Published:Updated:

அஜித் இடத்தைப் பிடிக்கும் நிவேதா பெத்துராஜ்... கோலிவுட்டின் லேட்டஸ்ட் ரேஸிங் லேடி!

''2014–ல் Dodge Challenger–னு ஒரு ஸ்போர்ட்ஸ் காரை வாங்கினேன். துபாய்ல ஸ்போர்ட்ஸ் கார் வாங்கின ரெண்டாவது பொண்ணு நான்தான். இதுதான் என்னோட கனவுக் கார்.''

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சினிமா நடிகர்களில் அஜித்குமாருக்கு அடுத்து கார் ரேஸராக அவதாரம் எடுத்திருக்கிறார் நிவேதா பெத்துராஜ். தமிழில் ‘ஒரு நாள் கூத்து’ படத்தில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் பல்துறை ஆர்வம் கொண்டவர். கராத்தே உள்பட தற்காப்புக்கலைகள் கற்றுத்தேர்ந்திருக்கும் நிவேதாவின் லேட்டஸ்ட் அடிக்ஷன் கார் ரேஸிங்.

கோவை கரி மோட்டார்ஸ் ரேஸ் ட்ராக்கில் பயிற்சிகளில் இருந்தவரிம் பேசினேன்.

நிவேதா பெத்துராஜ்
நிவேதா பெத்துராஜ்
நிவேதா பெத்துராஜ்
நிவேதா பெத்துராஜ்

‘‘சின்ன வயசுல இருந்தே கார்கள்னா ரொம்ப பிடிக்கும். 8–வது படிக்கும்போது, எங்க பக்கத்து வீட்டுக்காரங்க ஒரு ஸ்போர்ட்ஸ் கார் வாங்கினாங்க! அப்போதிருந்தே ஸ்போர்ட்ஸ் கார் மேல செம ஆர்வம்! 2014–ல் Dodge Challenger–னு ஒரு ஸ்போர்ட்ஸ் காரை வாங்கினேன். துபாய்ல ஸ்போர்ட்ஸ் கார் வாங்கின ரெண்டாவது பொண்ணு நான்தான். இதுதான் என்னோட கனவுக் கார். இப்போதும் நான் அதை வெச்சிருக்கேன். துபாய்ல லெக்ஸஸ், ரோல்ஸ்ராய்ஸ், செவர்லேனு ஏகப்பட்ட கார் நிறுவனங்கள் கலந்துக்குற துபாய் மோட்டார் ஷோல நானும் கலந்துக்கிட்டு வேலையெல்லாம் பார்ப்பேன்.

நிவேதா பெத்துராஜ்
நிவேதா பெத்துராஜ்

ஒரு தடவை சென்னை இருங்காட்டுக்கோட்டை ட்ராக்ல ஒரு ரேஸை வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன். அடுத்து ஒரு பிஎம்டபிள்யூ காரை ட்ராக்கில் ஓட்டும் வாய்ப்பு கிடைச்சது. ஆஹா… செமையா இருக்கேனு எனக்குள்ள இருக்கிற ரேஸர் அப்போதான் விழிச்சிக்கிட்டா. அப்புறமென்ன, கோவையில் இருக்கிற `Momentum-School of Advance Racing’ அகாடமியில் சேர்ந்தேன். ஒவ்வொரு பயிற்சி வகுப்பிலேயும் நான் மட்டும்தான் பொண்ணா இருப்பேன். நான் எவ்வளவு தப்புப் பண்ணாலும் திரும்பத் திரும்ப சளைக்காம எனக்குப் பயிற்சி கொடுத்துக்கிட்டே இருந்தாங்க!

இப்போ கார் ரேஸுக்கான லெவல்–1 பயிற்சியை முடிச்சுட்டேன்! இதுதான் என்ட்ரி லெவல். நான் ஓட்டுறது 1,300 சிசி கேட்டகிரி கார். இப்போ நான் F1 ரேஸ் பார்த்துட்டுத்தான் இருக்கேன். பென்ஸைவிட ரெட்புல்தான் என்னோட ஃபேவரைட் டீம். கார் இன்ஜின்ல ஆரம்பிச்சு ரேஸர்ஸ் வரைக்கும் செமையா வொர்க் பண்ணியிருக்காங்க!’’ என்று டெக்னிக்கலாகப் பேசிய நிவேதாவின், லேப் டைமிங் 1.32 நிமிடங்கள். அதாவது, பல வளைவுகளுடன் 2.7 கிமீ நீளம் கொண்ட கோவை கரி மோட்டார் ஸ்பீடுவே ட்ராக்கை 1.32 விநாடிகளில் கடக்கிறார் நிவேதா. பயிற்சிக்கு முன்பு இது பல விநாடிகள் அதிகமாக இருந்ததாம். ட்ராக்கில் நிவேதாவின் டாப் ஸ்பீடு 160 கிமீ. ஆனால், தனது டாட்ஜ் காரில் 220 கிமீ வரை பறந்த அனுபவம் நிவேதாவுக்கு உண்டாம்.

நிவேதாவுக்கு கார் ரேஸில் மட்டும்தான் ஆர்வம்; பைக் ரேஸிங்கில் சுத்தமாக ஈடுபாடு இல்லையாம். ‘‘பைக் ஓட்டுறதுனா எனக்குப் பயம். கார்தான் சேஃப்ட்டி!’’ என்கிறார்.

1.37 விநாடி லேப் டைமிங்
1.37 விநாடி லேப் டைமிங்
நிவேதா பெத்துராஜ்
நிவேதா பெத்துராஜ்

‘‘ரேஸர் ஆகியாச்சு... ஒரு கார் ரேஸ் ஆக்‌ஷன் படத்துல எதிர்பார்க்கலாமா?’’

‘‘அய்யய்யோ... ‘டிக் டிக் டிக்’ படத்துலேயே ஷூட்டிங் அப்போ, நான் எவ்வளவு அடி வாங்கிட்டேன் தெரியுமா? அப்படிப் பண்றதா இருந்தா, முறையான பயிற்சியும் ரிகர்சலும் பண்ணிட்டுத்தான் பண்ணுவேன்!’’ எனும் நிவேதாவுக்குப் பிடித்த F1 ரேஸர் லூயிஸ் ஹாமிட்டனாம்.

லூயிஸ் ஹாமில்ட்டன்
லூயிஸ் ஹாமில்ட்டன்

‘‘7 டைம் வேர்ல்டு சாம்பியன்னா சும்மாவா... அதுக்காக மட்டும் இல்லை; அவர் கார் ஓட்டுற ஸ்டைலே எனக்கு ரொம்பப் பிடிக்கும். தமிழ்ல அவரைப் பத்தி ஒரு பயோபிக் பண்ண யாராச்சும் ரெடியா இருந்தா சொல்லுங்க. நானே லண்டனுக்குப் போய் அவரையே ஹீரோவா நடிக்கச் சொல்லிக் கேட்டு கால்ஷீட்கூட வாங்கிடுறேன். ஆனா, அதுல ஹீரோயின் நிச்சயமா நிவேதா பெத்துராஜ்தான்!’’ என்று சிரிக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு