Published:Updated:

``இந்தக் கேள்விக்கு நான் ஒரு மொரட்டு சிங்கிள்னு பதில் சொல்லிக்கிறேன்!" - வெண்பா

Actress Venba
Actress Venba

`அந்த மெசேஜ் பண்ணும்போது, அவங்க பெரிய ஹீரோயின். அவங்க எனக்கு மெசேஜ் பண்ணி அதைச் சொல்லணும்னு அவசியமே இல்லை. இருந்தாலும் என்னை ஞாபகம் வச்சிருந்து பாராட்டுனாங்க...'

குழந்தை நட்சத்திரம் பேபி கீர்த்தியாகவும், குட்டி தொகுப்பாளினி கீர்த்தியாகவும் வலம் வந்தவர், தற்போது ஹீரோயின் வெண்பாவாகப் பல படங்களில் நடித்து வருகிறார். அவரைச் சந்தித்துப் பேசினோம்.

ஹீரோயின் வெண்பாவை எங்களுக்கு தெரியும்; பேபி கீர்த்தியைப் பற்றிச் சொல்லுங்க?

வெண்பா
வெண்பா

``நிறைய படங்கள்ல குழந்தை நட்சத்திரமா நடிச்சிருக்கேன். அப்போ என் பெயர் பேபி கீர்த்திதான். `கஜினி’, `சிவகாசி’, `கற்றது தமிழ்’, `ஜாம்பவான்’னு பல படங்களில் என் கேரக்டர் மனசுல நிக்கிற மாதிரியும் நடிச்சிருக்கேன். `கஜினி’யில அசினுக்கு கிஸ் கொடுத்த குட்டிப் பொண்ணு நான்தான். `சிவகாசி’ படத்துல வர்ற ப்ளாஷ்பேக் போர்ஷன்ல விஜய் சாரோட தங்கச்சி கேரக்டரில் நான்தான் நடிச்சேன். `கற்றது தமிழ்’ல அஞ்சலி மேடமோட சின்ன வயசு கேரக்டர்லேயும் நான்தான் நடிச்சிருந்தேன். அந்தப் படத்தோட `நெசமாத்தான் சொல்றீயா’ங்கிற டயலாக் ரொம்பவே ஃபேமஸ் ஆச்சு. குழந்தை நட்சத்திரமா பல படங்கள்லேயும், தொகுப்பாளினியாவும் இருந்துட்டு சின்ன ப்ரேக் எடுத்துக்கிட்டேன். அதுக்கப்பறம் `காதல் கசக்குதய்யா’ படத்துல இருந்து என்னோட பெயரை வெண்பானு மாத்திட்டு, ஹீரோயினா நடிச்சிட்டிருக்கேன்.’’

குழந்தை நட்சத்திரமா இருந்து ஹீரோயினாகிட்டாலும், தொடர்ந்து ஸ்கூல் பொண்ணாகவே நடிச்சிட்டு இருக்கீங்களே?

வெண்பா
வெண்பா

``சின்ன வயசுல அதிகமா ஷூட்டிங் போனதால, பல நாள்கள் நான் ஸ்கூலுக்குப் போனதே இல்லை. `தாத்தா இறந்துட்டார், டைஃபாய்டு காய்ச்சல்’னு நிறைய காரணங்கள் சொல்லி லீவ் போட்டுதான் ஷூட்டிங் போயிருக்கேன். அதெல்லாம் பொய்னு படம் ரிலீஸாகிக் காட்டிக்கொடுத்துடும். அதுக்கப்பறம் எனக்கு உண்மையா காய்ச்சல் வந்தும் என் ஸ்கூல்ல நம்பவே இல்லை. இப்படி ஸ்கூல் லைஃப்பை மிஸ் பண்ண எனக்கு, முதல் படத்துலேயே ஸ்கூல் பொண்ணா நடிக்க வாய்ப்பு வந்தப்போ செம ஜாலியா இருந்துச்சு. ஆனா, அடுத்து இதே மாதிரி கேரக்டர்ல நடிக்கக்கூடாதுனு இருந்தேன். ஆனா, எனக்கு வந்த வாய்ப்புகள் எல்லாமே ஸ்கூல் கேரக்டராகவே இருந்துச்சு.

தொடர்ந்து அதே மாதிரியான கேரக்டர்கள் வந்தனால, அதுல நல்ல கதையை மட்டும் செலக்ட் பண்ணி நடிக்கலாம்னு 'பள்ளிப் பருவத்திலே’ படத்துலேயும், இப்போ ரிலீஸாகப்போற ’மாயநதி’ படத்துலேயும் நடிச்சேன். ஆனா, ’மாயநதி’ படத்துல ஸ்கூல் போர்ஷன் கொஞ்ச நேரம்தான் வரும். ஒரு கட்டத்துக்கு மேல என் கேரக்டர் ஸ்கூல் பொண்ணுல இருந்து வெளில வந்துடும். இந்தப் படத்துக்கு அப்பறம் இனிமேல் எனக்கு வர்ற ஸ்கூல் பொண்ணு கேரக்டர்கள் அதிகமா இருக்காதுனு நினைக்கிறேன். அப்படி வந்தாலும் அதைப் பண்ணக்கூடாதுனு முடிவுல இருக்கேன். இப்போ ரெண்டு காதல் கதைகள் கேட்டு கமிட் பண்ணியிருக்கேன். அதுல ஸ்கூல் போர்ஷன்ஸ் இருக்காது.’’

