Published:Updated:

`` `சசிகலா ரோல்ல நடிக்காதே'னு ஃபிரெண்ட்ஸ் மிரட்டினாங்க!" - `தலைவி' அனுபவம் பகிரும் பூர்ணா

`தலைவி' படத்தில் பூர்ணா

`தலைவி' படத்தில் சசிகலாவை எப்படிக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் என்பதை அறிய, சினிமா ரசிகர்களைப் போலவே, அரசியல்வாதிகள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சசிகலாவாக நடித்திருக்கும் பூர்ணாவிடம், இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்துப் பேசினோம்.

`` `சசிகலா ரோல்ல நடிக்காதே'னு ஃபிரெண்ட்ஸ் மிரட்டினாங்க!" - `தலைவி' அனுபவம் பகிரும் பூர்ணா

`தலைவி' படத்தில் சசிகலாவை எப்படிக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் என்பதை அறிய, சினிமா ரசிகர்களைப் போலவே, அரசியல்வாதிகள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சசிகலாவாக நடித்திருக்கும் பூர்ணாவிடம், இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்துப் பேசினோம்.

Published:Updated:
`தலைவி' படத்தில் பூர்ணா
ஜெயலலிதாவின் பயோபிக்காக உருவாகியுள்ள `தலைவி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் நாளை ரிலீஸாகிறது. சவால்களும் சர்ச்சைகளும் நிரம்பிய ஜெயலலிதாவின் வாழ்க்கைப் பயணத்தில், சசிகலாவின் பங்கு இன்றியமையாதது. இவர்கள் இருவரும் நகமும் சதையுமாக, இணை பிரியா தோழிகளாக இருந்தனர். எனவே, `தலைவி' படத்தில் சசிகலாவை எப்படிக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் என்பதை அறிய, சினிமா ரசிகர்களைப் போலவே, அரசியல்வாதிகள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
`தலைவி' படத்தில் பூர்ணா
`தலைவி' படத்தில் பூர்ணா

ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சுவாமியும் நடித்துள்ளனர். சசிகலாவாக நடித்திருக்கும் பூர்ணாவிடம், இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்துப் பேசினோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``என் பூர்வீகம் கேரளா. அதனால, தமிழ் சினிமாவுல நடிக்க வந்த பிறகுதான், தமிழ்நாட்டு அரசியலைப் பத்தி தெரிஞ்சுகிட்டேன். ஜெயலலிதா அம்மா அரசியல்ல எவ்ளோ போராட்டங்களை எதிர்கொண்டாங்கன்னு ஓரளவுக்கு எனக்குத் தெரியும். அவங்க வாழ்ந்த காலத்துல அவங்களைச் சந்திக்க ஆசைப்பட்டிருக்கேன். ஆனா, அதுக்கான வாய்ப்பு அமையல. `தலைவி' படம் எடுக்கப்படும் தகவல் வெளியானதுமே, அந்தப் படத்துல யாரெல்லாம் நடிப்பாங்கன்னு ரசிகையா நானும் ஆவலுடன் காத்திருந்தேன்.

`தலைவி' படத்தில் பூர்ணா
`தலைவி' படத்தில் பூர்ணா

இயக்குநர் ஏ.எல்.விஜய் சார்கிட்டருந்து திடீர்னு ஒருநாள் போன் வந்துச்சு. `சசிகலா மேடம் ரோல்ல நீங்க நடிக்கிறீங்களா? சசிகலா, ஜெயலலிதாவின் வாழ்க்கையில எப்படி வந்தாங்கன்னு மட்டும்தான் படத்துல காட்சிப்படுத்துறோம். சின்ன ரோல்தான்'னு வெளிப்படையா எல்லாத் தகவலையும் சொன்னார். மேற்கொண்டு எதையுமே கேட்காம, உடனே ஓகே சொல்லிட்டேன்.

`தலைவி'யில நான் நடிக்கவிருக்கும் தகவலை என் ஃபிரெண்ட்ஸ் சிலர்கிட்ட சொன்னேன். ஷாக் ஆனவங்க, `சசிகலா ரோல்ல மட்டும் நடிக்காதே...'னு அரசியல் காரணங்களுக்காகச் சொல்லி, அன்பு மிரட்டல் விடுத்தாங்க. ஜெயலலிதா - சசிகலாவின் நட்பு பத்தி பலவிதமான தகவல்களைக் கேட்டிருக்கோம். அதுல எது உண்மை, எது பொய்னு அவங்க ரெண்டு பேருக்கு மட்டும்தானே தெரியும்? அதனால, எந்த வகையிலும் குழப்பம் இல்லாம, ஏ.எல்.விஜய் சார் மேல முழு நம்பிக்கை வெச்சு, இந்தப் படத்துல நடிக்கப் போனேன். சசிகலாவின் பழைய புகைப்படங்களைக் காட்டி, கதைக்குத் தேவையான அளவுக்கு மட்டும் ஜெயலலிதா - சசிகலாவின் நட்பு பத்தி விஜய் சார் எனக்குச் சொன்னார்.

