Published:Updated:

``என் கார் மேல கல் எறிஞ்சாங்க... அதிர்ச்சியாவும் சிரிப்பாவும் இருந்துச்சு!" - நடிகை ரஞ்சனி ஷேரிங்ஸ்

மைசூரு சிவசமுத்திரத்துல ஷூட்டிங். டல் மேக்கப், ரவிக்கை இல்லாம நடிக்கிறது, ஷூட்டிங் சூழல்கள் பிடிக்காததுன்னு வருத்தப்பட்டு அழுது அடம்பிடிச்சேன். வடிவுக்கரசி அக்காதான் அன்பாகப் பேசி, எனக்கு ஊக்கம் கொடுத்தாங்க.

ரஞ்சனி
ரஞ்சனி

இயக்குநர் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட ரஞ்சனி, தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நாயகியாகக் கலக்கியவர். நடிகை, வழக்கறிஞர், சமூக ஆர்வலர், தொழில்முனைவோர் எனப் பல தளங்களிலும் இயங்கிக்கொண்டிருக்கும் ரஞ்சனி, தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார். விரிவான பேட்டிக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2NFkcpH

" 'பச்சைக்கொடி'ங்கிற படத்துல ஹீரோயினா நடிக்கிறதுக்குத்தான் பாரதிராஜா சார் என்னைக் கூப்பிட்டிருந் தார். அந்தப் படத்தின் பூஜையில் அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் சார், சிவாஜி சார் உட்பட நிறைய பிரபலங்கள் கலந்துகிட்டாங்க. பிறகு, 'பூஜைக்கேத்த பூவிது'ங்கிற பாடல்ல என்னை நடிக்க வெச்சு படமாக்கினாங்க. அந்த நேரத்துல திடீர்னு சிவாஜி சாரின் கால்ஷீட் கிடைக்க, உடனே 'முதல் மரியாதை' படத்தை இயக்க ஆரம்பிச்சுட்டார் பாரதிராஜா சார். அதனால, 'பச்சைக்கொடி' படத்தின் ஷூட்டிங் தற்காலிகமா நிறுத்தப்பட்டுச்சு. திடீர்னு, 'முதல் மரியாதை' படத்துல என்னை நடிக்கக் கேட்டார், பாரதிராஜா சார். 'எந்தப் படமா இருந்தாலும் சரி. சீக்கிரம் எடுத்து முடிச்சு என்னை விட்டுடுங்க'னு சொன்னேன்!

'உன்னைப் பார்த்தா, நடிகை ரஞ்சனி மாதிரியே இருக்கே'ன்னு அவர் கேட்கிறப்போல்லாம், 'அது நானில்லை'னு சொல்வேன்!

மைசூரு சிவசமுத்திரத்துல ஷூட்டிங். டல் மேக்கப், ரவிக்கை இல்லாம நடிக்கிறது, ஷூட்டிங் சூழல்கள் பிடிக்காததுன்னு வருத்தப்பட்டு அழுது அடம்பிடிச்சேன். வடிவுக்கரசி அக்காதான் அன்பாகப் பேசி, எனக்கு ஊக்கம் கொடுத்தாங்க. 'சிங்கப்பூர் பாப்பா'ன்னு என்னைக் கூப்பிடும் சிவாஜி சார், நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சது, 'பராசக்தி' படத்துல அறிமுகமாகி, புகழ்பெறக் கஷ்டப் பட்டதையெல்லாம் எனக்கு விளக்கிச் சொன்னார். 'மகிழ்ச்சியா நடி. படம் ரிலீஸாகி பார்க்கிறப்போ நீ பட்ட கஷ்டமெல்லாம் மறந்துடும்'னு சொன்னவர், 'நீ பெரிய நடிகையா வருவே'ன்னு வாழ்த்தினார்.

ஒருநாள் பிரஸ் மீட்ல என்னை அறிமுகப்படுத்திய பாரதிராஜா சார், என் பெயர் ரஞ்சனின்னு சொன்னார். அப்போதான் என் பெயரை மாத்திட்டாங்கன்னு தெரிஞ்சு அதிர்ச்சியானேன்...

'முதல் மரியாதை', 'கடலோரக் கவிதைகள்'னு என் தொடக்கப் படங்கள்ல ஹோம்லியா நடிச்சேன். அதனாலயே ஹோம்லியான ரோல்கள்தான் எனக்கு அதிகம் அமைஞ்சது. வெரைட்டியா நடிக்கணும்னு ஆசைப்பட்டு, `குடும்பம் ஒரு கோயில்’ படத்துல கொஞ்சம் நெகட்டிவான ரோல்ல நடிச்சேன். அந்தப் படத்தை திருச்சியிலுள்ள ஒரு தியேட்டரில் பார்க்கப் போனேன். என் கேரக்டர் ரசிகர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறதை உணர முடிஞ்சது. அதனால, படம் முடியற தருணத்துல, என்னைச் சீக்கிரம் கிளம்பிடச் சொன்னார், தியேட்டர் உரிமையாளர். நான் கிளம்பறதுக்குள், படம் முடிஞ்சு வெளிய வந்த ரசிகர்கள் என்னை அடையாளம் கண்டுபிடிச்சு என் கார் மேல கல் எரிஞ்சாங்க. நல்லவேளையா யாருக்கும் அடிபடலை.இந்த நிகழ்ச்சியை நினைக்கிறப்போல்லாம், அதிர்ச்சியாவும் சிரிப்பாவும் இருக்கும்...

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |

...'சார் ஐ லவ் யூ'தான் என் கடைசித் தமிழ்ப் படம். 'நான் அறிமுகப்படுத்த வேண்டிய நாயகிகளை, என் குருநாதர் பாரதிராஜா சார் அறிமுகப்படுத்தினார். சிங்கப்பூர்ல இருந்த ரஞ்சனியைக் கண்டுபிடிச்சு என் படத்துல அறிமுகப்படுத்தணும்னு நினைச்சேன். அந்தப் பொண்ணையும் அவரே அறிமுகப்படுத்திட்டார்'னு பல நிகழ்ச்சிகள்ல பாக்யராஜ் சார் சொல்லியிருக்கார்.

ரஞ்சனி
ரஞ்சனி

நண்பர்களாகப் பழக ஆரம்பிச்சு, என் கணவர் பிர்ரீ கொம்பராவும் நானும் காதலர்களானோம். நான் ஹீரோயினா நடிச்ச விஷயங்கள் பத்தி அவர்கிட்ட எதையும் சொல்லிக்கலை. 'உன்னைப் பார்த்தா, நடிகை ரஞ்சனி மாதிரியே இருக்கே'ன்னு அவர் கேட்கிறப்போல்லாம், 'அது நானில்லை'னு சொல்வேன்! குடும்பம் மற்றும் நண்பர்கள் வட்டாரத்துல என் நிஜப்பெயரான 'சசிகலா சாஷா'ன்னு என்னைக் கூப்பிடுவாங்க. அதனால, நான் சொன்னதை கணவர் நம்பிட்டார். மனசு கேட்காம, ஒருநாள் அவர்கூட சாட் பண்றப்போ 'நடிகை ரஞ்சனி நான்தான்'னு உண்மையைச் சொன்னேன். அதிர்ச்சியானவர், கோபப்பட்டாலும் அடுத்த நாளே சமாதானமாகிட்டார். கல்யாணமானதும், நாங்க கொச்சியில குடியேறிட்டோம்.

இதுக்கிடையே லண்டன்ல இருந்தப்போ, பெண்களுக்கு நிகழும் குடும்ப வன்முறைக்கு எதிரா குரல் கொடுத்து, போராடினேன். அதுகுறித்து கேள்விப்பட்ட அப்போதைய எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர், 'நிர்பயா-கொச்சி' புராஜெக்ட்ல என்னை கமிட்டி உறுப்பினர் ஆக்கினார். பிறகு, 'ஸ்த்ரீ' உள்பட பல்வேறு சமூகப் பணிகள்ல வேலை செய்திருக்கேன். மலையாள செய்தி விவாத நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி பங்கேற்பேன். கணவரின் ரியல் எஸ்டேட் பிசினஸில் நானும் இணைந்து வேலை செய்றேன். 'ரிங் மாஸ்டர்' படத்துல ரீ-என்ட்ரி கொடுத்து, சில மலையாளப் படங்கள்ல நடிச்சேன். கால்ஷீட் பிரச்னையால், 'சகுனி' பட வாய்ப்பை (ராதிகா நடித்த ரோல்) மிஸ் பண்ணிட்டேன். நல்ல கதைகள் அமைந்தால், தொடர்ந்து நடிப்பேன்!

- நடிகை ரஞ்சனி பகிர்ந்த திரையுலகம், பர்சனல் அனுபவங்களை அவள் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > 80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 21: ரஞ்சனி... காடுகளில் காதலை வளர்க்கிறோம்! https://www.vikatan.com/news/cinema/1980s-evergreen-heroins-actress-ranjani

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |