Published:Updated:

``சிவகார்த்தி அண்ணாவின் சப்போர்ட், யோகாவின் அன்பு.. வாழ்க்கை இப்ப நல்லாவே இருக்கு!’’ –`மைனா' நந்தினி

மைனா

``நாங்க நெருங்கிய நண்பர்கள். என் வாழ்க்கையின் ஏற்ற, இறக்கங்கள் எல்லாத்துலயும் யோகியோட துணை இருந்திருக்கு. அவர்கூட இருந்த நேரங்களில் சிரிச்சிக்கிட்டுதான் இருந்திருக்கேன். திருமண வாழ்க்கையும் நல்லாயிருக்கு.''

``சிவகார்த்தி அண்ணாவின் சப்போர்ட், யோகாவின் அன்பு.. வாழ்க்கை இப்ப நல்லாவே இருக்கு!’’ –`மைனா' நந்தினி

``நாங்க நெருங்கிய நண்பர்கள். என் வாழ்க்கையின் ஏற்ற, இறக்கங்கள் எல்லாத்துலயும் யோகியோட துணை இருந்திருக்கு. அவர்கூட இருந்த நேரங்களில் சிரிச்சிக்கிட்டுதான் இருந்திருக்கேன். திருமண வாழ்க்கையும் நல்லாயிருக்கு.''

Published:Updated:
மைனா

புதிதாக ஒரு வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார் சீரியல் நடிகை `மைனா' நந்தினி. மாப்பிள்ளை யோகேஸ்வரன். இந்த ஜோடியிடம் பேசினேன்.

``எங்களுக்குள்ள லவ் புரொப்போஸ்லாம் நடந்ததே கிடையாது. நந்தினியைப் பிடிக்கும். அவங்க காட்டுற அக்கறை எனக்குள்ளே ஏதோ ஓர் உணர்வை கடத்தியிருக்கு. இவங்ககிட்ட சொல்றதுக்கு முன்னாடி, `நந்தினியைக் கல்யாணம் பண்ண முடிவு பண்ணியிருக்கேன்'னு வீட்ல சொன்னேன். அவங்க வீட்டுல பேசுறதுக்குப் போனோம். விஷயத்தைச் சொன்னவுடனே நந்தினி அதிர்ச்சியா நின்னா. `எனக்கு ஒரு வருஷம் டைம் வேணும்'னு கேட்டாங்க. ஒரு வருஷம் முடிஞ்சதுக்கு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்'' என்கிறார் யோகேஸ்வரன்.

யோகேஸ்வரன்
யோகேஸ்வரன்

``ரெண்டு பேருமே ஒண்ணா நிறைய நேரம் செலவழிப்போம். ஒரே விஷயத்தைப் பத்தி யோசிப்போம். யோகி மாதிரியான பையனை மிஸ் பண்ண யாருக்கும் மனசு வராது. நிறைய கிஃப்ட்ஸ் கொடுத்துக்கிட்டே இருப்போம். நிறைய சர்ஸ்ப்ரைஸ் எங்களுக்குள்ளே எப்போதுமே இருந்துக்கிட்டே இருக்கும். என்கிட்ட இருந்த ப்ளஸைவிட மைனஸ்தான் எப்பவுமே யோகிக்கு முதலில் தெரியும். என்னோட கோபம், மனஅழுத்தம் எல்லாமே யோகிக்கு தெரியும். அதிகமா என்னை அழ வைக்க மாட்டார். கொஞ்சம் எமோஷனலா நான் இருந்தாலும் பக்கத்துல வந்து பேசுவார். அதனால என்னைப் பத்தின எல்லாத்தையும் புரிஞ்சிக்கிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டார்'' என்கிறார் நந்தினி.

``எப்பவும் போன்ல கேம்ஸ் விளையாடுவேன். அதைப் பார்த்தாலே நந்தினிக்கு கோபம் வரும். ஏதாவது முக்கியமான விஷயம் சொல்லிட்டு இருப்பா அதைக் கவனிக்கலைனா அவ்வளவுதான்... நிறைய வெப் சீரிஸ், ஹாலிவுட் படங்கள் நான் பார்த்திருப்பேன். அவங்களுக்கு அது புரியாது, பிடிக்காது. தியேட்டர்ல ஹாலிவுட் படம் பார்க்கக் கூப்பிட்டு போனாகூட தூங்கிருவா''னு யோகி சிரிக்க, நந்தினி தொடர்ந்தார்.

