிங் ஸ்பாட் எனக்கு நல்ல நினைவுகளை கொடுத்திருக்கு."

சக பாலிவுட் நடிகையா கங்கனாகூட நடிச்ச அனுபவம்?

கங்கனா
கங்கனா

``இப்ப டிரெண்ட்ல இருக்குற ஹீரோயின்கூட சேர்ந்து நடிச்சது நல்லா இருந்தது. ரெண்டு பேருக்கும் நிறைய காம்பினேஷன்ஸ் சீன்ஸ் வரல. சேர்ந்தும் ரெண்டு நாள்தான் வேலை பார்த்தோம். வேலையில ரொம்ப சின்ஸியரா இருந்தாங்க. சினிமாவை மதிக்கத் தெரிஞ்சவங்க."

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம்னு படங்கள் பண்ணியாச்சு. எந்த மொழி சினிமா எளிதா இருக்கு?

``தமிழ் மற்றும் இந்தியில படங்கள் பண்றது ரொம்ப சுலபம். காரணம் மொழி வலிமை. மொழி தெரிஞ்சிட்டா, நடிக்குறது ஈஸியாகிரும். என்னோட செகண்ட் இன்னிங்ஸ்ல கன்னடத்துலதான் நிறைய படங்கள் பண்ணியிருக்கேன். ஆனா, முன்னாடியெல்லாம் கன்னடத்துல படம் பண்ண ரொம்ப யோசிப்பேன். எங்க அப்பாகிட்ட, `கன்னட படம் வேண்டாம்'னு அப்போ சொல்லியிருந்தேன். எனக்கு இப்பதான் கன்னடம் பேசுறது சுலபமாகிருக்கு. நிறைய நல்ல படங்கள் பண்ணிட்டிருக்கேன். ரொம்ப நேசிச்சு பண்றேன். ரொம்ப ஸ்பெஷலா கன்னட சினிமாவைப் பார்க்கிறேன். எப்பவும் நம்மள பார்த்து ஓடுறவங்களை விடவும், நம்மளை தேடி வர்றவங்களை நாம மறக்கக் கூடாது. அப்படித்தான் கன்னடம் சினிமா எனக்கு. பெரிய மரியாதை வெச்சிருக்கேன்."

சககால ஹீரோயின்ஸ் யாரெல்லாம்கூட தொடர்பில் இருக்கீங்க?

ரம்யா கிருஷ்ணன்
ரம்யா கிருஷ்ணன்

`` 'வானமே எல்லை' படத்துல இருந்து இப்போ வரைக்கும் ரம்யா என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட். குஷ்பூ கூடவும் பேசிட்டிருக்கேன். 80'களின் சந்திப்பு மாதிரி '90'களின் சந்திப்பும் நடந்தால் நல்லாயிருக்கும்'' என்கிறார் 90'ஸ் கிட்ஸ்களின் ஹீரோயின் மதுபாலா.