Election bannerElection banner
Published:Updated:

`தவறான சிகிச்சையா?' - ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்... தொடர் சிகிச்சையில் ரைசா!

ரைசா
ரைசா

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ரைசா ஃபேசியல் சிகிச்சை எடுத்துக் கொண்டபோது அவரது முகம் வீங்கியது. இதனால மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான ரைசாவின் உடல்நிலை குறித்து தற்போது விசாரித்தோம்.

தமிழில் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் நடிகை ரைசா. இந்த நிகழ்ச்சியின் வாயிலாக இவருக்கு சினிரமாவில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் 'பியார் பிரேமா காதல்' படத்தில் ஹரீஷ் கல்யானுக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படம் கமர்ஷியல் ஹிட் அடித்த நிலையில் இவருக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. தற்போது இவரது நடிப்பில் 'தி சேஸ்' திரைப்படம் ரிலிஸூக்காகக் காத்திருக்கிறது.

இந்நிலையில் தன்னுடைய உடல் வடிவமைப்பு மற்றும் உருவத் தோற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்ட ரைசா சில தினங்களுக்கு முன்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் தோல் பரமாரிப்பு மருத்துவமனையில் ஃபேசியல் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

ரைசா
ரைசா

அங்கிருந்த மருத்துவர் பைரவி செந்திலிடம் சிகிச்சை மேற்கொண்ட ரைசா, அவர் தனக்கு வேண்டாத சில சிகிச்சைகள் கொடுத்ததின் காரணமாகதான் தன்னுடைய முகம் வீங்கியிருப்பதாகவும், ரத்தக்கசிவு ஏற்பட்டதாகவும் தன் இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் பதிவிட்டார். இதில் ரைசாவின் முகத்தைப் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இதற்காக மருத்துவர் பைரவி தனக்கு முறையான பதிலளிக்கவில்லை எனக் குறிப்பிட்டிருந்த ரைசா, மருத்துவர் பைரவி மீது ரூபாய் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வரும் ரைசாவைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால், இதுகுறித்து ரைசாவின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தபோது, "ரைசாவின் உடல்நிலை சரியான பிறகு அவரே இது குறித்து பேசுவார். அவர் தற்போது சிகிச்சையில் இருக்கிறார்" எனப் பதிலளித்தனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு