Published:Updated:

``தனுஷுக்கு இப்போ ஏகப்பட்ட பெண் ரசிகைகள்... ஆனா, அவரோட முதல் ரசிகை..?'' - ஷெரின்

ஷெரின், துள்ளுவதோ இளமை
ஷெரின், துள்ளுவதோ இளமை

"செல்வா சாருக்கு எங்க ஷூட் பண்ணலாம்னு தோணுதோ, அங்க கேமராவை செட் பண்ணச் சொல்லிடுவார். நாங்களும் அந்த சீனை அங்க நடிச்சிட்டு கிளம்பிடுவோம். இப்படிப் பல காட்சிகளை நாங்க எடுத்தோம்."

செல்வராகவன் இயக்கி தனுஷ் நடித்த `துள்ளுவதோ இளமை’ திரைப்படம் வெளியாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. தனுஷ், செல்வராகவன் மட்டுமல்லாது காந்தக் கண்ணழகி ஷெரினுக்கும் இதுதான் முதல் படம். இந்தப் படத்தின் நினைவுகள் குறித்து ஷெரினிடம் பேசினோம்.

``செல்வா... உங்கள் கனவு சினிமாவுக்காக வெயிட்டிங்!'' - ஒரு ரசிகனின் கடிதம் #18yearsofSelvaism

`துள்ளுவதோ இளமை’ பட வாய்ப்பு எப்படி வந்தது?

ஷெரின்
ஷெரின்

``நான் மாடலிங் பண்ணிக்கிட்டிருந்த சமயத்துல `துள்ளுவதோ இளமை’ படத்துக்காக ஹீரோயின் தேடிக்கிட்டிருந்தார் செல்வராகவன் சார். மாடலிங் ஏஜென்சி மூலமா என் போட்டோஸ் செல்வா சார்கிட்ட போயிருக்கு. அதைப் பார்த்துட்டு நேர்ல மீட் பண்ணணும்னு சொன்னாங்க. நானும் எங்க அம்மாவும் செல்வா சாரை மீட் பண்ணோம். அப்ப ஆடிஷன் எதுவும் வைக்கலை. அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு கன்ஃபார்ம் பண்ணிட்டாங்க. நேரா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போய்தான் நடிச்சேன்.’’

எனக்கு அப்ப தமிழ் சுத்தமா தெரியாததனால, தனுஷ்தான் எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தார்.
ஷெரின்

உங்களுக்கும் தனுஷுக்கும் இதுதான் முதல்படம்; ஷூட்டிங் ஸ்பாட் எப்படி இருந்தது?

ஷெரின், தனுஷ்
ஷெரின், தனுஷ்

``எனக்கு சினிமா பத்தி எதுவுமே தெரியாது. தனுஷ் சினிமா ஃபேமிலில இருந்து வந்திருந்தாலும் அவருக்கும் அப்ப சினிமா பத்தி எதுவுமே தெரியாது. நாங்க ரெண்டு பேரும் ஷூட்டிங்ல ஒண்ணுமே தெரியாம முழிச்சுக்கிட்டிருப்போம். இதனால நாங்க ரெண்டு பேரும் சீக்கிரம் ஃபிரெண்ட்ஸாகிட்டோம். எனக்கு அப்ப தமிழ் சுத்தமா தெரியாததனால, தனுஷ்தான் எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தார். இந்தப் படத்தோட ஷூட்டிங்கை என்னால மறக்கவே முடியாது. ஏன்னா, டே-நைட்னு மாத்தி மாத்தி ஷூட் பண்ணிக்கிட்டே இருப்போம். ஜாலி மூட்ல இருப்போம்; அப்ப அழற சீன் எடுப்பாங்க. நிறைய சீன்ஸ் இங்கதான் ஷூட்டிங் பண்ணப்போறோம்னு பிளான் இல்லாமலே பண்ணோம். படத்துல நடிச்ச எங்க கேங், டைரக்டர், கேமராமேன்னு எல்லாரும் கார்ல போய்க்கொண்டிருக்கும்போதுதான் லொகேஷன் பார்ப்போம். செல்வா சாருக்கு எங்க ஷூட் பண்ணலாம்னு தோணுதோ, அங்க கேமராவை செட் பண்ணச் சொல்லிடுவார். நாங்களும் அந்த சீனை அங்க நடிச்சிட்டு கிளம்பிடுவோம். இப்படித்தான் ஷூட்டிங் போச்சு.’’

தனுஷ், செல்வராகவனின் வளர்ச்சியைப் பார்க்கும்போது எப்படி இருக்கு?

செல்வராகவன், தனுஷ்
செல்வராகவன், தனுஷ்

``செல்வா சாரும் தனுஷும் ஷூட்டிங்ல ரொம்பவே உழைப்பாங்க. அதை பார்த்தப்ப, இவங்க ரெண்டு பேரும் பெரிய லெவலுக்கு போவாங்கனு எனக்கு அப்பவே தோணுச்சு. இதைத் தனுஷ்கிட்டேயும் நான் சொல்லியிருக்கேன். `இந்தப் படத்துக்கு அப்புறம் உங்களுக்கு நிறைய ரசிகைகள் வருவாங்க. ஆனால், நான்தான் உங்களோட முதல் ஃபேன்’னு தனுஷ்கிட்ட அடிக்கடி சொல்வேன். தனுஷும் இப்போ வேற லெவலுக்கு வளர்ந்திருக்கார். செல்வா சாரும் இந்தியாவிலேயே மிக முக்கியமான இயக்குநர்கள்ல ஒருவரா இருக்கார். அவரோட படத்துல நடிக்கணும்னு நினைக்கிற பல நடிகர், நடிகைகள் இருக்காங்க. ஆனால், நான் என்னோட முதல் படத்திலேயே அவர் இயக்கத்தில் நடிச்சதை பெருமையா நினைக்கிறேன். இவங்க ரெண்டு பேரையும் ஜனவரில நடந்த ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்ச்சியிலதான் பார்த்தேன். ரொம்ப நாள் கழிச்சி மீட் பண்ணதால ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தோம். மறக்க முடியாத சந்திப்பு.’’

`துள்ளுவதோ இளமை’ படத்தை தியேட்டரில் பார்த்த அனுபவம் எப்படி இருந்தது?

ஷெரின்
ஷெரின்

``அய்யோ... அதை மறக்கவே முடியாது. படம் ரிலீஸாகுறதுக்கு முன்னாடியே பாடல்கள் ரிலீஸாகி, செம ஹிட்டாகி இருந்தது. அதுவே படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங்கா இருந்ததனால, முதல் ஷோவுக்கு செம கூட்டம். எந்தப் பாட்டையும் என்னால கேட்கவே முடியலை. அந்தளவுக்கு விசில் சத்தம் இருந்துச்சு. முக்கியமா என்னோட இன்ட்ரோ சீனுக்கு எல்லாரும் கத்துனதைப் பார்த்தப்ப, எனக்கே ஒரு மாதிரி ஆகிடுச்சு. நாம நடிச்ச முதல் படத்துக்கே இப்படியானு எனக்கு ஒண்ணுமே புரியலை. இதுவரைக்கும் நான் தியேட்டரில் பார்த்த படங்கள்லேயே, `துள்ளுவதோ இளமை’ அனுபவம்தான் என்னால மறக்க முடியாதது.’’

லாக்டெளன் நாள்கள் எப்படிப் போய்க்கிட்டிருக்கு?

Sherin
Sherin

``என்ன பண்றதுன்னே தெரியாம போய்க்கிட்டிருக்கு. தினமும் வீட்டைச் சுத்தப்படுத்தி, சமையல் செஞ்சு, சாப்பிட்டு, தூங்கிட்டு இருக்கேன். லாக்டெளன் ஆரம்பிச்ச சமயத்தில் இதைப் பண்ணலாம்; அதைப் பண்ணலாம்னு ஒரு லிஸ்ட் போட்டேன். ஆனால், லாக்டெளன் தள்ளிப்போக, தள்ளிப்போக கடுப்புல அதையெல்லாம் விட்டுட்டேன். கிட்டத்தட்ட பிக்பாஸ் மாதிரியே இருக்கு. ஆனா, அதைவிட கொஞ்சம் கொடுமையாவே இருக்குனு சொல்லலாம். பிக்பாஸ்ல டிவி, மொபைல் எதுவும் இருக்காது. இப்ப அதெல்லாம் இருக்கிறதுனால, நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் என்னனு தெரிஞ்சுக்கிட்டு, இன்னும் அதிக பயத்தோட இருக்க வேண்டியதா இருக்கு. இது எப்ப முடியும்... முடியுமானே பல கேள்விகள் மனசுக்குள்ள இருக்கு.’’

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அப்புறம் என்ன படங்கள்ல நடிக்கிறீங்க?

ஷெரின், நடிகை
ஷெரின், நடிகை

``மார்ச் கடைசி வாரத்துல நான் கமிட்டாகி இருந்த தெலுங்கு வெப் சீரிஸோட அறிவிப்பை வெளியிட்டதுக்கு அப்புறம், ஷூட்டிங் போறதா இருந்தோம். மே 5, என் பிறந்தநாள் அன்னைக்கு நான் நடிக்கயிருந்த இன்னொரு படத்தோட அறிவிப்பை வெளியிடலாம்னும், என் பெயர்ல ஒரு யூடியூப் சேனலையும் ஆரம்பிக்கலாம்னும் இருந்தேன். இப்ப அது எதுவுமே பண்ணலை. லாக்டெளன் இல்லாம இருந்திருந்தா அந்தத் தெலுங்கு வெப் சீரிஸோட ஷூட்டிங்கே முடிஞ்சிருக்கும். சீக்கிரம் இது சரியாகி ஷூட்டிங் போகணும்னு வெயிட் பண்றேன்.’’

அடுத்த கட்டுரைக்கு