Published:Updated:

“எனக்கு எந்த அடைமொழியும் வேணாம்!” - மறுத்த த்ரிஷா

த்ரிஷா
பிரீமியம் ஸ்டோரி
த்ரிஷா

என்னோட சொந்த ஊர் மதுரை. நான் வாழ்ந்த, படித்த ஏரியாவுல நான் பார்த்து அதிர்ந்த ஒரு விஷயத்தைத்தான் கதையா கொண்டு வந்திருக்கேன்.

“எனக்கு எந்த அடைமொழியும் வேணாம்!” - மறுத்த த்ரிஷா

என்னோட சொந்த ஊர் மதுரை. நான் வாழ்ந்த, படித்த ஏரியாவுல நான் பார்த்து அதிர்ந்த ஒரு விஷயத்தைத்தான் கதையா கொண்டு வந்திருக்கேன்.

Published:Updated:
த்ரிஷா
பிரீமியம் ஸ்டோரி
த்ரிஷா

த்ரிஷாவின் `தி ரோட்' படப்பிடிப்பு மதுரை- திருமங்கலம் சாலையில் பட்டப்பகலில் மும்முரமாக நடந்துவருகிறது. கொளுத்தும் அக்னி நட்சத்திர வெயிலிலும் ஆக்‌ஷனில் பேபியாகப் பளபளக்கிறார் த்ரிஷா. நமக்கு ஒரு `ஹாய்' சொல்லிவிட்டு, அறிமுக இயக்குநர் அருண் வசீகரன் பக்கம் கை காட்டுகிறார் புன்சிரிப்போடு!

`` `கில்லி' படப்பிடிப்பின் போதுதான் மதுரையில் அதிக நாள்கள் த்ரிஷா படப்பிடிப்பில் இருந்தாங்க. அதன்பிறகு எங்க படத்துக்காகத்தான் மதுரைக்கே வந்திருக்காங்க. கடந்த இருபது நாள்களா இந்தப் பகுதிகள்லதான் படப்பிடிப்பு போயிட்டிருக்கு. `இந்தக் கதை ஒரு உண்மைச் சம்பவம்கிறதால் கதை நிகழ்ந்த ரியல் லொகேஷன்களுக்கே நாம ஷூட் போயிடலாம்'னு சொல்லிட்டு அவங்க ஆர்வமா வந்தாங்க. அவங்களோட இன்வால்மென்ட்டுக்காகவே பெரிய நன்றி சொல்லிக்கறேன்'' -ஆனந்தமாகிறார் இயக்குநர் அருண் வசீகரன்.

“எனக்கு எந்த அடைமொழியும் வேணாம்!” - மறுத்த த்ரிஷா
“எனக்கு எந்த அடைமொழியும் வேணாம்!” - மறுத்த த்ரிஷா

``மீண்டும் ஹீரோயின் சென்ட்ரிக் படத்தில் த்ரிஷா... எப்படி இது சாத்தியமாச்சு?’’

``இந்தக் கதை ரெடியானதும் நிறைய ஹீரோயின்கள்கிட்ட சொல்லியிருப்பேன். எல்லாருமே ‘கதை நல்லா இருக்கு, ஆனா...'ன்னு தயங்கினாங்க. ஏன்னா இது முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள படம்னு சொல்லிட முடியாது. த்ரிஷாவுக்கு முக்கியத்துவம் இருக்கறது போலவே `சார்பட்டா பரம்பரை' டான்ஸிங் ரோஸ் சபீர் கதாபாத்திரத்திற்கும் சமமான முக்கியத்துவம் இருக்கு. ஹீரோயின் தாண்டியும் இன்னொரு கேரக்டருக்கு சமமான முக்கியத்துவம் இருக்குதுன்னுதான் பல ஹீரோயின்களும் இந்தக் கதையில நடிக்கத் தயங்கினாங்க.

த்ரிஷா கால்ஷீட் வாங்குறதுதான் கஷ்டமா இருக்கும்னு நினைச்சேன். ஏன்னா, முதன்முதலா அவங்ககிட்ட பேசுறப்ப `என்கிட்ட இப்ப கால்ஷீட் இல்லீங்க'ன்னு சொல்லிட்டாங்க. கொரோனா லாக்டௌன்களால ஷூட்டிங் பிரேக் ஆன அவங்களோட படங்களின் ஷூட் எல்லாம் மறுபடியும் ஆரம்பிச்சதால அப்படிச் சொல்லியிருக்காங்க. `நீங்க கதையைப் படிச்சுப் பாருங்க’ன்னு சொல்லி அவங்ககிட்ட பவுண்டட் ஸ்கிரிப்ட்டைக் கொடுத்தேன். `நீங்க மூணு மாசம் காத்திருக்க முடியுமா?’ன்னு கேட்டாங்க. நாங்களும் காத்திருந்தோம். மறுபடியும் அவங்ககிட்ட பேசும் போது கதையோட ஒவ்வொரு வரியையும் சிலாகிச்சுப் பாராட்டினாங்க. உடனே ஷூட் கிளம்பிட்டோம்.''

