Published:Updated:

``அந்த ஒரு சீனை மட்டும் பார்த்து என்னைத் தப்பா புரிஞ்சிகிட்டாங்க!" - மிருணாளினி

மிருணாளினி

மிருணாளினியின் சினிமா அனுபவத்தைப் பற்றியும் அவரது க்வாரன்டீன் நாள்களைப் பற்றியும் அவரிடம் பேசினோம்.

``அந்த ஒரு சீனை மட்டும் பார்த்து என்னைத் தப்பா புரிஞ்சிகிட்டாங்க!" - மிருணாளினி

மிருணாளினியின் சினிமா அனுபவத்தைப் பற்றியும் அவரது க்வாரன்டீன் நாள்களைப் பற்றியும் அவரிடம் பேசினோம்.

Published:Updated:
மிருணாளினி

`சூப்பர் டீலக்ஸ்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், `டப்ஸ்மாஷ்' மிருணாளினி. மொபைல் ஸ்கீரினுக்கு முன்பாக மட்டுமே நடித்துக் கொண்டிருந்தவர், வெள்ளித்திரைக்கு வந்தபின் பல படங்களில் நடித்திருக்கிறார். அவரின் சினிமா அனுபவத்தைப் பற்றியும் அவரது க்வாரன்டீன் நாள்களைப் பற்றியும் அவரிடம் பேசினோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``உங்களுக்கு இந்த க்வாரன்டீன் நாள்கள் எப்படி இருக்கு?"

மிருணாளினி
மிருணாளினி

``ஜாலியா இருந்தாலும் நிறைய விஷயங்களை மிஸ் பண்றேன். நான் பாண்டிச்சேரியில இருக்கிறதால, தினமும் ஒரு முறையாச்சும் பீச்சுக்குப் போயிட்டு வந்திடுவேன்; அடிக்கடி வெளியில சுத்துவேன். ஆனா, இப்ப அதெல்லாம் முடியல. கடைக்குப் போயிட்டு வந்தாலே, `உடனே குளி’னு நோயாளியை ட்ரீட் பண்ற மாதிரி பண்றாங்க. அதுனால கடைக்குப் போகவும் கடுப்பா இருக்கு.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``இந்த க்வாரன்டீன் நாள்களில் உங்களது ஒரு நாள் எப்படி இருக்கும்?"

மிருணாளினி
மிருணாளினி

``கிட்டத்தட்ட ஒரு மாசமா ஒரு சில விஷயங்களை மட்டும்தான் பண்ணிட்டே இருக்கேன். காலையில எழுந்திருச்சதும் வொர்க் அவுட் பண்ணுவேன். லாக் டௌன் அறிவிச்சதும், `அய்யய்யோ ஜிம்மெல்லாம் இருக்காதே; எப்படி வொர்க் அவுட் பண்றது’னு பயந்தேன். ஆனா, யூடியூப்பில் ஹோம் வொர்க் அவுட்க்கு எக்கச்சக்க வீடியோக்கள் இருக்கு. அதைப் பார்த்து வொர்க் அவுட் பண்றதே நல்ல யூஸ்ஃபுல்லா இருக்கு. பாட்டிக்கு சமையல்ல கொஞ்சம் ஹெல்ப் பண்ணுவேன். அப்புறம் எங்க வீட்டுல ஒரு குட்டிப் பொண்ணு இருக்கா. அதிக நேரம் அவகூடதான் விளையாடிட்டு இருப்பேன். எதாவது படம் பார்ப்பேன். இதையே ஒரு மாசமா பண்ணி போர் அடிக்குது. அடுத்த ஒரு மாசத்துக்கும் இதையேதான் பண்ணணும் போல.’’

`` `ஜிகர்தண்டா’ படத்தோட தெலுங்கு ரீமேக்கில் நடிச்சிருந்தீங்க; அந்தப் படத்துக்குக் கிடைச்ச ரெஸ்பான்ஸ் எப்படி இருந்தது?"

மிருணாளினி
மிருணாளினி

``படம் பார்த்த தெலுங்கு ஆடியன்ஸுக்கு என் கேரக்டரும் என் நடிப்பும் ரொம்ப பிடிச்சிருந்ததுனு சொன்னாங்க. படம் பார்க்காத சில பேர் படத்தோட ஒரு சீனை மட்டும் பார்த்துட்டு, தப்பா புரிஞ்சுகிட்டாங்க. படத்தோட ஓப்பனிங்ல என்னைப் பொண்ணு பார்க்க வர மாப்பிள்ளையை, அவர் வாயாலேயே இந்தப் பொண்ணு பிடிக்கலைனு சொல்ல வைக்கிற மாதிரி ஒரு சீன் இருக்கு. அதனால மாப்பிள்ளையை ஓட வைக்கிற மாதிரி, கிளாமரா டான்ஸ் ஆடுவேன். அந்த ஒரு சீனை மட்டும் டிவியிலும், யூடியூப்பிலும் பார்த்துட்டு, `இந்தப் பொண்ணு கிளாமரா நடிச்சிருக்கு’னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா, அது என்னை எந்த விதத்திலும் பாதிக்கல. ஏன்னா, நான் எப்படி நடிச்சேன்னு எனக்குத் தெரியும்.’’

``தமிழில் என்னென்ன படங்கள் பண்ணிட்டு இருக்கீங்க?"

`` 'எம்.ஜி.ஆர் மகன்’, `கோப்ரா’ ரெண்டு படங்கள் பண்ணிட்டு இருக்கேன். `எம்.ஜி.ஆர் மகன்’ படத்தோட டீம் ரொம்பவே பெருசு. பொன்ராம் சாரோட படங்கள் எப்படி இருக்குமோ அதே மாதிரிதான், அவரோட செட்டும். எப்பவுமே கலகலனு இருக்கும். பட வேலைகள் முடிஞ்சு, ரிலீஸுக்கு ரெடியா இருக்கு. இந்த லாக் டௌன் இல்லைன்னா, படம் இந்நேரம் ரிலீஸாகியிருக்கும். இந்தப் படத்தோட ரிலீஸுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்."

மிருணாளினி
மிருணாளினி

``அடுத்து `கோப்ரா’. இது எனக்கு ட்ரீம் கம் ட்ரூ மொமென்ட்தான். `சாமி’ படத்துல இருந்தே எனக்கு விக்ரம் சாரை ரொம்பப் பிடிக்கும். இப்ப அவர்கூட நடிக்கிறேன்னு நினைக்கும் போது என்னாலே நம்ப முடியலை. செட்ல அவ்வளவு ஃப்ரெண்ட்லியா இருப்பார். பெரிய ஸ்டார் வேல்யூ இருந்தாலும், ரொம்ப ஈசியா பழகக்கூடிய ஆள். ஒவ்வொரு சீனுக்கும் அவர் போடுற உழைப்பு நம்மளை பிரமிக்க வைக்கும். அந்தளவுக்கு மெனக்கெடுறார். விக்ரம் சாரைப் பற்றி இப்படி நிறைய விஷயங்கள் சொல்லிட்டே போகலாம். இன்னும் `கோப்ரா’ படத்தோட ஷூட்டிங் முடியல.’’

``இந்த க்வாரன்டீன் நாள்களில் உங்ககிட்ட இருந்து நிறைய டிக் டாக் வீடியோஸ் வரும்னு எதிர்பார்த்தோம்; ஏன் டிக் டாக் பண்றதில்லை?"

மிருணாளினி
மிருணாளினி

``நான் எப்பவுமே டிக் டாக் பண்றப்போ மொபைல் ஸ்டாண்ட் யூஸ் பண்ணிதான் வீடியோ எடுப்பேன். ஏன்னா, ஒரு கையில போனை பிடிச்சுக்கிட்டே என்னால டிக் டாக் பண்ண முடியாது. நான் யூஸ் பண்ற அந்த மொபைல் ஸ்டாண்ட் என்னோட பெங்களூரு வீட்டுல இருக்கு. இப்போ நான் பாண்டிச்சேரியில பாட்டி வீட்டுல இருக்கிறதால, டிக் டாக் பண்ண முடியல. ஆனா, சீக்கிரமே அதுக்கு வேற ஒரு வழி பண்ணிட்டு, டிக் டாக் பண்ணணும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism