Published:Updated:

``இந்தத் தேர்தல் ‘இருக்கு ஆனா இல்ல’ " - நடிகை சங்கீதா

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகை சங்கீதா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நடிகர் சங்கத் தேர்தல் மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திரைப்பட நடிகர்களும் நாடக நடிகர்களும் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அம்பிகா, "ரெண்டு அணியில இருக்கவங்களும் எங்க குடும்பத்துல இருக்கவங்கதான். இவங்க ஜெயிக்கணும் அவங்க ஜெயிக்கணும்னு நாங்க நினைக்கலை. காலையில சாப்பிடும்போது ஆரம்பிக்கிற சண்டை இரவு சாப்பிடும்போது சரியாகிடும். எல்லோரும் சினிமா நபர்கள்தான். மொத்தத்துல எங்க சினிமா ஜெயிக்கணும் அவ்ளோதான்" என்றார்.

விஷால்
விஷால்

பிறகு, பேசிய நடிகை சங்கீதா, "சரியான முறையில் இந்தத் தேர்தல் நடக்கிறதா எனத் தெரியவில்லை. இதை நாங்கள் கூறினால் பிரச்னைதான் வரும். ‘இருக்கு ஆனா இல்ல’ என்பது போலத் தான் தேர்தல் நடைபெறுகிறது. இறுதி வரை தேர்தல் நடைபெறுமா என்பது கூட தெரியாமல் இருந்தது. நேற்று வரை எந்த அறிவிப்பும் வராததால் எங்கள் அணியைச் சேர்ந்த சிலர் ஷூட்டிங் கிளம்பிச் சென்றுவிட்டனர்.

பின்னர், இரவுதான் தேர்தல் நடக்கும் என உறுதியானது. அதன் பிறகு ஷூட்டிங் சென்ற சிலரால் மட்டுமே இன்று வரமுடிந்துள்ளது. எதிர் அணியினர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளதால் தான் சுவாமி சங்கரதாஸ் அணி உருவாக்கப்பட்டது. அவர்கள் எதற்காக இவ்வளவு அவசரமாகத் தேர்தல் நடத்துகிறார்கள் எனத் தெரியவில்லை. தாமதமாக நடத்தினால் ஒருவேளை அவர்கள் வெற்றி பெறமுடியாது என்ற பயமா என்பதும் தெரியவில்லை. இவ்வளவு நம்பிக்கையுடன் இருப்பவர்கள் எதற்காக அவசரமாகத் தேர்தல் நடத்த வேண்டும். இதுவே விஷால் எதிர் அணியில் இருந்திருந்தால் இதற்காகப் பெரிய சண்டை போட்டிருப்பார். ஆனால் நாங்கள் அப்படி இல்லை எங்களுக்குச் சண்டை போடத் தெரியாது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு