Published:Updated:

``துல்கர் இதுல செம ஸ்ட்ரிக்ட்; விஜய் தேவரகொண்டா கொஞ்சம் சோம்பேறி!" - ரீது வர்மா ஷேரிங்ஸ்

Ritu Varma
Ritu Varma

`கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாகி இருக்கும் ரீது வர்மாவை சந்தித்துப் பேசினோம்.

`` `வேலையில்லா பட்டதாரி-2’ படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தாலும், இதுதான் ஹீரோயினாக உங்களுக்கு முதல் தமிழ்ப்படம். எப்படி இருக்கு கோலிவுட்?"

ரீது வர்மா
ரீது வர்மா

``தமிழ் சினிமாவோட மிகப் பெரிய ரசிகை நான். நிறைய தமிழ் படங்கள் பார்ப்பேன். நான் ஹீரோயினா நடிச்சிருக்கிற முதல் தமிழ்ப் படத்தோட ரிலீஸுக்காக பல நாள்களாகக் காத்திட்டிருந்தேன். இப்போ அது நடக்கப் போகுதுனு நினைக்கும் போது, ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.’’

``என்னென்ன தமிழ்ப் படங்கள் பார்த்தீங்க?"

``ரீசன்ட்டா நிறைய நல்ல படங்கள் பார்த்தேன். அதுல `96’ என்னோட ஃபேவரைட். அதுல நடிச்சிருந்த விஜய் சேதுபதி, த்ரிஷாவோட நடிப்பு என்னை ரொம்பவே பிரமிக்கவெச்சது. `சூப்பர் டீலக்ஸ்’, `அருவி’, `கைதி’னு பல படங்கள் பார்த்திருக்கேன். எல்லாமே எனக்கு ரொம்பப் பிடிச்ச படங்கள். `96’, `சூப்பர் டீலக்ஸ்’ படங்களைப் பார்த்த பிறகு, விஜய் சேதுபதியோட ரசிகையாகிட்டேன். என்னாமா நடிக்கிறார். அவரோட சேர்ந்து நடிக்கணும்னு ரொம்ப ஆசையா காத்திட்டு இருக்கேன். நிச்சயமா அது நடக்கும்னு நம்புறேன்.’’

``துல்கர்கூட நடிச்ச அனுபவம்..?"

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

``துல்கர் நடிச்ச பல மலையாளப் படங்களைப் பார்த்திருக்கேன். `ஓகே கண்மணி’ படத்தை நிறைய முறை பார்த்திருக்கேன். என் ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேருக்கு துல்கர்தான் க்ரஷ். ஒரு நடிகரா அவரை எனக்கு ரொம்பவே பிடிக்கும். `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நடிக்கும்போதுதான், ஒரு மனிதராகவும் துல்கரை ரொம்பப் பிடிச்சிருந்தது. ரொம்ப நல்லா பழகக்கூடிய ஆள். எனக்கு துல்கர்கிட்ட ரொம்பப் பிடிச்சதும் பிடிக்காததும் அவரோட அழகுதான். பலமுறை அவரோட அழகைப் பார்த்து பொறாமைப்பட்டிருக்கிறேன்.’’

``இந்தப் படத்தில் உங்க கேரக்டர் என்ன?"

``மீராங்கிற கேரக்டர்ல நான் நடிச்சிருக்கேன். தனக்குனு சில கட்டுப்பாடுகளை வெச்சுக்கிட்டு வாழுற பொண்ணு. என் கேரக்டருக்கு அப்படியே நேரெதிரான கேரக்டர், துல்கருக்கு. அவர் ரொம்ப சுதந்திரமான ஆள். எங்க ரெண்டு பேருக்கும் லவ் வர்ற காட்சிகள், அதுக்கு அப்புறம் வர்ற லவ் போர்ஷன்னு எல்லாமே வித்தியாசமா இருக்கும். ரொம்பவே புதுசா இருக்கும்.’’

``"விஜய் தேவரகொண்டாகூட `பெல்லி சுப்புலு’ படத்துல நடிச்சதுக்குப் பிறகு இன்னும் அவர்கூட டச்ல இருக்கீங்களா?

பெல்லி சுப்புலு
பெல்லி சுப்புலு

``எப்பவுமே பேசிட்டு இருக்க மாட்டோம். அப்பப்போ பேசிப்போம். என்னென்ன படங்கள் பண்றோம்னு சொல்லிப்போம். விஜய் தேவரகொண்டாகூட `எவடே சுப்ரமணியம்’, `பெல்லி சுப்புலு’னு ரெண்டு படங்கள்ல நடிச்சிருக்கேன். `அர்ஜூன் ரெட்டி’ படத்துக்குப் பிறகு, இந்தியா முழுக்க தெரிஞ்ச நடிகராக மாறியிருக்கார். அவரோட வளர்ச்சி ரொம்பவே பெருமையா இருக்கு.’’

``துல்கர்; விஜய் தேவரகொண்டா - இவங்க ரெண்டு பேருக்குள்ள இருக்கிற ஒற்றுமை; வேற்றுமை என்னென்ன?"

``துல்கர் எப்பவுமே ஃபிட்னஸ் பத்தி யோசிக்கக்கூடிய ஆள். வொர்க் அவுட் பண்ணணும்னு நினைச்சிட்டே இருப்பார். ஃபிட்னஸ் விஷயத்துல துல்கர் செம ஸ்ட்ரிக்ட். விஜய் தேவரகொண்டாவும் நல்லா ஃபிட்டாதான் இருப்பார். ஆனா, விஜய் தேவரகொண்டா கொஞ்சம் சோம்பேறி. நினைச்சா வொர்க் அவுட் பண்றது; இல்லைனா அதைக் கண்டுக்காம விட்றதுனு இருப்பார். இதுதான் இவங்க ரெண்டு பேருக்குள்ள இருக்கிற வேற்றுமை. ஒற்றுமைகள் நிறைய இருக்கு. ரெண்டு பேருமே, செலெக்ட் பண்ற படங்கள்ல வித்தியாசங்கள் காட்டுவாங்க. இவங்க ரெண்டு பேரோடும் சேர்ந்து நடிக்கிறது ரொம்பவே ஈசியா இருக்கும். இன்னொரு முக்கியமான ஒற்றுமை, இவங்க ரெண்டு பேரும் என் அளவுக்கு அதிகமா டேக் வாங்க மாட்டாங்க. ரெண்டு பேரும் சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட்.’’

`` `துருவ நட்சத்திரம்’ படத்தில் கெளதம் மேனன் இயக்கத்தில் நடித்ததைப் பற்றியும் `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' கெளதம் மேனனோடு நடித்ததைப் பற்றியும் சொல்லுங்க?"

ரீது வர்மா
ரீது வர்மா

``கெளதம் மேனன் சார், ஒரு இயக்குநரா நடிகர்களுக்கு ரொம்பவே சுதந்திரம் கொடுப்பார். அவர் ஒரு காட்சியை நடிகர்களுக்கு சொல்லும்போதே, நடிச்சுக்காட்டி சொல்றதுனால, அந்த நடிகர் அதிக டேக் வாங்கவே மாட்டார். நாம, அவர் என்ன பண்றாரோ அதைப் பார்த்து அப்படியே பண்ணிடலாம். அவரோட இயக்கத்தில் நான் நடிச்சதை ஒரு மேஜிக்காக நினைக்கிறேன். அவர் படத்தில் நடிக்கும்போது, நான் அந்த கேரக்டராகவே என்னை நினைச்சுக்கிட்டு வாழ்ந்தேன். அந்த உணர்வை எல்லா நடிகர்களுக்கும் கடத்திடுவார். இயக்குநரா இருந்தாலே நடிகர்களுக்கு நடிச்சுக்காட்டுகிறவர், நடிகரானால் எப்படி பண்ணுவார்னு சொல்லணுமா என்ன. இந்தப் படத்தில் பயங்கரமா நடிச்சிருக்கார். செம ஸ்டைலிஷா இருக்கார். அவரோட நடிப்பை தியேட்டரில் பார்க்கிறதுக்கு ரொம்பவே வெயிட் பண்றேன்.’’

`` `துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரமோடு நடித்த அனுபவம்?"

துருவ நட்சத்திரம்
துருவ நட்சத்திரம்

``விக்ரம் சார் மாதிரியான ஒரு சீனியர் நடிகரோடு நடிக்கும் போதும் நிறையவே கத்துக்கலாம். `துருவ நட்சத்திரம்’ ஷூட்டிங் ஸ்பாட்டிலும் நான் நிறைய கத்துக்கிட்டேன். ஒவ்வொரு சீன் ஷூட் போகும்போதும், செம எனர்ஜியா இருப்பார். தான் ஒரு சீனியர் நடிகர்னு எந்த இடத்திலும் காட்டிக்கவே மாட்டார். எல்லாரும் ஃப்ரெண்ட்ஸ்ங்கிற ஃபீலை நமக்குக் கொடுத்திடுவார். அதுமட்டுமில்லாம, விக்ரம் சார் பயங்கரமான ப்ராங்ஸ்டர். செட்டுல யாரையாவது ப்ராங் பண்ணிட்டே இருப்பார். நல்ல வேளை, அவர் என்கிட்ட அந்த மாதிரி எதுவும் பண்ணலை. அசின்டன்ட் டைரக்டர்ஸோட மொபைலை எடுத்து வெச்சுக்கிறது, ஷூட்டிங்கிற்குத் தேவையான பொருளை மறைச்சு வெச்சுட்டு, எல்லாத்தையும் தேடவிடுறதுனு ஏதாவது ஒண்ணு பண்ணிட்டே இருப்பார். தன்னோடு இருக்கிறவர்களை சிரிக்க வெச்சுட்டே இருப்பார்.’’

அடுத்த கட்டுரைக்கு