Published:Updated:

``எனக்கான அங்கீகாரம் கிடைக்கலை... அந்த கேரக்டர் கிடைக்கலை..!?’’ - பிரியாமணி

பிரியாமணி

முத்தழகாக தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த பிரியாமணி, இப்போது வெப் சீரிஸ், படங்கள், ரியாலிட்டி ஷோ என பயங்கர பிஸி.

``எனக்கான அங்கீகாரம் கிடைக்கலை... அந்த கேரக்டர் கிடைக்கலை..!?’’ - பிரியாமணி

முத்தழகாக தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த பிரியாமணி, இப்போது வெப் சீரிஸ், படங்கள், ரியாலிட்டி ஷோ என பயங்கர பிஸி.

Published:Updated:
பிரியாமணி

``சினிமாக்குள்ள வந்து கிட்டத்தட்ட 17 வருஷம் ஆகுது. இந்தப் பயணத்தைத் திரும்பிப் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு. அடுத்த வருஷம் நம்பிக்கையான, பெரிய ப்ராஜக்ட்ஸ்லாம் இருக்கு. இந்த வருஷத்தைவிட அடுத்த வருஷம் இன்னும் சிறப்பா அமையும்னு எதிர்பார்க்கிறேன்" என புன்னகைக்கிறார் பிரியாமணி.

பிரியாமணி
பிரியாமணி

முத்தழகாக தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த பிரியாமணி, இப்போது வெப் சீரிஸ், சினிமா, ரியாலிட்டி ஷோ என பயங்கர பிஸி. அவருடன் ஒரு குட்டி சாட்டிங்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

படங்கள், வெப்சீரிஸ்னு வெவ்வேறு மீடியம்ல நடிக்குறீங்க. எப்படி இருக்கு இந்தப் பயணம்?

The Family Man
The Family Man

`தி ஃபேமிலி மேன்' வெப் சீரிஸ்ல சுசித்ரா திவாரிங்கற கேரக்டர்ல நடிக்கிறேன். மும்பையில் இருக்க தமிழ் பொண்ணு கதாபாத்திரம்னு சொல்லும்போது எனக்குப் பிடிச்சுப்போச்சு. சுசித்ராவா கதாபாத்திரத்துல நடிக்குறது, ரொம்பவே ஹேப்பி!இப்போ சீசன் 2 ஷூட்டிங் போயிட்ருக்கு. இந்த சீசன்ல இருந்து சமந்தாவும் உள்ளே வராங்க. இன்னும் ஜாலியா இருக்கப்போகுது.

`சுசித்ரா திவாரி' பிரியாமணிக்கும் ரியல் லைஃப் பிரியாமணிக்கும் என்ன வித்தியாசம்?

கணவருடன் பிரியாமணி
கணவருடன் பிரியாமணி

``நிறைய வித்தியாசங்கள் இருக்கு. ஆனாலும், சில சூழ்நிலைகள்ல என்னைப் பொருத்திப் பார்க்க முடிஞ்சது. கணவன் மனைவிக்குள்ள நடக்கற ஆர்க்யூமென்ட்ஸ் காட்சிகள், நிஜ வாழ்க்கையில் எனக்கும் என்னுடைய கணவருக்கும் இடையேயும் நடந்திருக்கு. இந்த விஷயம் எனக்கு மட்டுமல்ல, கல்யாணமான எல்லோராலும் கனெக்ட் பண்ணிக்க முடியும். அந்த அளவுக்கு வசனங்கள் யதார்த்தமா இருக்கும். இயக்குநர் கிட்டேயும் இந்த விஷயத்தைப் பலமுறை சொல்லிருக்கேன்.

தமிழ் சினிமாவில் ஹீரோயின்ஸ் டஸ்க்கி ஸ்கின் டோன்ல எக்ஸ்போஸ் பண்றதுங்கறது சமீபகாலமா மீண்டும் அதிகமாகிருக்கு. நீங்க அதை `பருத்திவீரன்'லயே பண்ணிட்டீங்க. இத பத்தி உங்க கருத்து?

Paruthiveeran
Paruthiveeran

என்னைப் பொறுத்தவரை டஸ்கி ஸ்கின்டோன்ல இருக்க பெண்கள் ரொம்ப அழகு. வொயிட் ஸ்கின் டோன் இருக்குறவங்கதான் ஹீரோயினா இருக்கணும். அவங்களால மட்டும்தான் ஹீரோயின் கேரக்டர் பண்ண முடியும்னு எல்லாம் எதுவும் இல்லை. திறமை மட்டும்தான் முக்கியம். டஸ்கி ஸ்கின் டோன் இருக்க ஹீரோயின்ஸ, இப்போ அதிகமா தமிழ் சினிமாவுல பாத்துட்டு இருக்கேன். ரொம்பவே ஆரோக்கியமான, வரவேற்க கூடிய விஷயம்தான் இது. அவங்கள்ல பலபேர் நல்லா நடிக்கவும் செய்றாங்க.

கூடவே, கதைக்கு எது தேவைங்கிறதை இயக்குநர்தான் முடிவு பண்ணணும். கதைக்கு டஸ்கி ஸ்கின் இருக்க கதாநாயகி தேவைப்பட்டால் அந்த மாதிரி இருக்கிறவங்களை தேர்ந்தெடுப்பாங்க. `பருத்திவீரன்' முத்தழகு கேரக்டருக்கு அது தேவைப்பட்டது. அது நானாக இருந்தது, என்னுடைய அதிர்ஷ்டம்.

சாருலதா படத்துல பாசிட்டிவ், நெகட்டிவ் ரெண்டு ரோலும் பண்ணியிருப்பீங்க. உங்களுக்குப் பிடிச்ச ரோல் எது, ஹீரோயினா, வில்லியா?

பிரியாமணி
பிரியாமணி

``என்னுடைய ட்ரீம் ரோல் என்னது?'னு பலரும் கேட்டிருக்காங்க. நான் எப்பவும் சொல்றது, `படையப்பா' படத்துல ரம்யாகிருஷ்ணன் பண்ணின `நீலாம்பரி' கேரக்டர் மாதிரியான, ஓர் அழுத்தமான முழு நீள நெகட்டிவ் ரோல்ங்கிறதுதான். என்னுடைய வாய்ஸும் நெகட்டிவ் கேரக்டர்களுக்குப் ப்ளஸ்ஸா அமையும்னு பலரும் சொல்லியிருக்காங்க. அந்தளவுக்கு நெகட்டிவ் ரோல் பண்ண பிடிக்கும். ஆக, அப்படி ஒரு நெகட்டிவ் ரோலுக்காக பிரியாமணி வெயிட்டிங்."

பாரதிராஜா, அமீர், மணிரத்னம் மாதிரியான பெரிய இயக்குநர்களின் படங்கள்ல நடிச்சுருக்கீங்க. அந்த அனுபவம்?

பிரியாமணி
பிரியாமணி

என்னோட கரியர் ஆரம்பத்துலயே பாரதிராஜா, அமீர் மாதிரியான பெரிய இயக்குநர்கள் கூட வொர்க் பண்ணதுல நான் ரொம்பவே லக்கி. அது ஒரு பெரிய அனுபவம். என்னுடைய முதல் படம் பாரதிராஜா சார் கூட. அடுத்து பாலுமகேந்திரா சார் கூட. இப்படி இண்டஸ்ட்ரில இருக்க ரெண்டு பெரிய லெஜண்ட்ஸ் கூட அடுத்தடுத்து வொர்க் பண்ணதே சூப்பரான விஷயம்ல...

ஆனாலும், தமிழ்ல குறைவான படங்கள் ஏன்? உங்க திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கலைன்னு வருத்தம் இருக்கா?

பிரியாமணி
பிரியாமணி

``எனக்கான இடம் கிடைக்கலைன்னு வருத்தம் இருக்கான்னு கேட்டால், கண்டிப்பா இருக்கு. தமிழ்ல நான் நேரடியா நடிச்சு கடைசியா வெளிவந்த படம் எது அப்படிங்கிறதுகூட எனக்கு சரியா ஞாபகம் இல்ல. என்னுடைய சினிமா கரியர் ஆரம்பிச்சதே தமிழ்ல பாரதிராஜா சாரோட `கண்களால் கைது செய்' படம் மூலமாதான். தமிழ்ல நிறைய படங்கள்ல நடிக்க ஆசை இப்பவும் இருக்கு. என்னுடைய திறமையை நிரூபிச்சு ஒரு நடிகையா தேசிய விருது வாங்கியும், சரியான இடம் கிடைக்கலைனு வருத்தம் இருக்கு.

அதுமட்டுமல்லாம, நான் எப்பவுமே கதைகளுக்கு முக்கியத்துவம் இருக்க படங்களைத்தான் தேர்ந்தெடுப்பேன். நிறைய நல்ல கதைகள் வந்துட்டுதான் இருக்கு. நான் இந்த கேரக்டர் பண்ணினா நல்லா இருக்கும்னு எனக்கு கன்வின்சிங்கா இருக்க கதைகளை மட்டும் அக்செப்ட் பண்ணிட்டிருக்கேன். கூடிய சீக்கிரமே ஒரு பெரிய அறிவிப்பு வரும். அது மட்டும்தான் இப்போதைக்கு சொல்ல முடியும்.

`தலைவி' பயோபிக்ல `சசிகலா' கேரக்டர்ல நடிக்கறதா தகவல் வந்ததே?

பிரியாமணி
பிரியாமணி

அது நியூஸாதான் இருக்கு. இன்னும் கன்ஃபார்ம் ஆகல. கன்ஃபார்ம் ஆனதும் இருக்கா, இல்லையான்னு படக்குழு தரப்பிலிருந்துதான் சொல்லணும். நான் எதுவும் சொல்ல முடியாது.