Published:Updated:

`இது நடக்கும்னு நினைக்கவேயில்லை!' - `இந்தியன் 2' குறித்து பிரியா பவானி சங்கர்!

மலையரசு

`இந்தியன் 2' குறித்து நடிகை பிரியா பவானி சங்கர் பேசியுள்ளார்.

பிரியா பவானி சங்கர்
பிரியா பவானி சங்கர்

ஷங்கர் - கமல்ஹாசன் இயக்கத்தில் வெற்றிகண்ட இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வரவுள்ளது. பெரிய பொருட்செலவில் தயாராகவுள்ள ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கமல், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரைத் தொடர்ந்து, நடிகை ரகுல் ப்ரீத் சிங் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார். படத்தில் இவர், சித்தார்த்துக்கு ஜோடி எனக் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பே தொடங்க வேண்டிய படப்பிடிப்பு சில காரணங்களால் தள்ளிப்போகியுள்ளது. இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கும் எனச் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

பிரியா பவானி சங்கர்
பிரியா பவானி சங்கர்

இதற்கிடையே, இந்தப் படத்தில் நடிக்கவுள்ளது குறித்து நடிகை பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,``இந்தப் பெரிய விஷயம்தான் என்னை இந்தத் தருணத்தில் உற்சாகப்படுத்தி வருகிறது. நான் இந்த பிரபஞ்சத்தை நம்புகிறேன். உங்களது செயல்கள் மூலம் நீங்கள் கேட்பதை இந்த பிரபஞ்சம் உங்களுக்குக் கொடுக்கும்.  கமல்ஹாசனுடன், எனக்குப் பிடித்த நடிகரான சித்தார்த், காஜல் அகர்வால் ஆகியோர் உடன் நடிப்பேன் என்று நான் நினைக்கவேயில்லை. அதிலும், இயக்குநர் ஷங்கரின் இயக்கம் என்றால் மிகப்பெரிய ஆசீர்வாதம். ஒரே நேரத்தில் அனைத்து ஆசிகளும் கிடைத்துவிட்டதைப்போல உணர்கிறேன்" எனக் கூறியுள்ளார்.