Published:Updated:

``ஜெயலலிதா இல்லாததால, அவங்க அட்ராசிட்டி அதிகமாகிடுச்சு!"- யாரைச் சொல்கிறார் மீரா மிதுன்?

நடிகை மீரா மிதுன்

நடிகை மீரா மிதுன் பேட்டி!

``ஜெயலலிதா இல்லாததால, அவங்க அட்ராசிட்டி அதிகமாகிடுச்சு!"- யாரைச் சொல்கிறார் மீரா மிதுன்?

நடிகை மீரா மிதுன் பேட்டி!

Published:Updated:
நடிகை மீரா மிதுன்

மாடலிங், சினிமா என இயங்கிக்கொண்டிருந்தாலும் பெரும்பாலான மக்களுக்கு மீரா மிதுனைத் தெரிந்தது, பிக் பாஸ் நிகழ்ச்சியாலும் அதன் பின் நடந்த சர்ச்சையாலும்தான். தான் நடித்த, நடிக்கவிருந்த படங்களிலிருந்து தன்னை நீக்கிவிட்டதாகச் சொன்னவர், அடுத்தடுத்து வீடியோவையும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். கடந்த சில நாள்களாக கிளாமரான புகைப்படங்கள், புகைபிடிக்கும் வீடியோக்கள் என அப்லோடு செய்துகொண்டேயிருக்கிறார். `இவருக்கு டிப்ரஷன், உடனடியாகக் கவனிக்க வேண்டும்' என்றெல்லாம் சோஷியல் மீடியாக்களில் அட்வைஸ்கள் பறக்கின்றன. உண்மையிலேயே என்னதான் பிரச்னை மீரா மிதுனுக்கு? போன் அடித்தேன்.

போன் எடுக்கவில்லை. வாட்ஸ்அப்பில் `நான் விகடன் நிருபர்; உங்களிடம் பேசவேண்டும்' என மெசேஜ் அனுப்பினேன். ``உங்களை விகடன் நிருபர் என எப்படி நம்புவது... உங்களுடைய ஐடி கார்டை அனுப்புங்கள்'' என்றார். நான், என்னுடைய விகடன் இணையதள புரொஃபைல் பக்க லிங்க்கை அனுப்பினேன். மீண்டும் நம்பாமல், ``உங்கள் அலுவலகத்தில் உங்களுக்குக் கொடுத்த ஐடி கார்டை எனக்கு போட்டோ எடுத்து அனுப்புங்கள்" என்றார். அனுப்பினேன். பேசினார்... பேசினார்... பேசிக்கொண்டே இருந்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் போறதுக்கு முன்னாடியே `நம்ம வீட்டுப்பிள்ளை' படத்துல கமிட்டாகியிருந்தேன். அந்தப் படத்துல என்னை நடிக்கக் கூப்பிடும்போதே எனக்கு விருப்பமில்லை. காரணம், பெரிய ஹீரோக்களுடைய படங்கள்ல ரொம்ப சின்ன ரோல்ல வர்றதுல எனக்கு உடன்பாடில்லை. ஆனா, அவங்கதான் `இது ரொம்ப ஸ்ட்ராங்கான கேரக்டர். சமுத்திரக்கனி சாருடைய மனைவி கேரக்டர். அதாவது, அர்ச்சனா மேடமுடைய சின்ன வயசு போர்ஷன். ஒரு பாட்டு எல்லாம் இருக்கு. இந்தப் படம் நல்லா பேசப்படும்'னு நம்பிக்கையா பேசுனாங்க. அதனாலதான் நான் இந்தப் படத்துல நடிக்க ஒத்துக்கிட்டேன். மதுரையில 10 நாள் இந்தப் படதுக்காக நடிச்சுக் கொடுத்துட்டுதான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் போனேன். பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது, அந்த நிகழ்ச்சியை முடிச்சுட்டு வெளியே வரும்போது, எனக்குப் பிடிக்காத சிலர் என் பெயரைக் கெடுத்துட்டிருந்தாங்க.

நடிகை மீரா மிதுன்
நடிகை மீரா மிதுன்

எதுக்காக ஒருத்தர் மேல இவ்ளோ பழி போடுறாங்கன்னு தமிழக மக்களும் சினிமாத்துறையும் யோசிச்சிருக்கணும். ஆனா, இந்த சோஷியல் மீடியா அதைப் பெரிசாக்க ஆரம்பிச்சது. நான் குற்றவாளினா, சட்டம் இந்நேரம் என்னைக் கைதுபண்ணி தண்டனை கொடுத்திருக்கணும். தமிழ்ப் பொண்ணுங்க முன்னேறணும்னு உதவிதான் பண்ணேன். ஆனா, நான் ஏமாத்திட்டேன்னு சொல்லிட்டாங்க. இதுவே சதி-ன்னுதான் நினைக்கிறேன். நான் முன்னுக்குக் கொண்டு வரணும்னு நினைச்ச பொண்ணுங்களே என்னைத் தப்பா பேசுனாங்க. நான் ஆளாக்குன பத்து தமிழ் பொண்ணுங்களே எனக்கு எதிரா திரும்பிட்டாங்க. இதெல்லாம் போய்க்கிட்டிருக்கும்போதுதான், படத்துல இருந்து என்னைத் தூக்கிட்டாங்கன்னு தெரிஞ்சது. இயக்குநர்கிட்ட இருந்தும் சரியான பதில் வரலை. இதை மக்களுக்கு தெரியப்படுத்தணும்னுதான் ட்வீட் பண்ணேன். தன்னைவிட சாதிச்ச, சர்வதேச அளவில் பிரபலமான பொண்ணை அவங்களால ஏத்துக்க முடியலை. பிக் பாஸ்ல எனக்குக் கிடைச்ச புகழ்னால எனக்காக ஒரு கூட்டம் படம் பார்க்க வந்திருக்கும். ஆனா, தப்பு பண்ணிட்டாங்க. இப்படி ஒரு விஷயம் நடந்தா, ராசி இல்லாத நடிகைனு முடிவு பண்ணிடுவாங்க. அதனால இதெல்லாம் பிளான் பண்ணித்தான் பண்ணியிருக்காங்கன்னு எனக்குத் தெரியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு பொண்ணு மேல பொய்யான வழக்கு இருந்தாலும் அதை உண்மையாதான் நினைக்கிறாங்க. போலீஸ் எப்படி பொய்யான வழக்கை எடுக்கலாம்? அதுக்குத்தான் சென்னை போலீஸைத் திட்டி ட்வீட் பண்ணேன். ஜெயலலிதா மேடம் இருந்திருந்தா எனக்கு இந்த நிலைமை இருந்திருக்குமா? அவங்க இறந்ததுக்கு பிறகு, எல்லா இடங்கள்லயும் ஆண்கள் அவங்க இஷ்டத்துக்கு ஆடுறாங்க. இதைக் கேட்க யாருமில்லை. ஒரு செலிபிரிட்டியான எனக்கே இப்படினா சாதாரண பெண்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும்?

நடிகை மீரா மிதுன்
நடிகை மீரா மிதுன்

அடுத்து, `அக்னிச் சிறகுகள்' படத்துக்கு `உயரமான, ஃப்ளெக்‌ஸிபிளான பொண்ணுதான் வேணும். அதனாலதான், மீரா மிதுனைத் தேர்ந்தெடுத்தோம்'னு அந்தப் படத்துடைய இயக்குநர் நவீனே பேட்டி கொடுத்திருந்தார். ஆனா, திடீர்னு என்கிட்ட சொல்லாம அக்‌ஷரா ஹாசனை கூட்டிக்கிட்டு ஷூட்டிங்க்காக ரஷ்யா கிளம்பிட்டாங்க. இப்போ, 5 படங்கள் என் கைவசம் வெச்சிருக்கேன். இதைக் கெடுத்தாலும் இன்னும் 50 பட வாய்ப்புகள் எனக்கு வரும்.

`கடாரம் கொண்டான்' படத்துல அக்‌ஷராகூட நானும் நடிக்கிறதா இருந்தது. அதுக்காக மூணு மாசம் கால்ஷீட் கேட்டிருந்தாங்க. இந்தப் படம் முடியுறவரை எந்தப் படத்துலேயும் நடிக்கக்கூடாதுனு சொல்லியிருந்தாங்க. `இந்தப் படத்துடைய ஷூட்டிங்க்கு நான் கரெக்டா வந்திடுறேன். அதுக்காக மத்த படத்துல நடிக்கக்கூடாதுனு சொல்றது என்ன நியாயம்?'னு கேள்வி கேட்டதுக்கு, என்னை அந்தப் படத்துல இருந்தே தூக்கிட்டாங்க.

நடிகை மீரா மிதுன்
நடிகை மீரா மிதுன்

இப்படியெல்லாம் நடக்குறதுனாலதான் மும்பைக்குப் போயிட்டேன். மும்பை எனக்கு இரண்டாம் வீடு மாதிரி. ஃபேஷன் துறையில இருக்கிறதுனால எனக்கு மும்பை பத்தி நல்லாவே தெரியும். நான் தமிழ்நாட்டுல சாதிக்கணும்னு நினைக்கிறேன். ஆனா, மத்த மாநிலங்கள்ல இருக்குற ஹீரோயின்களுடைய ஆதிக்கம்தான் கோலிவுட்ல இருக்கு. அதனால, தமிழர்களுக்கு வாய்ப்பில்லாமல் போகுது. நான் நடிச்ச முதல் ரெண்டு படங்களுக்கு, தமிழ்ப் பொண்ணு... அவளே டப்பிங் பேசுறானு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. ஆனா, அதைக் கெடுக்க சிலர் இருக்காங்க. ஒருத்தருடைய வெற்றி ஆண்டவனால நிர்ணயக்கப்பட்டதுனு நான் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இருந்தேன். ஆனா, கடைசியா எனக்கு நடந்த விஷயங்களால ஒரு வருஷம் வீணாகிடுச்சு. தவிர, எனக்கு நிறைய மிரட்டல் கால்கள் வருது. ஆசிட் அடிச்சிருவேன்னு சொல்றாங்க. 500 ரூபாய்க்கு ஆசிட் வாங்கி என் முகத்துல வீசிட்டு போயிடுவாங்க, மீடியா ரெண்டு நாள் பேசும். அதுக்குப் பிறகு என் நிலைமை என்ன? அதனால, தமிழ்நாட்ல சுதந்திரமா இருக்க முடியலை. அதான் மும்பை வந்துட்டேன்.

தமிழ்நாடு மாதிரி ரெண்டு ஹீரோயின்தான் எல்லா படத்துலயும் இருப்பாங்க. அவங்களுக்குத்தான் மார்கெட்னு இங்கே இல்லை. பாலிவுட்ல ஏகப்பட்ட ஹீரோயின்கள் சக்சஸ்ஃபுல்லா இருக்காங்க. தமிழ்நாட்டுல சரியான லுக்கே இல்லாதவங்கதான் எல்லா படத்திலும் ஹீரோயினா நடிச்சுக்கிட்டிருக்காங்க. இது என்ன லாஜிக்னு தெரியலை. தமிழ்நாட்டுல நாலு பேரை சந்தோஷப்படுத்தினா ஈஸியா ஹீரோயின் ஆகிடலாம்னு நினைக்கிறேன். நான் அப்படி பண்ண மாட்டேன். என்னை யாராலயும் தொடமுடியலைங்கிறதே இங்க பல பேருக்கு பொறாமை.

நடிகை மீரா மிதுன்
நடிகை மீரா மிதுன்

எனக்கு ஏன் இவ்ளோ பிரச்னை கொடுக்கிறாங்கன்னா, ஒரு ஹீரோவைவிட நான் ஃபேமஸா இருக்கேன். இதுவே என்னுடைய வெற்றியாதான் பார்க்கிறேன். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு என்னுடைய மார்க்கெட் அதிகமாகியிருக்கு. நான் தனியா நடிச்சாக்கூட அந்தப் படம் நல்லா ஓடும். வயசானவங்க எல்லாம் இன்னும் ஹீரோயினா நடிச்சுக்கிட்டிருக்காங்க. மக்கள் எத்தனை நாளுக்குத்தான் அவங்களையே பார்த்திட்டிருப்பாங்க? அடுத்தவங்களுக்கு வழிவிடுங்க. ஏன் ஶ்ரீதேவி கோலிவுட்டை விட்டுட்டு பாலிவுட் போனாங்க?

பிரியங்கா சோப்ரா தமிழ்ல ஒரு படம் பண்ணும்போது, அவ்ளோ நெகட்டிவ் விமர்சனங்கள் வந்துச்சு. ஆனா, அவங்க இப்போ பாலிவுட், ஹாலிவுட்னு கலக்கிட்டிருக்காங்க. அழகிப்போட்டியில டைட்டில் ஜெயிக்கிறவங்களுக்கு நல்ல புகழ் இருக்கு. அதை ஹீரோக்களால ஏத்துக்க முடியலையோ என்னவோ! எத்தனையோ பேர் கோலிவுட்டுக்கு வரணும்னு காத்துக்கிட்டிருக்காங்க. நாலு பேர் மட்டும் கோலிவுட்ல ஆதிக்கம் செலுத்திக்கிட்டிருந்தா, மத்த மொழி சினிமாக்களுக்கு நிகரா எப்படி கோலிவுட் வளரும்? ஆனா, பாலிவுட்ல இப்போ வந்த எத்தனையோ நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கானுக்கு நிகரான புகழ்ல இருக்காங்க தெரியுமா? காரணம், அந்த ஊர்ல அவங்க வளர்றதுக்கு வழி விடுறதுதான்.

நடிகை மீரா மிதுன்
நடிகை மீரா மிதுன்

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் சொல்றேன். விரைவில் எனக்கு கல்யாணம். நான் கல்யாணம் பண்ணிக்கப்போற அந்த நபர் யாருனு கூடிய சீக்கிரம் சொல்றேன். கல்யாணம் என் கரியரை எந்த விதத்திலேயும் பாதிக்காது. தமிழ் சினிமாவுல முன்னணி ஹீரோயின்களுக்கு எந்தளவுக்கு புகழ் இருக்கோ அது எனக்கு கிடைச்சிடுச்சு. அதனால, கல்யாணம் பண்ணிக்கிட்டு மத்த மொழியில கவனம் செலுத்தலாம்னு இருக்கேன். நான் கல்யாணம் பண்ணிக்கப் போற நபரும் ஒரு செலிபிரிட்டிதான். என் மேல யார் எவ்ளோ குறை சொன்னாலும், என்னை நம்பி, என்னைப் புரிஞ்சுக்கிட்டு கல்யாணம் பண்ணிக்கப் போற அவருடைய தைரியத்துக்கு என் சல்யூட். அவர் யாருனு உங்க எல்லோருக்கும் சீக்கிரமே தெரியவரும்" என்று சஸ்பென்ஸோடு முடித்தார் மீரா மிதுன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism