Published:Updated:

இனியாவது அடக்கத்தோடு செயல்பட முயலுங்கள் விஷால்! : ராதிகா

சனா

உங்கள் முதுகில் ஆயிரம் அழுக்கு மூட்டைகள் இருக்கும்போது சரத்குமார் பற்றி பேச உங்களுக்கு கூச்சமாக இல்லையா..? என்று விஷாலுக்கு எதிராக ராதிகா சரத்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

ராதிகா சரத்குமார்
ராதிகா சரத்குமார்

நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட இருக்கின்றனர். இந்த தேர்தல் ஜூன் 23 ஆம் தேதி சென்னை எம்.ஜி.ஆர்.ஜானகி கல்லூரியில் நடைபெற இருக்கிறது.

ராதிகா சரத்குமார்
ராதிகா சரத்குமார்

இந்நிலையில் நடிகர் விஷால் தேர்தலுக்காக பிரசார வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதில் சரத்குமார் மற்றும் ராதாரவியை மிகவும் தாக்கி வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ தமிழ் சினிமா உலகினரையும் தாண்டி சினிமா ரசிகர்களையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில் இந்த வீடியோ குறித்து நடிகை வரலட்சுமி தனது அதிருப்தியை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். இதில் விஷால் 'எவ்வளவு கீழே இறங்கி வேலைப் பார்ப்பவர் என்பது தெரிகிறது'னு அவருடைய கோபத்தை வார்த்தைகளால் வெளியிட்டிருந்தார்.

சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகா, விஷால் வெளியிட்ட வீடியோவுக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதில் அவர், 'விஷால் ரெட்டி அவர்களே நீங்கள் சொன்ன குற்றச்சாட்டுகளை இதுவரை நிரூபித்திருக்கிறீர்களா ..? நீங்கள் கொடுத்த புகார்கள் விசாரணையில் இருக்கும்போது முன்பு சொன்ன பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் உண்மையாகுமா? உங்கள் முதுகில் ஆயிரம் அழுக்கு மூட்டைகள் இருக்கும்போது சரத்குமார் பற்றி பேச உங்களுக்குக் கூச்சமாக இல்லையா..?

படத்தயாரிப்பாளார்கள் சங்கத்தின் பணத்தை எல்லாம் காலி செய்துவிட்டு கோர்ட் வாசலில் நிற்கிறீர்களே..? நீங்கள் நீதிமான் மாதிரி வீடியோவை வெளியிட கொஞ்சமாவது அருகதை உண்டா..? இன்றைய தலைவர் நாசர் எதைக் கேட்டாலும் அப்படியா இது எனக்குத் தெரியாமல் நடந்துவிட்டது என்று வழக்கம்போல் ஓடி ஒளிந்து கொள்வார். இப்படியே நீங்கள் பிரிவினை பேசி செயல்பட்டு வருவது நடிகர் சங்கத்தை ஒற்றுமைப்படுத்தவோ, நலிந்த கலைஞர்களுக்கு நல்லது செய்யவோ ஒருபோதும் உதவாது. இனியாவது அடக்கத்தோடு செயல்பட முயலுங்கள்.'' என்று ராதிகா அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

சனா

Make others happy by being happy ! “ Its my favorite quote. And I live towards it. I want to talk talk talk even if..