Published:Updated:

‘‘துருவ்வோட ’வொர்க்‌ஷீட்’ ரகசியம்..!’’ - ப்ரியா ஆனந்த்

ப்ரியா ஆனந்த்

`சுமோ', `ஆதித்யா வர்மா' உள்ளிட்ட படங்கள் குறித்து நடிகை ப்ரியா ஆனந்த் பேட்டி

‘‘துருவ்வோட ’வொர்க்‌ஷீட்’ ரகசியம்..!’’ - ப்ரியா ஆனந்த்

`சுமோ', `ஆதித்யா வர்மா' உள்ளிட்ட படங்கள் குறித்து நடிகை ப்ரியா ஆனந்த் பேட்டி

Published:Updated:
ப்ரியா ஆனந்த்

`எல்.கே.ஜி' வெற்றியைத் தொடர்ந்து, `சுமோ', `ஆதித்யா வர்மா' உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார், ப்ரியா ஆனந்த். இந்த இரு பட அனுபவங்கள் குறித்தும் சினிமாத்துறையில் பத்து ஆண்டுகள் நிறைவு செய்ததைக் குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

`வணக்கம் சென்னை'க்குப் பிறகு, `சுமோ' படத்தில் மீண்டும் சிவாவுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

``சிவாவைப் பற்றியும் அவர் நடிக்கிற படங்கள் பற்றியும் எல்லோருக்கும் தெரியும். அவரைப் போலவே `சுமோ' பட ஸ்பாட்டும் செம ஜாலி. மற்ற நடிகர் படங்கள்ல அந்த டீமோட செட்டாகுறதுக்கு ஒரு மூணு நாளாவது ஆகும். ஆனா, சிவா படங்கள்ல அந்தப் பிரச்னை இருக்காது. முதல் நாளிலிருந்தே செம ஃபன்னா இருந்தது. இந்தப் படத்துடைய கதையும் வித்தியாசமாதான் இருக்கும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். ஜப்பான்ல இருக்கிற பாப்புலர் சுமோ வீரர் ஷாஷி இதுல நடிச்சிருக்கார். ஜப்பான் எனக்கு ரொம்ப பிடிச்ச நாடு. நம்ம ஊர்ல ஒவ்வொரு தெருவிலும் கிரிக்கெட் விளையாடுற மாதிரி அந்த ஊர்ல சுமோ விளையாடிட்டு இருப்பாங்க. நான் ரெண்டு முறை ஜப்பான் போனபோதும் ஸ்டேடியத்துக்குப் போய் சுமோ மேட்ச் பார்த்திருக்கேன். ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். ஷாஷிக்கு நம்ம மொழியே தெரியாமல் சூப்பரா அந்த எமோஷனை வெளிக்கொண்டு வந்திருந்தார். ராஜீவ் மேனன் சார் கேமரால நம்மளை படம்பிடிக்கணும்னு எல்லோருக்கும் ஆசை இருக்கும். அது எனக்கு நிறைவேறிடுச்சு. ஹோசிமின் சார் இந்த ஸ்கிரிப்டை அணுகியிருக்க விதம் சூப்பரா இருக்கும். நிவாஸ் பிரசன்னா மியூசிக் நிச்சயம் பேசப்படும். ஸ்ட்ரஸ் இல்லாமல் ஜாலியா வொர்க் பண்ணோம். அதே மாதிரி மக்கள் தியேட்டர்ல இந்தப் படத்தைப் பார்த்துட்டு போகும்போது ஸ்ட்ரஸ் இல்லாமல் ஜாலியா போவாங்க."

`ஆதித்யா வர்மா' பட அனுபவம்?

Priya anand
Priya anand

``இந்தப் படத்துடைய தயாரிப்பாளர்தான் என் முதல் மலையாளப் படத்துடைய தயாரிப்பாளர். அப்படிதான் நான் படத்துக்குள்ள வந்தேன். துருவ்வுக்கு இந்தப் படம் மிகச்சரியான அறிமுகமா இருக்கும். விக்ரம் பிரபு, கெளதம் கார்த்திக், அதர்வானு நிறைய ஸ்டார் கிட்ஸோடு வொர்க் பண்ணியிருக்கேன். அந்த வரிசையில இப்போ துருவ். ஒவ்வொரு ஃப்ரேம்லயும் விக்ரம் சாருடைய இன்புட்ஸ் இந்தப் படத்துல நிறையவே இருக்கு. ஒரு நடிகரா அவருடைய உழைப்பை பார்த்திருக்கோம். ஆனா, தன் பையனுடைய அறிமுக படங்கிறதால ஒரு அப்பாவா அவருடைய உழைப்பும் ஆர்வமும் ரொம்ப இருந்தது. எல்லா நாளும் ஸ்பாட்ல இருப்பார். இன்னும் சொல்லணும்னா, அவரும் `ஆதித்யா வர்மா' டீம்ல ஒரு நபர். இந்தப் படத்துல நிறைய கத்துக்கிட்டேன். டைரக்டர் கிரிசய்யா `அர்ஜுன் ரெட்டி' படத்துல வொர்க் பண்ணதுனால அந்தப் படத்துல நடந்த சுவாரஸ்யம், ஸ்பாட் எப்படி இருந்ததுனு நிறைய ஷேர் பண்ணுவார்."

`ஆதித்யா வர்மா' ஸ்பாட் எப்படி இருக்கும்?

``துருவ் மட்டுமல்ல விக்ரம் சாரும் ஸ்பாட்ல ரொம்ப ஆக்டிவ். நடிப்பு, மியூசிக், ராப் எழுதி பாடுறதுனு துருவ் செம டேலன்ட். தவிர, கிட்டார், பியானோ சூப்பரா வாசிப்பார். முறையா நடிப்பை படிச்சதுனால, என்ன சீன் நடிக்கிறாரோ அதை வொர்க்‌ஷீட்ல எழுதி முறையா நடிப்பார். இதுவரை நான் நடிச்ச நடிகர்கள் யாரும் இப்படி இருந்ததில்லை. நான் இதுவரை 25 படங்கள் பண்ணியிருக்கேன். ஆனா, நான் கத்துக்காத நிறைய புது விஷயங்கள் இந்தப் படத்துல கத்துக்கிட்டேன். டப்பிங்ல விக்ரம் சார் எப்படினு எல்லோருக்கும் தெரியும். டப்பிங்ல நிறைய டிப்ஸ் கொடுத்தார். `அர்ஜுன் ரெட்டி' மாதிரியான கல்ட் படத்தை ரீமேக் பண்றது சாதாரண விஷயம் இல்லை. தெலுங்கு, இந்தினு ரெண்டு மொழியிலும் சூப்பர் ஹிட். அப்போ தமிழ்ல பண்ணும்போது அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அதைச் சரி செய்ற மாதிரி இந்தப் படத்துல அருமையான டெக்னீஷியன்ஸ் இருக்காங்க. அவங்க இந்தப் படத்துடைய குவாலிட்டி குறையாத மாதிரி எடுத்திடுவாங்க. இந்தப் படத்துல நான் மேக்கப் போடுறதை விக்ரம் சார் விரும்பலை. அந்த மேக்கப், கதைக்கு சரியா இருக்காதுனு சொல்லி மேக்கப் போடாமல் நடிக்க வெச்சார். இதுவரை ஷூட்டிங்னா ஸ்பாட்டுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி வந்து மேக்கப், ஹேர் ஸ்டைல் எல்லாம் பண்ணி பழகிட்டேன். ஆனா, இதுல மேக்கப் இல்லாமல் நடிக்கச் சொன்னதுனால கொஞ்சம் தயக்கமும் பயமும் இருந்தது. அந்த பயத்தை போக்கி கேமராமேன் ரவி கே.சந்திரன் சார் என்னை அழகா காட்டியிருக்கார்."

விக்ரம் நடிச்சதுல உங்களுக்குப் பிடிச்ச படம்?

Priya anand
Priya anand

``ஒவ்வொரு படத்துக்கும் சேஞ்ச் ஓவர் காட்டுறது அவர் ஸ்டைல். அவருடைய எல்லா படங்களும் ரொம்ப பிடிக்கும். குறிப்பா சொல்லணும்னா, `ராவணன்'."

முன்பைவிட இப்போ நீங்க குறைவான படங்கள்ல நடிக்க என்ன காரணம்?

Priya anand
Priya anand

``ஏனோதானோனு நிறைய படங்கள் பண்றதுல எனக்கு உடன்பாடு இல்லை. எது வொர்க் அவுட் ஆகும் ஆகாதுனு என்னால கணிக்க முடியுது. ஆரம்ப காலங்களில் சில காரணங்களுக்காக, எனக்கு வரும் எல்லா படங்களுக்கும் ஓகே சொல்லியிருக்கேன். இனி அப்படி பண்ணக் கூடாதுனு முடிவு பண்ணியிருக்கேன். நான் எவ்ளோ கேப் விட்டு படம் பண்ணாலும் மக்கள் என்னை என்கரேஜ் பண்றாங்க. அதை `எல்.கே.ஜி' படத்துல உணர்ந்தேன். ரெண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, தமிழ்ல `எல்.கே.ஜி' படத்துல நடிச்சேன். அதுக்கு எனக்கு கிடைச்ச வரவேற்பைப் பார்த்து தியேட்டர்ல கண்கலங்கிட்டேன். நிறைய பெரிய நடிகர்கள் கூட நடிச்சால்தான் இந்த மாதிரி ரெஸ்பான்ஸ் இருக்கும். ஆனா, எனக்கு அது எதுவும் இல்லாமல் இந்தளவுக்கு ரெஸ்பான்ஸ் கிடைக்கிறது ரொம்ப சந்தோசம். அடுத்தடுத்து நிறைய படங்கள் பண்ணாதான் ஹீரோயின்னு கிடையாது. ஃபேமிலி ஆடியன்ஸுக்குப் பிடிக்கிற மாதிரி தரமான படங்கள்ல மட்டும்தான் நடிக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன்."

சினிமாத்துறைக்கு வந்து பத்து வருடம் நிறைவாகியிருக்கு. இந்தப் பயணம் எப்படி இருக்கு?

``ரொம்ப சந்தோசமாகவும் பெருமையாகவும் இருக்கு. காரணம், எந்தப் பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்குள் வந்து பத்து வருடங்களை நிறைவு செஞ்சிருக்கேன். 'நான்தான் அவளுக்கு இந்தப் பட வாய்ப்பை வாங்கிக்கொடுத்தேன்', 'என்னாலதான் அவள் இந்தப் படத்தில் நடிச்சாள்'னு இதுவரை யாரும் சொல்லமுடியாது. எந்த சிபாரிசும் இல்லாமல் என் வேலையைச் சரியா செஞ்சிக்கிட்டு இருக்கேன். ஆரம்பத்துல நான் பண்ண சின்னச் சின்ன தவறுகளில் இருந்து நிறைய கத்துக்கிட்டேன்; கத்துக்கிட்டு இருக்கேன். இப்போ என் அனுபவம் என்னை சரியான முறையில கூட்டிட்டுப் போகுது."