“எனக்கு எந்த அடைமொழியும் வேணாம்!” - மறுத்த த்ரிஷா
“எனக்கு எந்த அடைமொழியும் வேணாம்!” - மறுத்த த்ரிஷா
“எனக்கு எந்த அடைமொழியும் வேணாம்!” - மறுத்த த்ரிஷா

``அப்படி என்ன கதை, கொஞ்சம் சொல்லுங்களேன்..?’’

``என்னோட சொந்த ஊர் மதுரை. நான் வாழ்ந்த, படித்த ஏரியாவுல நான் பார்த்து அதிர்ந்த ஒரு விஷயத்தைத்தான் கதையா கொண்டு வந்திருக்கேன். சென்னையில ஆரம்பிச்சு மதுரையில் முடியுது இந்தக் கதை. சென்னைப் பொண்ணு, அவங்க மதுரைக்கு ஏன் போனாங்க, அவங்களுக்கு அங்கே என்ன நேர்ந்தது, எதுக்காக ரிவென்ஞ்ச் எடுக்கறாங்க? இப்படிப் போகும் கதை. இந்தப் படத்தோட டைட்டிலுக்குக் கீழே Revenge in 462 kms-னு இருக்கும். சென்னையிலிருந்து மதுரைக்கான தூரமே 462 கி.மீ-னு சப் டைட்டில் வச்சிருக்கோம். த்ரிஷா - சபீர் இவங்க ரெண்டு பேரையும் இணைக்கற ஒரு கதாபாத்திரமா ரோட் இருக்கு. அதனாலதான் இப்படி ஒரு டைட்டில் வச்சிருக்கோம். ஒவ்வொருத்தரோட வலிகளுக்குப் பின்னாடியும் நிச்சயம் ஒரு காரணம் இருக்கும். அப்படி தன்னோட வலிக்கான காரணத்தைத் தேடிப் போற ஒரு பெண்ணாக த்ரிஷா நடிக்கறார். `தி ரோட்'னு டைட்டில் வச்சதால, இது பயணங்களைச் சொல்லும் கதைன்னு சுருக்கிட வேண்டாம். ஆக்‌ஷன், த்ரில்லர், சஸ்பென்ஸ், எமோஷனல்னு எல்லாம் இந்தக் கதைக்குள் இருக்கு. படத்துல மியா ஜார்ஜ் முக்கியமான ரோல்ல நடிக்கறாங்க. சந்தோஷ் பிரதாப், வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா தவிர நேஹான்னு ஒரு திருநங்கையையும் கணேஷ் கோபிநாத் என்கிற புதுமுகத்தையும் அறிமுகப்படுத்துறேன்.

இதோட தயாரிப்பாளர் ஏஏஏ சினிமாஸ். நிறுவனத்துல நான் கமிட் ஆகி, பல மாதங்களுக்குப் பிறகுதான் ஹீரோயின் கிடைச்சாங்க. நான் திரைப்படக் கல்லூரியில் படிக்கும்போது ஒளிப்பதிவாளர் கே.ஜி.வெங்கடேஷ் என் கிளாஸ்மேட். அதன்பிறகு நான் கல்லூரி ஒன்றில் பேராசிரியர் ஆனேன். நான் இயக்கிய குறும்படம் `மஞ்சள் உலோகம்', விகடனின் வரவேற்பறைப் பகுதியில்கூட வந்திருக்கிறது. அதன்பிறகு கே.ஜி.வெங்கடேஷ், `சதுரங்க வேட்டை', `பொன்மாணிக்கவேல்'னு படங்கள் பண்ணினார். இந்தப் படத்துக்குப் பெரிய பலமா சாம் சி.எஸ்ஸின் இசை இருக்கும். மலையாள ஸ்டண்ட் இயக்குநர் ஃபீனிக்ஸ் பிரபுவைத் தமிழுக்குக் கொண்டு வர்றோம். ஹீரோயின் சென்ட்ரிக்காக த்ரிஷா நடித்த படங்களிலேயே இந்தப் படம் பெரிய பட்ஜெட் ஆக இருக்கும்.''

“எனக்கு எந்த அடைமொழியும் வேணாம்!” - மறுத்த த்ரிஷா
“எனக்கு எந்த அடைமொழியும் வேணாம்!” - மறுத்த த்ரிஷா

``என்ன சொல்றார் டான்ஸிங் ரோஸ்..?’’

