Published:Updated:

``ராஜுமுருகன் சார் அரசியல் பத்தி கேட்கும்போது ஓடிடுவேன்; ஏன்னா?!" - `ஜிப்ஸி' நடாஷா 

நடாஷா

ராஜுமுருகன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் `ஜிப்ஸி' படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கும் நடிகை நடாஷாவிடம் படம் குறித்து பேசினோம்.

``ராஜுமுருகன் சார் அரசியல் பத்தி கேட்கும்போது ஓடிடுவேன்; ஏன்னா?!" - `ஜிப்ஸி' நடாஷா 

ராஜுமுருகன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் `ஜிப்ஸி' படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கும் நடிகை நடாஷாவிடம் படம் குறித்து பேசினோம்.

Published:Updated:
நடாஷா

``என் சொந்த ஊர் மணாலி. மெட்ரோ சிட்டில இருக்கிற பசங்களுக்கு வர்ற வாய்ப்புகள் எங்களுக்குக் கொஞ்சம் தாமதமாதான் வரும். என்னோட முதல் வெற்றிக்கு ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கேன். சின்ன வயசுல இருந்தே சினிமால நடிக்கணும்னு ஆசை இருந்தது. ஆனா, வீட்டுல விடல. சிவில் இன்ஜினீயர் முடிச்சதுக்கப்புறம் பிடிச்சதைப் பண்ணிக்கனு சொல்லிட்டாங்க. அதுக்காகத்தான் கஷ்டப்பட்டு டிகிரி வாங்கினேன். படத்துல நடிக்கிறதுக்கு யார்கிட்ட கேட்கணும், எங்க ஆடிஷன் போகணும்னு எல்லாம் தெரியாது. அந்தச் சமயம் சில மாடலிங்ல சேர்ந்தேன். ஆனா, என்னோட வருங்காலம் மாடலிங் இல்லைன்னு மட்டும் உறுதியா இருந்தேன். 2015-ல் `மிஸ் இமாசல்' பட்டம் வாங்கினேன். 2016-ல் ஃபெமினா மிஸ் இந்தியாவுல டாப் பத்துப் பேர்ல ஒரு ஆளா வந்தேன். இப்படி வாழ்க்கைல நிறைய நல்ல விஷயங்கள் நடந்திட்டிருக்கும்போதுதான் `ஜிப்ஸி' பட வாய்ப்பு வந்தது."

ஜிப்ஸி
ஜிப்ஸி
`

``மும்பைல இருந்தப்ப என்னோட மேனேஜர் மூலமா எனக்குப் போன் பண்ணி `ஜிப்ஸி' படத்தோட ஆடிஷன் பத்திச் சொன்னாங்க. ராஜு முருகன் சாரோட `குக்கூ', `ஜோக்கர்' ரெண்டு படங்களுமே பார்த்திருக்கேன். அதனால சாரோட பிலிம் மேக்கிங் பத்தி நல்லாவே தெரியும். மும்பைல நடந்த ஆடிஷனுக்கு அப்புறம் சென்னைல நடந்த லுக் டெஸ்ட்டுக்கு வரச் சொல்லியிருந்தாங்க. ஒரு வழியா எல்லா டெஸ்ட்டும் முடிஞ்சதுக்கப்புறம் படத்தோட ஹீரோயினா கமிட்டாகிட்டேன். என்னோட முதல் படமே நல்ல படமா அமைஞ்சதுல ரொம்ப சந்தோஷம். அதுக்கு முன்னாடியே ஒரு படத்துல கமிட்டானேன், ஆனா கைகூடல."

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``ஷூட்டிங் ஸ்பாட்ல ராஜுமுருகன் சார் ரொம்பவே ஸ்ட்ரிக்ட். என்ன வேணும்ங்கிறதுல ரொம்பத் தெளிவா இருப்பார். இவரோட படத்துல நடிச்சதை ஒரு கனவு மாதிரி நினைக்கிறேன். ஹீரோயின்கிறதைத் தாண்டி என்னை நல்லா பார்த்துக்கிட்டாங்க. ஷாட் முடிச்சதுக்கப்புறம் நிறைய விஷயங்கள் பத்தி ரெண்டு பேரும் பேசுவோம். அரசியல் பத்தி நிறைய கேட்பார்; எனக்கு பதில் சொல்லத் தெரியாது. இதுக்காக தினமும் அரசியல்ல என்ன நடக்குதுனு நியூஸ் பேப்பர்ல படிச்சுத் தெரிஞ்சுப்பேன். ஆனா, அரசியல் பேசுற அளவு எனக்கு ஞானம் இன்னும் வரல. `அரசியல் பத்தி தப்பான ஆள்கிட்ட கேட்குறீங்க சார்'னு சொல்லி ஓடிடுவேன். ஆனா, இந்தப் படத்தைப் பத்தி சார் சொன்னப்ப கதையில இருக்குற அரசியல் புரிஞ்சது. கதைக் கரு, நிகழ்வுகள் எல்லாமே சார் தெளிவா சொல்லிக்கொடுத்தார்."

``ராஜுமுருகன் சார் அரசியல் பத்தி கேட்கும்போது ஓடிடுவேன்; ஏன்னா?!" - `ஜிப்ஸி' நடாஷா 

``ஜீவாவுக்கு ஜோடியா நடிச்சது சந்தோஷம். இவர் நடிச்ச `நண்பன்', `கோ' படங்களைப் பார்த்திருக்கேன். ஸ்பாட்ல தமிழ் வசனங்கள் பேச ஜீவா ஹெல்ப் பண்ணுனார். நான் வடஇந்தியா பொண்ணு. படத்துல தென்னிந்தியாவைப் பூர்வீகமா கொண்ட முஸ்லிம் பொண்ணா நடிச்சிருப்பேன். வடந்தியா, தென்னிந்தியா பொண்ணுங்களுக்கு இடையில நிறைய வித்தியாசங்கள், வேறுபாடுகள் இருக்கும். பாடிலாங்குவேஜும் மொத்தமா வேற. அப்பா, அம்மாகிட்டகூட பேசத் தயங்குற பொண்ணு; ஸோ, என்னைத் திரையில வேற மாதிரி காட்டியிருக்கிறது சவாலாவே இருந்தது. இந்திய மொழில என்னோட முதல் படம் `ஜிப்ஸி'. அதனால, நல்லா நடிக்கணும்னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டே இருந்தேன். இப்ப ரிலீஸானதுக்கப்புறம் படத்துக்கு நல்ல விமர்சனம் வருது. எனக்குத் தங்கச்சியா நடிச்சிருந்த பஜீலாகிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டேன். அவங்க அடிப்படையான முஸ்லிம் பொண்ணுங்கிறதால பாடிலாங்குவேஜ்ல இருந்து எல்லாத்தையும் கவனிச்சேன். முக்கியமா முஸ்லிம் முறைப்படி தொழுகுறது எப்படின்னு கத்துக்கிட்டேன்."

``படத்துல எனக்கான போர்ஷனோட ஷூட், 90 நாள்கள் வரைக்கும் நடந்தது. ஏன்னா, நிறைய பயணங்கள் போக வேண்டி இருந்தது. ஒரு பாட்டு மட்டுமே 25 நாள்கள் வரைக்கும் ஷூட் பண்ணோம். லைவ் லொக்கேஷன்ல ஷூட் நடக்கணும்னு சார் ரொம்பப் பிடிவாதமா இருந்தார். காஷ்மீர், கேரளா, நாகூர், டெல்லி, ராஜஸ்தான், கோவானு நிறைய இடங்களுக்குப் போனோம்."

கமல்
கமல்

``படத்துக்காக கமல் சார்கிட்ட இருந்து பாராட்டு வாங்கினதைப் பெரிய பொக்கிஷமா நினைக்கிறேன். எனக்கு ரொம்பப் பிடிச்ச நடிகர் கமல் சார். அவரோட `விஸ்வரூபம்' படத்தை எத்தனை முறை பார்த்துருக்கேன்னுகூட எனக்குத் தெரியல. என்னோட நடிப்பை அவர் பாராட்டினதுல ரொம்ப மகிழ்ச்சி. அவர்கூட போட்டோ எடுத்துக்கிட்டப்ப சிலிர்த்துடுச்சு. இன்னும் என் வீட்டுல இருக்கவங்க படம் பார்க்கல. OTT-ல் ரிலீஸானதும் பார்த்துட்டு சொல்வாங்க. கூடிய சீக்கிரம் தமிழ்ல நல்ல படங்கள் பண்றதுக்காகக் காத்துக்கிட்டிருக்கேன்'' என்கிறார் நடிகை நடாஷா.