Published:Updated:

"என்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னு எனக்கே புரியல!" - மனம் திறக்கும் வனிதா

யாருக்கும், யார் மேலேயும் கோபம் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அவங்க யார் சொத்தையும் நான் அபகரிக்கலை.

வனிதா
வனிதா

"ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என் மூத்த பொண்ணு ஜோவிகா ஏஜ் அட்டென்ட் பண்ணியிருக்கா. அதுக்காக வீட்டுல சின்னதா ஒரு ஃபங்ஷன் ஏற்பாடு பண்ணியிருந்தேன். தாய்மாமன்கிற முறையில் சேரன் அண்ணா வந்தார். அண்ணான்னு பேருக்காக மட்டும் கூப்பிடல. எனக்கு ஏதாவதுன்னா, என் அண்ணா வருவார்" என்று மகிழ்ச்சியாகப் பேசுகிறார் வனிதா விஜயகுமார். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/33z7HlR

"எல்லாருக்கும் குடும்பம்தான் பெரும் துணையா இருக்கும். துரதிஷ்டவசமா என் வாழ்க்கையில் அப்படி நடக்கல. அப்பா அம்மாவுக்குத்தான் சினிமாவுல நண்பர்கள் அதிகம். எனக்கு 'பிக் பாஸ்' மூலமா புது சொந்தங்கள் கிடைச்சிருக்கு. லாஸ்லியாவை என் சொந்த தங்கச்சியாத்தான் பார்க்கிறேன்."

கணவன் மனைவி ரெண்டு பேரும் விட்டுக்கொடுத்து வாழ்ற வாழ்க்கைமேல எனக்கு இப்பவும் நம்பிக்கை இருக்கு

வாழ்க்கையில் எடுத்த தவறான முடிவு?

"நிச்சயம் என் திருமண வாழ்க்கைதான். மெச்சூரிட்டி இல்லாத வயசுல எனக்குத் திருமணம் நடந்தது. என் குழந்தைகள் பிறந்ததும் அவங்களுக்காக வாழணும்னு தோண ஆரம்பிச்சது. அட்வெஞ்சர் நிறைஞ்ச வாழ்க்கை என்னோடது. ஆனா, அதுக்காக நான் வருத்தப்பட்டதில்லை."

திருமணம் பற்றிய புரிதல் என்ன?

"கணவன் மனைவி ரெண்டு பேரும் விட்டுக்கொடுத்து வாழ்ற வாழ்க்கைமேல எனக்கு இப்பவும் நம்பிக்கை இருக்கு. என்னை மாதிரி வாழ்க்கையில் அடிபட்டவங்களுக்கு மட்டும்தான் இது புரியும். வெளியே இருந்து கமென்ட் பண்றது ஈஸி."

குடும்பத்தினருக்கு உங்க மேல என்ன கோபம்?

வனிதா
வனிதா

"யாருக்கும், யார் மேலேயும் கோபம் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அவங்க யார் சொத்தையும் நான் அபகரிக்கலை. என் சொத்தைதான் அவங்க வாங்கியிருக்காங்க. என் பிள்ளையை என்கிட்ட இருந்து பிரிக்க பார்த்தாங்க. ஆக்சுவலா, நான்தான் அவங்கமேல கோபப்படணும். என்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னு எனக்கே புரியல. சினிமாவைச் சேர்ந்த எங்க குடும்ப நண்பர்கள் பலர் அப்பாகிட்ட பேசியிருக்காங்க. அவர் தனியா ஒரு கதை சொல்லியிருக்கார். மொத்தத்துல சொல்றதுக்கு எதுவும் இல்லை!"

> 'சமீபத்தில் ஷேர் பண்ணியிருந்த உங்க குடும்பத்தின் குரூப் போட்டோ பத்தி..?' 'மீடியா முன்னாடி பொண்ணுங்களோட நின்னு சண்டை போட்டது தப்பா தெரியலையா?' முதலான கேள்விகளுக்கு வனிதா அளித்த விரிவான பதில்களை அவள் விகடன் இதழில் வாசிக்க > ரஜினி அங்கிள் சொன்னதைச் செய்கிறேன்... நட்புதான் என் குடும்பம்! https://www.vikatan.com/news/cinema/exclusive-interview-with-actress-vanitha

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2MuIi5Z |