மைனா யோகேஷ்வரன்
மைனா யோகேஷ்வரன்

``இவர் மேல நான் ரொம்ப பொஸஸிவ். ஆனா, யோகி பொஸஸிவா இருக்குற மாதிரி எந்த ரியாக்‌ஷனும் அதிகமா காட்டிக்கமாட்டார். நான் அப்படியே நேரெதிர். அதிகமா சத்தம் போட்டு கூச்சல் போட்டுருவேன். இப்போ கொஞ்சம் அதை மாத்திக்கிட்டு வர்றேன். பொஸஸிவ்னால கோபப்பட்டு சண்டை போடக் கூடாதுனு முடிவு பண்ணியிருக்கேன்'' என்கிறார் நந்தினி.

``கல்யாணம் முடிஞ்சு ரெண்டு பேருமே ஷூட்டிங் பிஸினால ஓடிக்கிட்டே இருக்கோம். ரெண்டு பேருக்குமே எங்களுடைய வேலை ரொம்பப் பிடிக்கும். அதனால வேலைக்குதான் முதல் முக்கியத்துவம் கொடுக்குறோம். இன்னும் ஹனிமூன்கூட போகல. எனக்கு நந்தினி கேரியர் ரொம்ப முக்கியம். அவங்களுடைய `சரவணன் மீனாட்சி' சீரியல் மைனா கேரக்டரை உடைக்குறளவுக்கு ஒரு கேரக்டர் அவங்க பண்ணனும்னு ஆசை. என்னோட வாழ்க்கையில் நிறைய கஷ்டங்கள் இருந்திருக்கு. ஏதாவது ஒரு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா அப்படிங்கிற எதிர்பார்ப்புல ஒவ்வொரு டிவி சேனல் வாசலுக்கும் தேடிப் போயிருக்கேன். அப்போலாம் நந்தினிதான் ஒரே ஆறுதல். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணுன டான்ஸ் ஷோவுல ஃபைனல்ஸ் வரைக்கும் போயிட்டு ஜெயிக்க முடியல. அந்த நேரத்துல ரொம்ப மன அழுத்தத்துல இருப்பேன். அப்போலாம் நந்தினி பேசுன வார்த்தைகள்தான் இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கு'' என்ற யோகேஸ்வரனைத் தொடர்கிறார் நந்தினி.

``சிவகார்த்தி அண்ணாவின் சப்போர்ட், யோகாவின் அன்பு.. வாழ்க்கை இப்ப நல்லாவே இருக்கு!’’ –`மைனா' நந்தினி

``ரெண்டு பேருமே ஒரே துறைன்றதால எங்களுடைய வேலை பத்தி எங்களுக்கு நல்லாவே தெரியும். சினிமாவுல எனக்கு எப்பவும் சிவகார்த்திகேயன் அண்ணா சப்போர்ட் பண்ணுவார். அவரோட நடிக்கிறப்போ தங்கச்சியா ஃபீல் பண்ணித்தான் நடிச்சிருக்கேன். கூட்டத்துல ஒரு ஆளாதான் என்னோட கேரியர் ஆரம்பமாச்சு. அப்போல இருந்து இப்போ வரைக்கும் அவர் உறுதுணையா இருந்திருக்கார். மத்தவங்களை உயர வெச்சுட்டு தானும் உயரணும்னு நினைக்குற நபர் சிவா அண்ணா. சூரி அண்ணாவுக்கும் எனக்கும் மதுரைதான் சொந்த ஊர். அவர் பேசுறப்போ ஊரோட மண்வாசனை வீசும். `எங்க வீட்டுப் பிள்ளை' டப்பிங்போது எந்த மாடுலேஷன்ல பேசுனா நல்லாயிருக்கும்னு சூரி அண்ணா சொல்லிக்கொடுத்தார். எங்க கல்யாணத்துக்கும் ரெண்டு பேரும் வாழ்த்துனாங்க. வாழ்க்கை இப்போ நிம்மதியா இருக்கு'' என்கிறார் நந்தினி யோகேஸ்வரன்.