குழந்தை நட்சத்திரத்துல இருந்து ஹீரோயினானதுக்கு அப்பறம் கிடைச்ச பாராட்டுகளில் மறக்க முடியாதது எது?

வெண்பா
வெண்பா

``நான் கலைஞர் டிவியில் `ஓடி விளையாடு பாப்பா’ ஷோவுக்குத் தொகுப்பாளினியா இருந்தேன். முதல் ரெண்டு சீசன்களை நான்தான் தொகுத்து வழங்கினேன். அதே சமயத்துலதான் `மானாட மயிலாட’ நிகழ்ச்சியும் கலைஞர் டிவியில் போயிட்டிருந்தது. அந்த சீசனில்தான் ஐஸ்வர்யா ராஜேஷ் டான்ஸ் பண்ணிட்டிருந்தாங்க. நான் ஆங்கரிங் பண்றதைப் பார்த்துட்டு, `நீ ஒரு நாள் கண்டிப்பா ஹீரோயினாகிடுவ’னு சொல்லிட்டே இருப்பாங்க. அதே மாதிரி நான் ஹீரோயினா நடிச்ச `காதல் கசக்குதய்யா’ படத்தைப் பார்த்துட்டு, `நல்லா நடிச்சிருக்க’னு எனக்கு ட்விட்டர்ல மெசேஜ் பண்ணியிருந்தாங்க. அந்த மெசேஜ் பண்ணும்போது, அவங்க பெரிய ஹீரோயின். அவங்க எனக்கு மெசேஜ் பண்ணி அதைச் சொல்லணும்னு அவசியமே இல்லை. இருந்தாலும் என்னை ஞாபகம் வெச்சிருந்து பாராட்டினாங்க. அதை என்னால மறக்கவே முடியாது.’’

ஜி.வி.பிரகாஷின் ’ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தில் கமிட்டான கதை?

ஆயிரம் ஜென்மங்கள்
ஆயிரம் ஜென்மங்கள்

`` `ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தோட ஆடிஷன் போய்தான் இந்தப் படத்தில் கமிட்டானேன். முதல்ல ஒரு சேட்டைக்காரப் பொண்ணா துறுதுறுனு இருக்கிற மாதிரியான கேரக்டரில்தான் கமிட்டானேன். அது சின்ன ரோல்தான். அதுக்கப்பறம் அந்த கேரக்டரில் வேற ஒரு நடிகை கமிட் பண்ணிட்டாங்க. ’என்னடா, வந்த கேரக்டரும் போயிடுச்சே’னு நினைச்சிட்டு இருந்தப்போ, படத்தோட செகண்டு ஹீரோயின் ரோலையே எனக்குக் கொடுத்தாங்க. இதுல படம் முழுக்க வருவேன். நார்மல் லுக் ப்ளஸ் பேய் லுக்னு ரெண்டு லுக்ல நடிச்சிருக்கேன். பேயா நடிக்கிறது கொஞ்சம் சிரமமாதான் இருந்துச்சு. ஆனா, அந்த கேரக்டருக்காகப் பெருசா எந்த ஹோம்வொர்க்கும் பண்ணலை. சில பேய் போட்டோ பார்த்தேன்; பேய் பட காட்சிகள் பார்த்தேன். அவ்வளவுதான். பேய் படம்னா நல்லா கத்தணும்னு மட்டும் கத்துக்கிட்டேன். படமும் ரொம்ப நல்லா வந்திருக்கு. ஜி.வி.பிரகாஷ்கூட இதான் எனக்கு முதல்படம். அவர் ஹீரோங்கிற பில்டப் இல்லாம பழகுவார். எழில் சார் மாதிரியான சீனியர் டைரக்டரோட படத்துல நடிக்கும்போது நிறைய கத்துக்கலாம். இதெல்லாமே இந்தப் படம் மூலமா எனக்குக் கிடைச்சது.’’

காதலர் தினம் வரப்போகுது, உங்களோட காதல் அனுபவத்தைப் பகிர்ந்துக்கோங்க?

வெண்பா
வெண்பா

``காதல் அனுபவமா... அதெல்லாம் எனக்கு இல்லை பாஸ். ஸ்கூல் படிக்கும்போது ஒண்ணு, ரெண்டு பேர் லவ் பண்றேன்னு சொன்னாங்க. அதையும் நான் ஓகே பண்ணிக்கலை. நானும் யார்கிட்டேயும் ப்ரபோஸ் பண்ணது இல்லை. அதுனால, இந்தக் கேள்விக்கு நான் ஒரு மொரட்டு சிங்கிள்னு பதில் சொல்லிக்கிறேன்.’’

பின் செல்ல