`தலைவி' படத்தில் பூர்ணா
`தலைவி' படத்தில் பூர்ணா

`ஃபேஷன்' இந்திப் படத்துல மாடலிங் பெண்ணா கங்கனா நடிச்சிருப்பாங்க. சினிமாவுல நான் நடிக்க வந்த புதுசுல, அந்தப் படத்துல கங்கனாவின் நடிப்பைப் பலமுறை பார்த்து ஆச்சர்யப்பட்டேன். எனக்கு ரொம்பப் பிடிச்ச நடிகையான கங்கனாவுடன் இணைஞ்சு `தலைவி' படத்துல நடிச்சது ஸ்பெஷல் சந்தோஷம். படத்துல என் போர்ஷன் கடைசி அரை மணி நேரத்துல மட்டும்தான் வரும். அதனால, பத்து நாள்கள் மட்டுமே வேலை செஞ்சேன். ஒரே நேரத்துல தமிழ் மற்றும் இந்தியில இந்தப் படத்தை எடுத்தாங்க. இந்தி பதிப்புல மட்டும் சில நடிகர்களை மாத்தினாங்க. ஆனா, இந்தியிலயும் சசிகலா ரோல்ல நானேதான் நடிச்சேன்.

ஜெயலலிதா அம்மாவுக்கு, சசிகலா மேடம் கேசட் கொடுக்க வந்தது, கார் விபத்துல அவங்க ரெண்டு பேரும் ஆஸ்பத்திரியில சேர்க்கப்படுறது, சேர்ந்தே தேர்தல் பிரசாரத்துக்குப் போறதுனு சில காட்சிகள் படத்துல வரும். ஒரு முக்கியமான தருணத்துல, ஜெயலலிதாகிட்ட சசிகலா ஒரு வாக்குறுதி கொடுப்பாங்க. நான் அந்த டயலாக்கைப் பேசி முடிச்சதும், `தியேட்டர்ல இந்த சீன் வரும்போது கைத்தட்டல் அதிகமா வரும்'னு விஜய் சார் சொன்னார்.

பூர்ணா
பூர்ணா

ஷூட்டிங் நேரத்துல கங்கனாவும் நானும் அளவாதான் பேசிகிட்டோம். அந்த உரையாடல்ல உணவு விஷயங்கள் பத்திதான் அதிகம் பேசினோம். ஒருமுறை, பெண்களின் வளர்ச்சிக்கு மத ரீதியான விஷயங்கள் தடையா இருப்பதைப் பத்தி பேசினாங்க. `என் சொந்த ஊரிலிருந்து வெளியூருக்குப் போய் வேலை செஞ்ச முதல் பெண் நான்தான். பல்வேறு சிரமங்களைக் கடந்துதான் எனக்குப் பிடிச்ச துறையில வேலை செய்ய முடிஞ்சுது'ன்னு கங்கனா தன் அனுபவங்களை என்கிட்ட சொன்னாங்க.

எனக்கு இந்தி தெரியாது. அதனால, கங்கனாவும் எனக்கு நிறைய இந்தி வார்த்தைகளைச் சொல்லிக் கொடுத்தாங்க. ஷூட்டிங் முடியுறப்போ, `இப்போ ஓரளவுக்கு பெட்டரா இந்தி பேசுறீங்க'ன்னு சிரிச்சுகிட்டே சொன்னாங்க. படத்துல நடிச்ச முக்கியமான கலைஞர்கள் தங்களின் போர்ஷனை முடிச்சுக்கொடுத்துட்டு கிளம்பும்போது, செண்டு ஆஃப் பார்ட்டி நடந்தினாங்க. எனக்கு நடத்தப்பட்ட பார்ட்டியில, கங்கனாதான் கேக் வெட்டி எனக்கு ஊட்டிவிட்டாங்க.

