Published:Updated:

`காதலே... எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தால்...!' - உருகும் பிரியா பவானிசங்கர்

பிரியா பவானிசங்கர்
பிரியா பவானிசங்கர் ( Instagram.com )

நீ, நான் கேட்க மறந்த இசை. காயங்களை மறக்க புதிய காதலின் கிளர்ச்சி தேவையில்லை. சூழ்நிலைக்கு மாறாத அன்பு போதும் என்றிருக்கும் பேராண்மை.

``எங்க வீட்டு குத்துவிளக்கு நீ கெடச்சா என் வாழ்க்கை கெத்து...." என்று ரசிகர்களே ஏங்கிப் பாடும் அளவுக்குத் தனது குடும்பப் பாங்கான தோற்றத்தாலும் குறுகுறு புன்னகையாலும் அனைவரின் மனதையும் கட்டிப்போட்டு வைத்திருப்பவர் பிரியா பவானிசங்கர்.

பிரியா பவானிசங்கர்
பிரியா பவானிசங்கர்
Instagram.com

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகத் தனது திரைப் பயணத்தைத் தொடங்கிய இவர் பின்பு சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். பிறகு இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவானதைத் தொடர்ந்து வெள்ளித்திரையிலும் வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

`மேயாத மான்', `மான்ஸ்டர்', `கடைக்குட்டி சிங்கம்' என்று அடுத்தடுத்து படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்துவரும் இவரைச் சுற்றி `கல்யாணம் முதல் காதல்வரை' பல்வேறு கிசுகிசுக்கள் துரத்திக்கொண்டு வந்தாலும் அவற்றுக்கெல்லாம் மௌனம் ஒன்றையே பதிலாக அளித்து வந்தார். தற்போது தனது நட்பு கலந்த காதல் குறித்து மனம் திறந்துள்ளார்.

View this post on Instagram

I wasn’t surprised when you fell in love with the most happy, confident, less attractive, so called average looking ‘me’ from college a decade ago. But I am surprised you chose to stay with this ‘new me’ through everything. It is NOT fun & exciting to be with a broken person picking their destroyed pieces. நீ, நான் கேட்க மறந்த இசை. காயங்களை மறக்க புதிய காதலின் கிளர்ச்சி தேவையில்லை, சூழ்நிலைக்கு மாறாத அன்பு போதும் என்றிருக்கும் பேராண்மை. எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தா அவள் வாழ்க்கைல உன்னை மாதிரி ஒரு ஆண் இருக்கனும்னு நான் கடவுளை கேட்டுக்கறேன்😊 in my world full of stars you remain my sunshine! Happy birthday maa🤗

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on

இது நட்பா.. இல்லை காதலா.. என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு உள்ளது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கல்லூரி கால நண்பருடன் பிரியா சேர்ந்து இருக்கும் புகைப்படமும் அவருக்குத் தெரிவித்திருக்கும் பிறந்தநாள் வாழ்த்தும்.

பிரியாவின் அந்த இன்ஸ்டா பதிவில், ``கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு நம் கல்லூரி நாள்களில் மிகவும் மகிழ்ச்சியான, நம்பிக்கையுள்ள, அதிகம் கவர்ச்சி இல்லாத, சராசரி அழகுடன் இருந்த என்னை நீ காதலித்தபோது எனக்கு ஆச்சர்யமாக இல்லை. ஆனால், இப்போதும் அதே அன்புடன் நீ என்னுடன் இருப்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. உடைந்து போயிருக்கும் ஒருவரை ஒன்று சேர்ப்பதென்பது அவ்வளவு வேடிக்கையான, உற்சாகமான விஷயம் அல்ல.

அஜித் பொண்ணு, ரிமோட் சண்டை, சேலை போட்டோஷுட்..! - அனிகா பெர்சனல்ஸ்

நீ, நான் கேட்க மறந்த இசை. காயங்களை மறக்க புதிய காதலின் கிளர்ச்சி தேவையில்லை. சூழ்நிலைக்கு மாறாத அன்பு போதும் என்றிருக்கும் பேராண்மை. எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தால் அவள் வாழ்க்கையில் உன்னை மாதிரி ஓர் ஆண் இருக்க வேண்டும் என்று நான் கடவுளை வேண்டிக்கொள்கிறேன். நட்சத்திரங்கள் நிறைந்த என் உலகில் நீதான் என் சூரிய ஒளியாக இருக்கிறாய். பிறந்தநாள் வாழ்த்துகள் மா..." என்று காதலும் கவிதையும் கலந்த நடையில் உள்ளது அவர் தெரிவித்துள்ள பிறந்தநாள் வாழ்த்து.

பிரியா பவானிசங்கர்
பிரியா பவானிசங்கர்
Instagram.com

இதைக் கண்ட ரசிகர்கள், `அழகான ஜோடி' என்று இருவரையும் வாழ்த்தி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது காதலா இல்லை நட்பா என்று தெரியவில்லை. எனினும் தனது அன்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் பிரியா பவானிசங்கர்.

அடுத்த கட்டுரைக்கு