என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
சமையல்
Published:Updated:

சால்ட் அண்டு பெப்பர் லுக், பிரஷாந்த் கூட்டணி, அம்மா கேரக்டர்... சிம்ரன் ஷேரிங்!

சிம்ரன்
பிரீமியம் ஸ்டோரி
News
சிம்ரன்

#Entertainment

‘பாவக்கதைகள்’ ஆந்தா லஜியில் கௌதம் மேனன் இயக்கத்தில் ‘வான்மகள்’, ஆயுஷ்மான் குரானா - தபு நடிப்பில் வெளியான `அந்தாதுன்’ பாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக்கில், நடிகர் மாதவன் இயக்கத்தில் ‘ராக்கெட்ரி’ என மீண்டும் பிஸியாகி இருக்கிறார் நடிகை சிம்ரன். இடையில் இன்ஸ்டா வில் சால்ட் அண்டு பெப்பர் லுக்கில் போட்டோ போட்டு ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிறச் செய்தார்.

‘`சால்ட் அண்டு பெப்பர் லுக்ல என்னை எனக்கே ரொம்ப பிடிச்சது. அதனால ஷேர் பண்ணினேன். வேற எந்த நோக்கமும் இல்லை. இப்ப டெல்லியில இருக்கேன். நினைச்சா சென்னைக்குக் கிளம்பி வந்துடறேன். அதனால சென்னையை மிஸ் பண்ற ஃபீலிங்கே இல்லை’’

- சிம்ரனின் தமிழ் அட்சர சுத்தம். பாசிட்டிவ் கமென்ட்ஸ் தந்திருக்கும் `பாவக்கதைகள்' அனுபவத்திலிருந்தே ஆரம்பித்தார்.

‘`பாவக்கதைகள் ஆந்தாலஜியில ‘வான்மகள்’ கதையில நடிக்கச் சொல்லி டைரக்டர் கௌதம் மேனன் கேட்டார். என் கேரக்டர் ரொம்ப பவர்ஃபுல்லா இருந்ததால உடனே ஓகே சொன்னேன். ஆனா, கதை கேட்டபோது க்ளைமாக்ஸ் வேற மாதிரி இருந்தது. அப்புறம் எல்லாரும் உட்கார்ந்து பேசி அதை மாத்தினோம். ஓடிடி பிளாட்ஃபார்ம்ல இது எனக்கு முதல் அனுபவம். நான் என் கரியரை சின்னத்திரையில இருந்துதான் ஆரம்பிச்சேன்.

90-கள்ல அங்கேருந்துதான் பெரிய திரைக்குப் போனேன். படங்கள்ல நடிச்ச பிறகும், மறுபடி டி.வியில ஜாக்பாட், டேக் இட் ஈஸினு நிறைய ஷோஸ் பண்ணியிருக்கேன். என்னைப் பொறுத்தவரை டி.வியா, சினிமாவா, ஸ்டேஜ் ஷோவாங்கிற தெல்லாம் விஷயமில்லை. ஆடி யன்ஸை என்டர்டெயின் பண்றது தான் என் வேலை. இந்தத் தலைமுறைக்கு ஓடிடி அறிமுகமாகி யிருக்கு. ஓடிடிக்கு இன்டர்நேஷனல் மார்க்கெட் இருக்கு. சந்தோஷமா இருக்கு...’’ - ஓடிடி வாய்ப்பை ஒப்புக் கொண்ட காரணம் சொல்பவர், ‘பேட்ட’ படத்துக்குப் பிறகு, மீண்டும் பெரிய திரைக்கு வருகிறார். ‘அந்தா துன்’ இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் தபுவின் கேரக்டர் சிம்ரனுக்கு.

நெகட்டிவ் கேரக்டர் என்பதால பல முன்னணி நடிகைகளும் நடிக்க மறுத்த கேரக்டருக்கு நீங்க ஓகே சொன்னது ஏன்?

``எந்த நடிகைகளைக் கேட்டாங்க, யார் மறுத்தாங்கன்னு எனக்குத் தெரியாது. எனக்கு `அந்தாதுன்' படமும் அதுல தபுவோட கேரக்டரும் ரொம்ப பிடிச்சது. அவ்வளவு பெரிய ஆர்ட்டிஸ்ட் டான தபுவே அந்த கேரக்டர்ல நடிக்க யோசிக்கலை. மொத்தக் கதையும் அவங்களையும் ஹீரோ ஆயுஷ்மானையும் சுத்திதான் நகரும். ஹீரோவுக்கு டஃப் கொடுக் குற கேரக்டர் தபுவுக்கு. டைரக்டர் ஃப்ரெட்ரிக்கும் நடிகர் பிரஷாந்த் தும் தபு கேரக்டர்ல நடிக்கச் சொல்லி என்னைக் கேட்டாங்க.

சிம்ரன்
சிம்ரன்

‘பார்த்தேன் ரசித்தேன்’லயே நான் நெகட்டிவ் கேரக்டர் பண்ணியிருந்தேன். இத்தனை வருஷங்களுக்குப் பிறகு பிரஷாந்த் - சிம்ரன் காம்போ மறுபடி அமைஞ்சிருக்கு. பல வருஷங் களுக்குப் பிறகு, பிரஷாந்த் நடிக்கிற படம் என்பதால அவர் மேலயும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அதைக் கெடுக்கற மாதிரியோ, கதையை மாத்தியோ நிச்சயம் இந்த ரீமேக்கை பண்ண மாட் டாங்க'' - நம்பிக்கையோடு சொல் பவருக்கு ‘வாரணம் ஆயிரம்’ படத்துக்குப் பிறகு, கௌதம் மேனனுடனான காம்போவும் மீண்டும் அமைந்திருக்கிறது.

டைரக்டர் கௌதம் மேனன் - நடிகர் கௌதம் மேனன்... உங்க பார்வையில்?

‘`ஒரு கேரக்டரை சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைக்குப் புரியவெச்சு கன்வின்ஸ் பண்றது அவ்வளவு ஈஸியில்லை. கதையை, கேரக்டரை விவரிக்கும் இடத்துலதான் அந்த மேஜிக் நடக்கும். ஒரு டைரக்டரா கௌதம் அதுல எக்ஸ் பெர்ட். ஆர்ப்பாட்டமில்லாம, அமைதியான அவருடைய நடிப்பு `பாவக்கதைகள்'ல பெரிய ப்ளஸ்...’’ - இயக்குநரின் நடிப்புக்கு சர்ட்டிஃபிகேட் தருகிறார்.

‘பாவக்கதைகள்’ல ரெண்டு பெண் குழந்தைகளின் அம்மாவா நடிச்சிருக்கீங்க. நிஜத்துல பெண் குழந்தை இல்லாத ஏக்கம் உண்டா?

``என் தங்கச்சி, தம்பி, நெருங்கின சொந்தக்காரங் களுக்கெல்லாம் பெண் குழந்தைங்க இருக்காங்க. இன்னும் சொல்லப்போனா எங்க வீடு முழுக்கவே பெண் குழந்தைங்கதான் இருக்காங்க. அதனால எனக்கு அப்படி எந்த ஏக்கமும் இல்லை.’’

சிம்ரன்
சிம்ரன்

90-களின் இறுதியில் தமிழ் சினிமாவை ஆண்ட ஹீரோயின்கள்ல நீங்களும் ஒருவர். அந்த நாள்களைத் திரும்பிப் பார்க்குறதுண்டா?

‘`என் பீரியட்ல நிறைய ஹீரோயின்ஸ் இல்லை. எங்களுக்கு வாய்ப்புகளும் குறைவு. ஆனாலும், அந்த பீரியட்ல நடிக்க வந்து இன்னிவரைக்கும் தாக்குப் பிடிச்சிட்டிருக்கேன்றதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.’’

ஹீரோக்களுக்கு வயது தடையா இருக்கிறதில்லை. ஹீரோயின் களுக்கு அது பெரிய சவால். கல்யாணமான, குழந்தைபெற்ற நடிகைகள் ஹீரோயின் தகுதியை இழப்பது பற்றி...

‘`நடிகைகளுக்கு மட்டுல்ல, டாக்டர், இன்ஜினீயர், ஜர்னலிஸ்ட்டுனு எந்தத் துறையா இருந்தாலும் பெண்கள் இந்த சேலஞ்சைத் தாண்டிதான் வந்தாகணும். எவ்வளவு பெரிய பொறுப்புல இருக்குற பெண்ணுக்கும் பிரெக்னன் ஸிக்குப் பிறகு குழந்தைதான் முக்கியமா படுது. பெண்களுக்கு ப்ரையாரிட்டி மாறுது. ஆனா, ஆண்களுக்கு அது மாறுவதே இல்லை. எப்போதும்போல இருக்காங்க.

பெண்களுடைய ப்ரையாரிட்டி மாறுவது தப்பே இல்லை. இன்னும் சொல்லப்போனா, அது மாறியே ஆகணும். அதுதான் நல்லது. என்னைப் பொறுத்தவரை கல்யாணமான, குழந்தை பெற்ற நடிகைகளை இண்டஸ்ட்ரியில யாரும் ஒதுக்கிறதில்லை. தனக்கு என்ன வேணும், தான் எப்படி இருக்கணும் என்பதெல்லாம் அந்த நடிகையின் பர்சனல் சாய்ஸ்.

வாய்ப்புகள் இல்லாம நான் ஒதுங்கலை. எனக்கு எது முக்கியம்னுபட்டுச்சோ, அதைத் தேர்ந்தெடுத்தேன். `கன்னத்தில் முத்தமிட்டால்' படத்துலயே நான் அம்மா கேரக்டர் பண்ணிட்டேன். `வாரணம் ஆயிரம்' இன்னோர் உதாரணம். எனக்கு வந்த அம்மா கேரக்டர் பிடிச்சதால ஓகே சொன்னேன். அது என் சாய்ஸ்.’’