``அவரோட ஒர்க் பண்றது பிரமிப்பா இருக்கு. இருபது நாள்கள் அவரோடு வேலை செய்ததை நிறைவான விஷயமா கருதுறேன். ஹாலிவுட்ல `ஸ்பிலிட்'னு ஒரு படம். `அந்நியன்' விக்ரம் போல 23 பர்சனாலிட்டியில வருவார் ஹீரோ. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பர்சனாலிட்டியாகத்தான் வருவார். அதைப்போல சபீரைச் சொல்லலாம். கதையை உள்வாங்கியதோடு அதிலேயே நாள் முழுக்கப் பயணிக்கறதுல அவரை மிஞ்ச முடியாது. இன்னிக்கு அழுற சீன் எடுக்கறோம்னா, அந்த நாள் முழுக்கவே தேம்பித் தேம்பி அவரால அழமுடியும். நகைச்சுவை சீன் எடுக்கப்போறோம்னா அன்னிக்கு முழுக்க காரணமே இல்லாமல் சிரிச்சுக்கிட்டே இருப்பார். அப்படி ஒரு திறமை அவர்கிட்ட இருக்கு. இந்தப் படம் அவரை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும்னு நம்பிக்கை இருக்கு.''

``ஒரு அறிமுக இயக்குநரா த்ரிஷாகிட்ட பிடிச்ச விஷயங்கள் என்ன?’’

``அவங்கதான் அறிமுக ஹீரோயின் போல, ஒர்க் பண்றாங்க. நான் யார்கிட்டேயும் உதவியாளரா ஒர்க் பண்ணல. ஆனா, நான் பத்துப் படங்கள் இயக்கின ஆளா என்னைக் கருதி, டைரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆக அவங்க இருக்கறது ஆச்சரியமா இருக்கு. இந்தப் படத்தோட கதையை அவங்ககிட்ட சொல்றப்ப, `என்கிட்ட கதை சொல்லவர்றவங்க எனக்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்கறதா சொல்வாங்க. நீங்கதான் சபீர் கேரக்டருக்கும் சமமான முக்கியத்துவம் இருக்கறதா சொல்லியிருக்கீங்க. எனக்கு சவாலா எதிர்க் கதாபாத்திரம் இருந்தால்தான் என்னோட கதாபாத்திரம் வலுவா இருக்கும்னு நம்புறேன்'ன்னாங்க.

அருண் வசீகரன் - த்ரிஷா
அருண் வசீகரன் - த்ரிஷா
“எனக்கு எந்த அடைமொழியும் வேணாம்!” - மறுத்த த்ரிஷா

மதுரை, திருமங்கலம், விருதுநகர் இன்டீரியர் இடங்கள்தான் கதைக்களம். த்ரிஷா நினைச்சிருந்தா இந்த இடங்களை சென்னையில் உள்ள லொக்கேஷன்களிலோ அல்லது செட் போட்டோ எடுக்கச் சொல்லியிருக்கலாம். ஆனா, அவங்க அப்படிச் சொல்லல. `கில்லி'க்குப் பிறகு மதுரைக்குப் போறேன். அங்கே வெயில் அதிகம்னு தெரியும். அங்கே வெயில்ல கறுத்தால்கூடப் பரவாயில்ல. கதைக்கான இடங்களிலேயே நடிக்கறேன். கதைதான் முக்கியம். கறுப்பானாக்கூட, அந்தக் கலரை திரும்பக் கொண்டு வந்திடுவேன்... ஸோ, தைரியமா மதுரையில ஷூட் வச்சுக்கலாம்னு நம்பிக்கை கொடுத்து நடிக்கறாங்க.

ஸ்பாட்ல அவங்ககிட்ட ஒருநாள் பேசறப்போ, உங்க பெயருக்கு முன்னால `கார்ஜியஸ் குயின்’ அல்லது `சவுத் குயின்’ இதுபோல எதாவது பட்டம் கொடுக்கலாமான்னு கேட்டேன். அப்ப சிம்பிளா அவங்க ஒரு வார்த்தை சொன்னாங்க. `பட்டம் கொடுக்கறதை ரசிகர்கள், மக்கள் பார்த்துப்பாங்க. பிலிம் மேக்கர்ஸ் அதைப் பண்ணக்கூடாது. அப்படிச் செய்தா படத்தின் தரம் பாதிக்கும்'னாங்க. ஆச்சரியமாகிடுச்சு. `த்ரிஷாங்கற பெயரே போதும். எதிர்காலத்துலேயும் யாராவது பட்டம் கொடுத்தால்கூட அதை ஏத்துக்க மாட்டேன்'னு சொன்னாங்க.'' ஆச்சரியமாகிறார் அருண்.