`தலைவி' படக்குழுவினருடன் பூர்ணா
`தலைவி' படக்குழுவினருடன் பூர்ணா

`தலைவி' படத்துல ஜெயலலிதா அம்மா அரசியலுக்கு வரும் வரையிலான கதையைத்தான் காட்டியிருக்காங்கனு நினைக்குறேன். அதன் பிறகு அவங்க வாழ்க்கையில நடந்த விஷயங்களைப் பத்தின கதையுடன் சினிமா எடுத்தா, அதுல சசிகலா மேடம்தான் முக்கிய அங்கமா இருப்பாங்க. அதனால, `இந்தப் படத்தின் ரெண்டாவது பாகம் எடுத்தா, அதுலயும் சசிகலா ரோல்ல நான்தான் நடிப்பேன்'னு விஜய் சார்கிட்ட சொன்னேன். அவர் வயிறு குலுங்க சிரிச்சார். எம்.ஜி.ஆர் ரோல்ல நடிச்ச அரவிந்த் சுவாமி சார்கூட என் போர்ஷன் பெரிசா இருக்காது. எம்.ஜி.ஆர் சாரின் கதையும் எனக்குச் சுத்தமா தெரியாது.

`தலைவி' டிரெய்லர் பார்த்தப்போ, எம்.ஜி.ஆர் சாரை தமிழக மக்கள் எப்படிக் கொண்டாடியிருக்காங்கன்னு தெரிஞ்சுக்க முடிஞ்சுது. எனவே, படத்துல எம்.ஜி.ஆர் சார் பத்தி நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்க ஆவலா இருக்கேன். குறிப்பிட்ட சில பயோபிக் படங்கள்தாம் கூடுதல் முக்கியத்துவம் பெறும். அந்த வகையில `தலைவி' படத்துல ஓர் அங்கமா இருப்பதே எனக்கு அளவுகடந்த பெருமைதான்" என்கிறார் பெருமிதத்துடன்.

ஏ.எல்.விஜய்யுடன் பூர்ணா
ஏ.எல்.விஜய்யுடன் பூர்ணா

`முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பூர்ணா அறிமுகமானார். அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், ``பூர்ணா, அசினைப் போலவே இருக்கிறார். தமிழ் சினிமாவில் மற்றொரு அசினாக இவர் வளரக்கூடும்" என்று பாராட்டியிருந்தார். அது குறித்துப் பேசிய பூர்ணா, ``அப்போ பரத் முன்னணி நடிகரா இருந்தார். `எம் மகன்' ஹிட் படத்தைக் கொடுத்த டீம்ல பலரும் மறுபடியும் இணைஞ்சு இந்தப் படத்துல வேலை செஞ்சாங்க. அதுல நான் மட்டும்தான் புதுமுக நடிகை. அதனால, அந்த நிகழ்ச்சியில என்னைப் பத்தி பெரிசா யாரும் பேச மாட்டங்கன்னு நினைச்சேன்.

நான் நேர்ல சந்திக்க ஆசைப்பட்ட சினிமா பிரபலமான விஜய் சார், அந்த நிகழ்ச்சியில கலந்துகிட்டதே எனக்கு இன்ப அதிர்ச்சியா இருந்துச்சு. அதுமட்டுமில்லாம, அவர் என்னைப் பாராட்டிப் பேசினதும் வாயடைச்சுப் போயிட்டேன். அப்புறம் `சின்ன அசின்'னுதான் பலரும் என்னைக் கூப்பிட்டாங்க. மலையாளம், தெலுங்குல ஹிட் படங்கள் எனக்கு அமைஞ்சாலும், தமிழ் சினிமாவுல மட்டும் சொல்லிக்குற அளவுக்கு ஹிட் புராஜெக்ட்ஸ் அமையல.

பூர்ணா
பூர்ணா

ஒவ்வொரு படத்தையும் கவனமாதான் தேர்வு செய்யுறேன். அந்த வரிசையில, `தகராறு', `சவரக்கத்தி' உள்ளிட்ட சில படங்களை ரொம்பவே எதிர்பார்த்தேன். இந்தப் படங்கள்ல என் நடிப்பு பேசப்பட்டுச்சே தவிர, வசூல் ரீதியா ஹிட் கிடைக்கல. அடுத்தடுத்து நான் நடிச்ச தமிழ்ப் படங்கள்லயும் இதே நிலைதான். என் உழைப்பைச் சரியா கொடுக்குறதால, வருத்தமில்லாம வேலை செய்யுறேன். `தலைவி 2' எடுக்கப்பட்டா, என் எதிர்பார்ப்பு பூர்த்தியாகிடும்னு நினைக்குறேன்" என்று சிரித்தபடியே விடைபெற்றார்.