Published:Updated:

"என் வாழ்க்கையில நகைச்சுவை முக்கிய பங்கு வகிக்குது!" - 'அசுரன்' மஞ்சு வாரியார் ஷேரிங்ஸ்

நான் இயக்குநர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்கிற ஆர்டிஸ்ட். அதனால், இந்தப் படத்துக்காக எனக்கு எந்த முன்தயாரிப்பும் தேவைப்படலை

மஞ்சு வாரியார்
மஞ்சு வாரியார்

"எந்த ஒரு விஷயத்திலும், அதிலுள்ள பாசிட்டிவ் தன்மையை மட்டும்தான் எடுத்துக்குவேன். அதனால, எந்த விஷயமும் தனிப்பட்ட முறையில் என்னை பாதிச்சதில்லை. சினிமா, நடிப்புதான் எனக்கான ஸ்ட்ரெஸ் பஸ்டர். தவிர, பயணம் செய்றது, புத்தகம் படிக்கிறது குடும்பத்தினருடன் நேரம் செலவிடுறதுன்னு நானும் யதார்த்தமான மனுஷியாகத்தான் வாழ்றேன். நடிப்பு என் தொழில். அதைத் தவிர்த்துட்டுப் பாருங்க. நானும் உங்களில் ஒருத்திதான்!" - இனிமையாகவும் எளிமையாகவும் உரையாடலைத் தொடங்குகிறார், மஞ்சு வாரியர். மலையாள சினிமாவில் கலக்கிக்கொண்டிருக்கும் தமிழ்ப் பெண் மஞ்சு, 'அசுரன்' படத்தில் அசுரத்தனமான நடிப்பைத் தந்திருக்கிறார். விரிவான பேட்டியை படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2qarJon

முதல் படமான 'சாக்‌ஷ்ய'த்தில் நடிக்கும்போது உங்க உணர்வு எப்படி இருந்தது?

"அப்போ சினிமாவைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது. ஆனா, நடிக்கப் பயப்படலை. அந்தப் படம் ரிலீஸாகி தியேட்டரில் பார்த்தப்போ, என் நடிப்பு எனக்குப் பிடிக்கலை. 'இன்னும் நல்லா நடிச்சிருக்கணும்'னு அது பத்தியே பல நேரங்களிலும் யோசிச்சுக்கிட்டே இருந்தேன்.

தமிழ் மக்கள், தமிழ்ப் பெண்களின் செயல்பாடுகளைத் தெரிஞ்சுப்பேன். 'அசுரன்' படத்தின் பெரும்பாலான காட்சிகளைக் கோவில்பட்டியில் படமாக்கினோம்

நடிப்பில் நான் செய்த தவறுகளைக் கண்டறிந்து, அடுத்தடுத்த படங்களில் சரி செய்துக்கிட்டேன். இப்போவரை என் படங்களைப் பார்த்து சந்தோஷப்படும் அதேவேளையில், என் நடிப்பில் சில குறைகளைக் கண்டுபிடிச்சுக்கிட்டேதான் இருப்பேன். 100 சதவிகிதம் சிறப்பா நடிச்சுட்டோம் என்ற உணர்வு இப்போதுவரை எனக்கு வரலை. அந்த உணர்வு, இந்த ஆயுள் முடிவதற்குள் கிடைச்சுடும்னு நம்புறேன். அதற்காக வாழ்நாள் முழுக்க நடிக்க ஆசைப்படறேன்."

'அசுரன்' படத்தில் நடித்த அனுபவம்...

"இந்தப் படம் பூமணி சார் எழுதிய 'வெக்கை' நாவலை அடிப்படையா வெச்சு எடுக்கப்பட்டிருக்கு. அதனால், 'அந்த நாவலை நான் படிக்கணுமா... இந்தப் படத்துக்காக எனக்கு ஏதாவது ரெஃபரன்ஸ் தேவைப்படுமா'ன்னு ஷூட்டிங் தொடங்குறதுக்கு முன்னாடி, இயக்குநர் வெற்றி மாறன் சார்கிட்ட கேட்டேன். அவர், 'எதுவும் வேண்டாம். இயல்பா வாங்க. தனுஷ்கிட்டயும் 'வெக்கை' நாவலைப் படிக்க வேண்டாம்னுதான் சொல்லியிருக்கேன்'னு சொன்னார். நான் இயக்குநர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்கிற ஆர்டிஸ்ட். அதனால், இந்தப் படத்துக்காக எனக்கு எந்த முன்தயாரிப்பும் தேவைப்படலை. நான் பிறந்துவளர்ந்த நாகர்கோவில் உட்பட தமிழ்நாட்டின் பல ஊர்களுக்கு அவ்வப்போது வருவேன். அப்போதெல்லாம் தமிழ் மக்கள், தமிழ்ப் பெண்களின் செயல்பாடுகளைத் தெரிஞ்சுப்பேன். 'அசுரன்' படத்தின் பெரும்பாலான காட்சிகளைக் கோவில்பட்டியில் படமாக்கினோம். அந்த ஊர் பெண்களின் நடை, உடை, பாவனைகளைப் பார்த்தும், நேரடியா பேசியும் தெரிஞ்சுக்கிட்டேன். இதெல்லாம் என் நடிப்புக்கு உதவுச்சு."

மஞ்சு வாரியார்
மஞ்சு வாரியார்

பர்சனல் பக்கங்கள்...

"அப்பா போன வருஷம் இறந்துட்டார். அம்மா, ஓர் அண்ணன் மற்றும் அவரின் குடும்பத்தினர்தான் எனக்கான உறவுகள். நான் கிளாஸிக்கல் டான்ஸர். ரிகர்சல், நிகழ்ச்சியில் நடனமாடுறதுன்னு நடனத்துக்கும் போதுமான நேரத்தை ஒதுக்குவேன். சும்மா இருக்கிறதுகூட எனக்குப் பிடிக்கும். என்ன நடந்தாலும் அதற்காக வருத்தப்பட்டு, கலங்கி உட்காரமாட்டேன். நடப்பதெல்லாம் நன்மைக்கேன்னு நம்புகிறவள் நான். இதையே என் பலமா நினைக்கிறேன். என் வாழ்க்கையில நகைச்சுவை முக்கிய பங்கு வகிக்குது. யாராச்சும் காமெடியா பேசினா, என்னை மறந்து ரசிப்பேன். மத்தபடி, மக்களிடமிருந்து கிடைக்கும் அன்பு மட்டுமே என்னை இயக்கிட்டிருக்கு."

> விரிவான பேட்டியை அவள் விகடன் இதழில் வாசிக்க > எதுக்கும் கலங்கி உட்கார மாட்டேன்! https://www.vikatan.com/news/cinema/exclusive-interview-with-actress-manju-warrier

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2MuIi5Z |