Published:Updated:

``ரஜினி சாரை கலாய்க்கிறதுக்குனா யோகி பாபுவுக்கு...?!"- நிவேதா தாமஸ்

நிவேதா தாமஸ்

`தர்பார்' பொங்கலுக்கு கொண்டாட்டமாக தயாராகிக் கொண்டிருந்த நிவேதா தாமஸூடன் ஒரு பேட்டி...

Published:Updated:

``ரஜினி சாரை கலாய்க்கிறதுக்குனா யோகி பாபுவுக்கு...?!"- நிவேதா தாமஸ்

`தர்பார்' பொங்கலுக்கு கொண்டாட்டமாக தயாராகிக் கொண்டிருந்த நிவேதா தாமஸூடன் ஒரு பேட்டி...

நிவேதா தாமஸ்

கன்னத்தில் குழி விழும் சிரிப்பு, குழந்தைத்தனம் மாறாத முகம் என `மை டியர் பூதம்' கெளரியாகவே இன்னும் இருக்கிறார் நிவேதா தாமஸ். கமல், ரஜினி, மோகன்லாலின் செல்ல மகள். விஜய்யின் குறும்புத் தங்கை.

நிவேதா தாமஸ்
நிவேதா தாமஸ்

`தர்பார்' பொங்கலுக்கு கொண்டாட்டமாக தயாராகிக் கொண்டிருந்தவருடன் ஒரு பேட்டி...

படிப்பு, நடிப்பு ரெண்டையும் எப்படி சமாளிச்சீங்க?

நிவேதா தாமஸ்
நிவேதா தாமஸ்

``சின்ன வயசுல படிச்சிட்டு இருக்கும்போது நடிக்க வந்துட்டதால எனக்கு ரெண்டையும் சமாளிக்கறதுல எந்தக் கஷ்டமும் இல்லை. ஒரே நேரத்துல பல வேலைகள் செய்யற மல்டி டாஸ்கிங் என அப்பவே பழகிட்டேன். அப்படியே தட்டுத்தடுமாறி போன வருஷம்தான் காலேஜ்ல ஆர்க்கிடெக்சர் முடிச்சேன்."

ரஜினியைப் பார்த்த முதல் தருணம்?

நிவேதா தாமஸ்
நிவேதா தாமஸ்

`` `தர்பார்' ஷூட் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, ஏவி.எம் ஸ்டுடியோவில் போட்டோஷூட் நடந்துட்டு இருந்தது. அப்போதான் ரஜினி சாரைப் பார்த்தேன். அதுவும் ஆதித்யா அருணாசலம் கெட்-அப்ல! அதனாலோ என்னவோ, ரஜினி சார் ஒரு சூப்பர் ஸ்டார்ங்கிறதைத் தாண்டி, அவர் என் அப்பாவா மனசுல பதிஞ்சுட்டார். ஆமாம், அவர் என் அப்பா!"

ரஜினி, யோகிபாபு காம்பினேஷன்ல காமெடி எப்படி வந்திருக்கு?

நிவேதா தாமஸ்
நிவேதா தாமஸ்

```தர்பார்'ல மறக்க முடியாத அனுபவம்னா படத்துல வர காமெடி சீன்கள் ஷூட் பண்ண அனுபவம்தான். காமெடி சீன்கள் எடுக்கும்போது, ரஜினி சார்கிட்ட தனி எனர்ஜியைப் பார்க்கலாம். அவரைக் கலாய்க்கிற மாதிரி சீன்ஸ்லாம் வரும்போது யோகிபாபு ரொம்பத் தயங்கினார். ஆனா, ரஜினி சார் `அதெல்லாம் பார்க்காதீங்க. அங்க ஸ்கிரிப்ட்ல எழுதிருக்கு. நீ பண்ற கண்ணா'னு என்கரேஜ் பண்ணுவார். காமெடி சீன்ஸ்ல எங்ககூட ஜாலியா என்கேஜ் ஆகி அவரும் நிறைய ஆலோசனை சொல்லிட்டே இருப்பார். அதோட அவுட்புட் பார்க்கும்போது அடுத்த லெவல்ல இருக்கும்."

தமிழ்ல அதிக படங்கள் நடிக்காதது ஏன்?

நிவேதா தாமஸ்
நிவேதா தாமஸ்

``உண்மையைச் சொல்லனும்னா, `தர்பார்' டப்பிங்போது பயங்கர குஷியா இருந்தேன். ஏன்னா, `பாபநாசம்' படத்துக்கு அப்புறமா ரொம்ப வருஷம் கழிச்சு நான் தமிழ்ல வசனம் பேசி நடிக்கிறேன். அந்த அளவுக்கு தமிழ் படங்கள்ல நடிக்கறத மிஸ் பண்றேன். என் ரோலுக்கு முக்கியத்துவம் இருக்க கதைகள் எதுனாலும் நடிக்க தயார். ஹீரோயினா மட்டுந்தான் பண்ணுவேன், குறிப்பிட்ட மொழிகள்ல மட்டுந்தான் தொடர்ந்து படங்கள் பண்ணுவேன்னு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது."

ரஜினி, கமல், விஜய் இவங்ககிட்ட பிடிச்ச விஷயம்?

நிவேதா தாமஸ்
நிவேதா தாமஸ்

``ரஜினி சாருடைய காமெடி சென்ஸ் பிடிக்கும். காமெடி சீன்ஸ் ஷூட் பண்ணும்போது அவரும் பயங்கரமா குஷியாகி எங்களையும் ஜாலியாக்கிடுவார்.

கமல் சாரை முதன்முதலா `பாபநாசம்' படத்துக்காக பார்த்ததும் படத்துல என்னுடைய அப்பா கெட்டப்லதான். படம் நல்லா வரணும்ங்கிறதுக்காக அவர் காட்டுற சின்சியாரிட்டி ரொம்ப பிடிக்கும்.

விஜய் சார் கேமராவுக்குப் பின்னாடி ரொம்ப அமைதியானவர். ஆனா, கேமராவுக்கு முன்னாடி எப்படி இருப்பார்னு உங்களுக்கே தெரியும்."

உங்க சினிமா கரியர்ல இந்த டிகேட் எப்படி இருந்தது?

நிவேதா தாமஸ்
நிவேதா தாமஸ்

``சினிமாவில் வேலை செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கு. தமிழ் மற்றும் மலையாளம் மொழிகள்ல நிறைய படங்கள் நடிக்க ஆசையா இருக்கு. மொழிகள் கத்துக்க எனக்கு பிடிக்கும்ங்கிறதுனால எந்த மொழிப்படங்கள்னாலும் ரொம்ப சீக்கிரமாவே செட் ஆகிருவேன். அதனால், மற்ற மொழி படங்கள்லேயும் நடிக்க விருப்பம் இருக்கு. அதேபோல, சினிமால மறக்க முடியாததுனா என்னுடைய முதல் தெலுங்குப் படமான `ஜென்டில்மேன்' ஷூட்டிங்கின்போது ஒருநாள் ரெண்டுநாள் தொடர்ந்து தூங்காம நடிச்சேன். ஷூட் முடிச்சதும் கிட்டத்தட்ட 16 மணிநேரம் தூங்கியிருப்பேன். அது என்னால மறக்கவே முடியாத அனுபவம்."

குடும்பம்?

குடும்பத்துடன் நிவேதா தாமஸ்
குடும்பத்துடன் நிவேதா தாமஸ்

``பணம் மட்டுமே என்னிக்கும் சந்தோஷத்தை தராதுங்கறதை உறுதியா நம்பக்கூடிய ஆள் நான். அதனால, எனக்கு எப்போ எல்லாம் நேரம் கிடைக்குதோ அப்போ நான் இருக்கிற இடம் வீடாத்தான் இருக்கும். வீட்ல என்னுடைய பெட்நேம் `குக்கீ'. அம்மாவுக்கு வீட்டு வேலைகள்ல உதவி பண்றது, தம்பி கூட டிக்டாக் பண்றதுன்னு ஒரே கலாட்டாவா இருக்கும்."

பயணம் போக நினைக்கிற இடம்?

நிவேதா தாமஸ்
நிவேதா தாமஸ்

``சுவிட்சர்லாந்து போக பிளான் இருக்கு. ஆனால், ரொம்ப நாளாகவே போக ஆசைப்படற இடம் ஹிமாலயாஸ். அங்கே ட்ரெக்கிங் போற ஐடியாவும் இருக்கு."