Published:Updated:

“மாதவன் சாரின் அன்பு, என் வைராக்கியத்தை உடைச்சுடுச்சு!” - நடிகை வைஷ்ணவி கம்பேக்

கணவருடன் வைஷ்ணவி
பிரீமியம் ஸ்டோரி
கணவருடன் வைஷ்ணவி

டப்பிங் வேலையில எனக்கு உதவியாளரா என் பெரிய பொண்ணும் வேலை செஞ்சா. என் கணவரும் நானும் சேர்ந்து வேலை செஞ்ச ரெண்டாவது படம் இதுதான்

“மாதவன் சாரின் அன்பு, என் வைராக்கியத்தை உடைச்சுடுச்சு!” - நடிகை வைஷ்ணவி கம்பேக்

டப்பிங் வேலையில எனக்கு உதவியாளரா என் பெரிய பொண்ணும் வேலை செஞ்சா. என் கணவரும் நானும் சேர்ந்து வேலை செஞ்ச ரெண்டாவது படம் இதுதான்

Published:Updated:
கணவருடன் வைஷ்ணவி
பிரீமியம் ஸ்டோரி
கணவருடன் வைஷ்ணவி

“ஸ்டார்ட்டிங் டிரபிள்... இதுதான் என் ப்ளஸ், மைனஸ் ரெண்டுமே! ‘இது சரிவருமா?’னு ஆயிரம் முறை யோசிப்பேன். நம்பி முடிவெடுத்துட்டா, எந்த விஷய மானாலும் அதுல முழுமையா என்னை அர்ப்பணிச்சுடுவேன். நடிக்க வந்தது, சினிமா வேண்டாம்னு முடிவெடுத்து, மீடியாவுல தலைகாட்டாமலேயே வாழ்ந்தது, மாதவன் சாரோட படத்துல இப்போ வருஷக்கணக்குல உழைச்சது வரைக்கும் என் வாழ்க்கையில பல விஷயங்களும் இப்படித் தான் நடந்துச்சு” - 25 ஆண்டுகளுக்குப் பிறகு, தான் கொடுக்கும் பிரத்யேக பேட்டி என்ப தாலோ என்னவோ, உற்சாக இன்ட்ரோ வுடன் ஆரம்பிக்கிறார் வைஷ்ணவி.

சீனியர் நடிகை செளகார் ஜானகியின் பேத்தியான இவர், 1990-களில் பிரபலமான நடிகை. ‘தர்மதுரை’, ‘அண்ணாமலை’, ‘ரோஜா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த வைஷ்ணவி, மாதவன் நடித்து இயக்கி யிருக்கும் ‘ராக்கெட்ரி’ படத்தின் மூலம் சினிமாவில் கம்பேக் கொடுத்திருக்கிறார்.

 பாட்டி, அம்மா, மகள்களுடன் வைஷ்ணவி...
பாட்டி, அம்மா, மகள்களுடன் வைஷ்ணவி...

“சினிமாவுல நடிக்கணும்னு நான் விரும்பினதேயில்லை. தேடி வந்த வாய்ப்புக்காக, ‘தலை வனுக்கோர் தலைவி’ படத்துல அறிமுகமானேன். அதுல, என் கணவர் அரவிந்த் கமலநாதன்தான் ஒளிப்பதிவாளர். அந்தப் படம் பெரிசா போகாட்டி யும், என் குடும்ப வாழ்க் கைக்கு ஓப்பனிங் கொடுத்துச்சு. ஏன்னா, முதல் படத்துலயே அவருடன் எனக்குக் காதல் மலர்ந்துச்சு. ஒளிவுமறை வில்லாம வீட்டுல எங்க காதலைச் சொல்லிட்டு தொடர்ந்து ரெண்டு பேரும் சினிமாவுல பிஸியா வேலை செஞ்சோம்...” வெட்கத் துடன் சொல்பவருக்கு, 1996-ல் திருமணம் நடை பெற்றது.

மூத்த மகள் பிறந்ததும், ‘இனி சினிமாவே வேண்டாம்’ என்று இருந்தவரின் வைராக்கியத்தை, நடிகர் மாதவனின் அன்புக்கட்டளை தகர்த்திருக் கிறது.

“ஜானகி பாட்டியோட தைரியம், எங்க குடும்பத்துல எல்லோருக்கும் பெரிய இன்ஸ்பிரேஷன். ஆண்களுக்கு நிகராகத்தான் பெண்களும் இருக்கணும்னு சொல்லிக் கொடுத்து எங்களை வளர்த்தாங்க. என் வீட்டுல எல்லாமே நான் வெச்சதுதான் சட்டம். இதைப் பெருமிதமா சொல்லுற அளவுக்கு, எல்லா விஷயத் துலயும் எனக்கு முழு சுதந்திரம் கொடுப்பார் என் கணவர். பிள்ளைகளின் எதிர்காலம், குடும்ப நிர்வாகம், பொருளா தாரம்னு எல்லாத்துலயும் என்னை முடிவெடுக்கச் சொல்லி ஊக்கப்படுத்து வார்.

“மாதவன் சாரின் அன்பு, என் வைராக்கியத்தை உடைச்சுடுச்சு!” - நடிகை வைஷ்ணவி கம்பேக்

கல்யாணத்துக்கு அப் புறமா, குடும்ப பொறுப்பு கள்ல மட்டுமே முழுமையா என்னை ஈடுபடுத்திக் கிட்டேன். என் கணவர், ‘ராக்கெட்ரி’ படத்துல டெக்னிக்கல் டைரக்டரா வேலை செஞ்சார். மூணு வருஷத்துக்கு முன்பு என் அப்பா தவறினப்போ, இரங்கல் தெரிவிக்க எங்க வீட்டுக்கு மாதவன் சார் வந்திருந்தார். ‘பொண்ணுங்கதான் வளர்ந்துட் டாங்களே... இப்பயாச்சும் வீட்டைவிட்டு நீங்க வெளிய வந்துதான் ஆகணும். நம்ம படத்துல நீங்களும் வேலை செய்யறீங்க’னு என்மேல அதீத நம்பிக்கைவெச்சு சொன்னார். எனக்கு ஆஃப் ஸ்கிரீன் வேலைதான் இருக்கும்னு தெரிஞ்சதால சம்மதிச்சேன்.

‘ராக்கெட்ரி’யை, ஒரே நேரத்துல தமிழ், இந்தி, இங்கிலீஷ்ல தனித்தனியே படமாக்கி னோம். எனக்கு இந்தி, குஜராத்தி உட்பட பல மொழிகள் தெரியும். அதனால, இந்த மூணு மொழிகள்லயும் நடிகர்களின் உச்சரிப்பு, பாடி லாங்வேஜ் விஷயங்களைக் கவனிச்சுக்கிற ‘லாங்வேஜ் சூப்ரவைஸர்’ பொறுப்பை எனக்குக் கொடுத்தார் மாதவன் சார். எல்லா நடிகர்களையும் வரவெச்சு டயலாக் மற்றும் மொழிகளைச் சொல்லிக்கொடுத்தேன். இதுக்கான ரிஹர்சல் மட்டுமே பல மாதங்கள் நடந்துச்சு” - ‘ராக்கெட்ரி’யில் நுழைந்த கதையைக் கூறுபவர், இந்தப் படத்துக்காகத் தன் கணவருடன் மும்பையிலயே மூன்று வருடங்கள் தங்கியிருக்கிறார்.

 மாதவனுடன்...
மாதவனுடன்...

“இந்தப் படத்துக்காக ஆறு வருஷங்கள் மெனக்கெட்ட மாதவன் சாருடன், என் கண வரும் முழுமையா டிராவல் பண்ணினார். டெக்னிக்கல் பேனல்ல என் கணவர், நான், கோ-டைரக்டர் பிரஜேஷ்னு மூணு பேர் இருந்தோம். ஷூட்டிங்ல லாங்வேஜ், பாடி லாங்வேஜ் சார்ந்த விஷயங்களை நான் கவனிச்சுக்கிட்டேன்.

சவுண்டு, லைட்டிங் சம்பந்தமான வேலை களை என் கணவர் பார்த்துக்கிட்டார். டேக் முடிஞ்சதும் அடுத்தடுத்து நாங்க மூணு பேரும் ஓகே சொன்ன பிறகுதான் மாதவன் சார் முடிவெடுப்பார்.

நேர்த்தியான ப்ளானிங்கால, வெளி நாடுகள்ல ஷூட் செஞ்சதையெல்லாம் சேர்த்து 60 நாள்கள்லயே ஷூட்டிங் முடிச்சுட் டோம். குடும்ப நண்பர்ங்கிறதைத் தாண்டி, பிரமாதமான பாஸாகத்தான் மாதவன் சார் என்னை ஆச்சர்யப்படுத்தினார். ‘நீங்க எனக்கு சீனியர்’னு சொல்லி, என்னை ‘மேம்’னுதான் அவர் கூப்பிடுவார்...” - ரீ-என்ட்ரி வாய்ப்பில் தன்னை உற்சாகமாக ஈடுபடுத்திக்கொண்ட வைஷ்ணவிக்கு, ‘ராக்கெட்ரி’யில் டப்பிங் கோ-ஆர்டினேட்டர் பொறுப்புடன், தமிழ் மற்றும் தெலுங்கில் சிம்ரனுக்குக் குரல் கொடுக்கவும் வைத்திருக்கிறார் மாதவன்.

டப்பிங் வேலையில எனக்கு உதவியாளரா என் பெரிய பொண்ணும் வேலை செஞ்சா. என் கணவரும் நானும் சேர்ந்து வேலை செஞ்ச ரெண்டாவது படம் இதுதான். இதுல, அவருக்கும் எனக்கும் ஆரோக்கியமான மோதல்களும் வந்துச்சு. கரெக்‌ஷன் வேலை களுக்காக, ஆயிரம் முறைக்கும் அதிகமா ‘ராக்கெட்ரி’ படத்தைப் பார்த்தோம்.

பல வருஷமா எங்க குழுவினரின் சிந்தனை யில எந்நேரமும் ஓடிகிட்டிருந்த ‘ராக்கெட்ரி’ பட வேலைகள் இப்போ முடிவுக்கு வந்திடுச்சேன்னு நினைக்கிறப்போதான் வருத்தமா இருக்கு. அதாவது, காலேஜ் ஃபைனல் இயர், கடைசி நாள் மாதிரியான ஒரு வருத்தம்” என்கிறார் ஏக்கத்துடன்.

“குழந்தைங்க படிப்பு விஷயத்துல மட்டும் நான் கண்டிப்பான அம்மா. குறைந்தபட்சம் ஒரு டிகிரியாச்சும் முடிச்சுட்டு, எந்த முடிவை வேணா எடுக்கலாம்னுதான் மகள்களை வளர்த்திருக்கோம். பெரியவ அதிதி அரவிந்த், வெளிநாட்டுல மாஸ்டர் டிகிரி படிக்கப்போறா. சின்னவ மேக்னா அரவிந்த், சென்னையில பி.காம் படிக்கிறா. குடும்பத்தினரின் சப்போர்ட்டுடன் என் அடுத்த ப்ளானிங்கை சீக்கிரமே செயல்படுத்தப் போறேன்” என்று உற்சாகப் பாய்ச்சலுடன் முடிக்கிறார் வைஷ்ணவி.

 சிம்ரனுடன்...
சிம்ரனுடன்...

''ஒரே நாளில் ஷாருக் கான்...

“பாலிவுட் நடிகர் ஷாருக் கான் சாரின் பெரிய ரசிகை நான். ‘ராக்கெட்ரி’ படத்தோட தமிழ் வெர்ஷன்ல சூர்யா நடிச்ச கேமியோ ரோல்ல, இந்தியில ஷாருக் சார் நடிக்கிறார்னு தெரிஞ்சதும் ரொம்பவே உற்சாகமாகிட்டேன். இந்தப் படத்துல நான் வேலை செய்ய இதுவும்கூட ஒரு காரணம். பயிற்சி எடுத்துட்டு வந்தவர், கடகடனு ஒரேநாள்ல வேலையை முடிச்சுக் கொடுத்தார்” என்று வியப்புடன் சொல்கிறார் வைஷ்ணவி.