Published:Updated:

ரொமான்டிக் காதலி, ஆக்‌ஷன் நாயகி, கிளாமர் டான்ஸர், கபடி வீராங்கனை..! - தமன்னா அப்டேட்ஸ்

தமன்னா

தமன்னா படங்களின் அடுத்தடுத்த அட்டேட்ஸ்!

ரொமான்டிக் காதலி, ஆக்‌ஷன் நாயகி, கிளாமர் டான்ஸர், கபடி வீராங்கனை..! - தமன்னா அப்டேட்ஸ்

தமன்னா படங்களின் அடுத்தடுத்த அட்டேட்ஸ்!

Published:Updated:
தமன்னா

பாலிவுட்டில் தன் கரியரைத் தொடங்கிய தமன்னவுக்கு வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தது கோலிவுட்டும், டோலிவுட்டும்தான். தமிழ், தெலுங்கில் உள்ள இளம் நாயகர்களுடன் தமன்னா நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட்டானதால் முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் நடிக்க வாய்ப்பு வந்தது. தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ்.... தெலுங்கில் பவன் கல்யாண், மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், நாகசைதன்யா, ஜூனியர் என்.டி.ஆர் எனப் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவிட்டார்.

தமன்னா
தமன்னா

'பாகுபலி' படத்தில் அவந்திகா கேரக்டரில் இவர் நடித்திருந்தது இவரது கரியரில் வித்தியாசமானது. அவ்வப்போது பாலிவுட்டிலும் தலைகாட்டி வந்தார். ஹோம்லி, கிளாமர் என எந்தக் கதாபாத்திரம் என்றாலும் அதைச் சிறப்பாகச் செய்ய முயற்சி செய்வதே தமன்னாவின் பாலிஸி. இப்போது நிறைய இளம் நாயகிகள் சினிமாத்துறைக்குள் வந்தாலும் தமன்னாவின் மார்க்கெட் அப்படியேதான் இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என சைலன்டாகப் பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார், தமன்னா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிரஞ்சீவியுடன் இவர் நடித்த 'சைரா நரசிம்மா ரெட்டி' படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழில் `பெட்ரோமாக்ஸ்' எனும் ஹீரோயின் சென்ட்ரிக் ஹாரர் படம் அக்டோபர் 11ம் தேதி வெளியாக இருக்கிறது. தவிர, சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுடன் 'ஆக்‌ஷன்' படத்தில் ஆக்‌ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். நவாஸுதின் சித்திக்கின் சகோதரர் நவாப் சித்திக் இயக்கத்தில் 'போலே சுடியான்' என்ற படத்தில் ரொமான்டிக் காதலியாக நடித்து வருகிறார். மகேஷ்பாபு நடிக்கும் 'சரிலேரு நீக்கேவரு' படத்தில் ஒரு பாடலுக்கு கிளாமர் டான்ஸ் ஆடவிருக்கிறார். 'குயீன்' படத்தின் தெலுங்கு வெர்ஷன் 'தட் இஸ் மகாலட்சுமி' படமும் ரிலீஸுக்கு ரெடி. இப்படி ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டவேண்டுமென நினைத்து கதைகள் தேர்ந்தெடுத்து வருகிறார், தமன்னா.

தமன்னா
தமன்னா

இப்போது கோபிசந்த் நடிப்பில் ஸ்போர்ட்ஸ் டிராமா ஜானரில் உருவாகும் படத்தில் கபடி வீராங்கனைகளின் பயிற்சியாளராக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தை சம்பத் நந்தி என்பவர் இயக்கவிருக்கிறார். அதற்காக முறையான கபடி பயிற்சி பெறத் தயாராகி வருகிறார், தமன்னா. ஏற்கெனவே இவரது 'ரச்சா', 'பெங்கால் டைகர்' ஆகிய படங்களில் தமன்னா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism