Published:Updated:

``எனக்கான வளர்ச்சியும் புகழும் குறைவுதான்; ஏனெனில்..." - நடிகை சுலக்‌ஷனா பகிர்வுகள்

sulakshana
sulakshana

ஹீரோயினா புகழுடன் இருந்த 18 வயசுல எனக்குக் கல்யாணம் முடிவாகிடுச்சு. மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஐயாவின் மகன் கோபி கிருஷ்ணன் என் முன்னாள் கணவர்.

குழந்தை நட்சத்திரம் டு கதாநாயகி டு குணச்சித்திர நடிகை என மூன்று பரிமாணங்களிலும் புகழ்பெற்றவர், சுலக்‌ஷனா. இவரின் வெகுளித்தனமான குணம், நடிப்புப் பயணத்திலும் பிரதிபலித்திருக்கிறது. நடிகையாகவும் சிங்கிள் பேரன்ட்டாகவும் வெற்றிபெற்ற சுலக்‌ஷனா, தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார்.

``ஆந்திராவிலுள்ள ராஜமுந்திரி என் சொந்த ஊர். எனக்கு நினைவு தெரியுறதுக்குள்ளேயே சென்னைக்குக் குடியேறிட்டோம். என் தாத்தா பத்திரிகையாளரா இருந்தார். அவர் சினிமா பிரபலங்களைப் பேட்டி எடுக்கப் போறப்போ என்னையும் கூட்டிட்டுப்போவார். `காவியத் தலைவி' படத்துல ஒரு சின்னப்பொண்ணு சரியா நடிக்கலை. அங்க ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்திட்டிருந்த என்னை நடிக்கக் கேட்டார் இயக்குநர் கே.பாலசந்தர் சார். அந்தப் படத்துல ஜெமினி கணேசன் - செளகார் ஜானகிக்கு மகளா நடிச்சேன். மூணு வயசுல தொடங்கி, தொடர்ந்து குழந்தை நட்சத்திரமா பல மொழிகளிலும் 100 படங்களுக்கு மேல் நடிச்சேன்; தெலுங்கில்தான் அதிகம் நடிச்சேன். விரிவான பேட்டிக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2kSUQKO

வாழ்க்கை முடிஞ்சுபோச்சா என்ன? சவாலா இருந்தாலும், சிங்கிள் பேரன்ட் வாழ்க்கையைத் தைரியமா எதிர்கொண்டு வாழ்ந்தேன்

ஸ்ரீதேவிங்கிற என் நிஜப் பெயர்ல புகழ்பெற்ற நடிகை இருந்ததால, இயக்குநர் கே.விஸ்வநாத் சார்தான் என் பெயரை 'சுலக்‌ஷனா'ன்னு மாத்தினார். `சுபோதயம்' படம் பெரிய ஹிட். அடுத்து ராஜ்குமார் சாருக்கு ஜோடியா நடிச்ச கன்னடப் படமும் பெரிய ஹிட். பிறகுதான் `தூறல் நின்னு போச்சு' பட வாய்ப்பு வந்துச்சு. ரெண்டு படங்கள் ஹிட் கொடுத்திருந்தாலும்கூட, புது ஹீரோயின் மாதிரி எனக்கு நிறைய டெஸ்ட் வெச்சாங்க. என் வெகுளித்தனம் அந்த மங்களம் கேரக்டருக்கு சரியா இருக்கும்னு பாக்யராஜ் சார் நினைச்சார். ஆனா, தமிழ் சினிமாவில் நான் நிறைய வாய்ப்பு தேடினது, நிராகரிக்கப்பட்டது பத்தி, பல பெரிய மனிதர்கள் பாக்யராஜ் சார்கிட்ட சொல்லி, என்னைத் தேர்வு செய்ய வேண்டாம்னு சொல்லியிருக்காங்க. அப்போ பாக்யராஜ் சார் மனைவி பிரவீணா மேடம்தான், `இந்தப் பொண்ணால நல்லா நடிக்க முடியும்'னு சிபாரிசு பண்ணினாங்க. பிறகுதான், `தூறல் நின்னு போச்சு', `டார்லிங் டார்லிங் டார்லிங்' உட்பட மூணு படங்களுக்கு ஹீரோயினா ஒப்பந்தம் போட்டார் பாக்யராஜ் சார்.

ஹீரோயினா புகழுடன் இருந்த 18 வயசுல எனக்குக் கல்யாணம் முடிவாகிடுச்சு. மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஐயாவின் மகன் கோபி கிருஷ்ணன் என் முன்னாள் கணவர். திடீர் திருமணம். கல்யாணத்துக்குப் பிறகுதான் எனக்கு சினிமா வாய்ப்புகள் அதிகமா வந்துச்சு. `ஆயிரம் நிலவே வா', `கெட்டிமேளம்', `குவா குவா வாத்துகள்', `ஜனவரி 1', `ராஜாத்தி ரோஜாக்கிளி'னு நிறைய ஹிட் படங்கள்ல ஹீரோயினா நடிச்சேன். `கே.பாலசந்தர் சாரின் `சிந்து பைரவி' படத்துக்குப் பிறகுதான் நல்ல ஆர்ட்டிஸ்ட்டுன்னு எனக்குப் பெயர் கிடைச்சது.

``எனக்கான வளர்ச்சியும் புகழும் குறைவுதான்; ஏனெனில்..." - நடிகை சுலக்‌ஷனா பகிர்வுகள்

கருத்து வேறுபாடு காரணமா, என் கல்யாண வாழ்க்கை விவாகரத்தில் முடிஞ்சது. எதிர்பார்ப்பு பொய்த்துப் போய் வாழ்க்கை கஷ்டமானது. அதுக்காக வருத்தப்பட்டாலும், அத்துடன் வாழ்க்கை முடிஞ்சுபோச்சா என்ன? சவாலா இருந்தாலும், சிங்கிள் பேரன்ட் வாழ்க்கையைத் தைரியமா எதிர்கொண்டு வாழ்ந்தேன். குழந்தைப் பருவத்துல இருந்து நடிச்சிட்டு வந்த நான், என் தனிப்பட்ட அமைதி மற்றும் என் குழந்தைகளுக்கு முழுமையா நேரம் ஒதுக்க, சினிமா துறையிலிருந்து ஒன்பது ஆண்டுகள் விலகியிருந்தேன். வருத்தமும் விரோதமும் இல்லாம பிரிஞ்சதால இப்போவரை நானும் என் முன்னாள் கணவரும் நண்பர்களாதான் இருக்கிறோம்.

சினிமா, சின்னத்திரையில நடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுச்சு. என் ரெண்டு பசங்களையும் நல்லா படிக்க வெச்சு, நல்ல நிலைக்கு ஆளாக்கினேன். `காலம் உங்க குணத்தை மட்டும் மாத்தவேயில்லை'ன்னு பலரும் சொல்வாங்க. வெகுளித்தனமான குணம் கொண்ட நான், எந்த விஷயத்தையும் ரொம்ப யோசிக்க மாட்டேன். அதனால எனக்கான வளர்ச்சியும் புகழும் குறைவாக இருக்கலாம். ஆனா, இப்படி இருக்கவே விரும்புறேன்; இதனால்தான் எனக்கு மன அமைதி கிடைக்குது."

- ஏமாற்றம் டு ஹீரோயின் | குறும்புத்தனம்... பாக்யராஜ் கொடுத்த அடி | நிராகரித்தவர்களின் பாராட்டு... கமல் ஜோடி | திட்டாத பாலசந்தர்... இழந்த வாய்ப்புகள் | மனோரமாவின் அட்வைஸ்... ஒன்பது வருடப் பிரிவு | பாலசந்தரால் ரீ-என்ட்ரி... வாழ்நாள் முழுக்க நடிப்பு என தன் வாழ்க்கைப் பயணத்தை முழுவதையும் பகிர்ந்திருக்கிறார் நடிகை சுலக்‌ஷனா. இதை அவள் விகடன் இதழில் விரிவாக வாசிக்க > 80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 18: நான் இப்படி இருக்கவே விரும்புகிறேன்! - நடிகை சுலக்‌ஷனா https://www.vikatan.com/news/cinema/1980s-evergreen-heroins-actress-sulakshana

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/

அடுத்த கட்டுரைக்கு