Published:Updated:

அப்போ இப்போ - 9 : ``என் மீதான அந்த எண்ணத்தை மாத்தணும்!" - ரீ என்ட்ரி கொடுக்கும் விசித்ரா

விசித்ரா

ரொம்ப பிரபலமா இருந்தப்பவே எனக்கு திருமணமும் ஆகிடுச்சு. திருமணத்துக்குப் பிறகு நடிக்க வேண்டாம்னுலாம் எந்த முடிவும் எடுக்கல. மூணு பசங்க பிறந்துட்டாங்க. பிறகு, அவங்களை வளர்க்கிறதுக்கே நேரம் சரியா இருந்துச்சு.

அப்போ இப்போ - 9 : ``என் மீதான அந்த எண்ணத்தை மாத்தணும்!" - ரீ என்ட்ரி கொடுக்கும் விசித்ரா

ரொம்ப பிரபலமா இருந்தப்பவே எனக்கு திருமணமும் ஆகிடுச்சு. திருமணத்துக்குப் பிறகு நடிக்க வேண்டாம்னுலாம் எந்த முடிவும் எடுக்கல. மூணு பசங்க பிறந்துட்டாங்க. பிறகு, அவங்களை வளர்க்கிறதுக்கே நேரம் சரியா இருந்துச்சு.

Published:Updated:
விசித்ரா
`விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்...!' பாடலை இப்ப பிளே பண்ணினா கூட 90ஸ் கிட்ஸ் துள்ளி குதிச்சு கொண்டாட ஆரம்பிச்சிடுவாங்க. பெரும்பாலான இளைஞர்களுக்கு அந்தப் பாடலில் ஆடியிருக்கும் விசித்ரா மிகவும் பிடித்த நடிகை.

வெறும் கிளாமர் மட்டும்தான் இவருடைய பலமா என உடனே முன் முடிவை எடுத்துடாதீங்க மக்களே...! `பொண்ணு வீட்டுக்காரன்' திரைப்படத்தில் வருகிற டைட்டானிக் காமெடியாக இருக்கட்டும், `முத்து' படத்தில் வருகிற `நாதா'வாக இருக்கட்டும் காமெடி டிராக்கிலும் தனக்கென ஓர் இடத்தைப் பதிவு செய்தவர்.. தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் `கார்த்திகை தீபம்' தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். விகடன் `அப்போ இப்போ' தொடருக்காக அவரைச் சந்தித்தோம்.

விசித்ரா
விசித்ரா

``சினிமாவில் நடிச்சே ஆகணும் என்கிற எண்ணமெல்லாம் கிடையாது. அப்பா சினிமா இண்டஸ்ட்ரியில் இருந்ததனால அப்பா கூட ஷூட்டிங்கெல்லாம் போயிருக்கேன். அந்த காலத்து மேக்கப் எல்லாம் ரொம்பவே வித்தியாசமா இருக்கும். பெருசு, பெருசா கண்ணெல்லாம் வரைஞ்சிருப்பாங்க. அதெல்லாம் பார்த்து ரசிச்சிருக்கேன். நாம நேரில் பார்க்கிறதுக்கும் திரையில் பார்க்கிறதுக்கும் மாற்றங்கள் இருக்கு. ஆர்ட்டிஸ்னா வேற மாதிரி இருப்பாங்கன்னு தெரிஞ்சுகிட்டேன்.

இடையில் சினிமாவில் நடிக்க நிறைய ஆஃபர் வர ஆரம்பிச்சது. அதுக்கப்புறம் சரி பண்ணினா என்னன்னு தான் நடிக்க சம்மதிச்சேன். அப்போதெல்லாம் அவ்வளவு பக்குவம் கிடையாது. வர்ற வாய்ப்புகளை எப்படி செலக்ட் பண்ணனும்னு கூட அப்போதெல்லாம் தெரியாது.

கிளாமர் ஆர்ட்டிஸ்ட்னு சொன்னா நான் வந்த சமயத்துல நான் மட்டும்தான் இருந்தேன்.  நான் பண்ணின படங்கள், பாட்டுன்னு எல்லாமே ஹிட் ஆகவும் அடுத்தடுத்து என்னை கேட்க ஆரம்பிச்சாங்க. நான் நடிச்ச காமெடி டிராக் கூட பயங்கரமா கிளிக் ஆச்சு. பொதுவாகவே காமெடியைப் பொறுத்தவரைக்கும் சில காமெடி மனசுல நிற்கும்... சில காமெடி நிக்காது. முத்து பட காமெடியெல்லாம் இன்னமும் மக்கள் மனசுல நிற்குது.

விசித்ரா
விசித்ரா

`தலைவாசல்' படம் பயங்கர ஹிட். அந்தப் படத்துக்குப் பிறகு கிளாமர் இமேஜ் என் மீது விழுந்தது. நிறைய ஃபேன் ஃபாலோயர்ஸ் இருந்தாங்க. என்னை திரையில் பார்த்தாலே விசில் அடிப்பாங்க. கிளாமர் இல்லாம கேரக்டர் ரோலும் பண்ணியிருக்கேன். காமெடி, நெகட்டிவ், சாங்னு எல்லாமே பண்ணனும்னு நினைச்சேன். அதுமாதிரி பண்ணியும் இருக்கேன். பலர் நான் கிளாமர் மட்டும்தான் பண்ணுவேன்னு நினைச்சிட்டாங்க. நானே விரும்பி கிளாமர், டான்ஸ் பண்றதாகவும் பேசிக்கிட்டாங்க. எனக்கு கிளாமரான வாய்ப்புகள் தான் தொடர்ந்து வந்தது. கதை கேட்டு வேண்டாம்னு சொல்ற பக்குவம் இப்ப தான் எனக்கு வந்திருக்கு. அப்ப அந்த அளவுக்கு மெச்சூரிட்டி கிடையாது. பெரிய டைரக்டர் படங்களை எப்படி ரிஜெக்ட் பண்ணன்னு தோணும். பாலச்சந்தர் சார், பாலுமகேந்திரா சார், பாரதிராஜா சார் மூணு பேருடைய பிரேம் ஷேர் பண்ணிக்கிற வாய்ப்பு கிடைச்சது. படம் பண்ணின சமயம் சீரியலும் பண்ணினேன் என்றவரிடம் கிட்டத்தட்ட பதினெட்டு ஆண்டுகள் பிரேக் எடுத்தது குறித்துக் கேட்டோம்.

ரொம்ப பிரபலமா இருந்தப்பவே எனக்கு திருமணமும் ஆகிடுச்சு. திருமணத்துக்குப் பிறகு நடிக்க வேண்டாம்னுலாம் எந்த முடிவும் எடுக்கல. மூணு பசங்க பிறந்துட்டாங்க. பிறகு, அவங்களை வளர்க்கிறதுக்கே நேரம் சரியா இருந்துச்சு. நடிச்சப்ப இருந்ததை விட அவங்களை வளர்க்கும்போது ரொம்பவே பிஸியா இருந்தேன். இப்ப அவங்க வளர்ந்துட்டாங்க. அவங்க அவங்களை டேக் கேர் பண்ண ஆரம்பிச்ச பிறகு எனக்கு நிறைய டைம் இருந்துச்சு. அந்த சமயம் தானா வாய்ப்பு வந்ததும் சரி ரீ என்ட்ரி கொடுக்கலாம்னு முடிவு பண்ணினேன். கோவிட் சமயத்தில் மீண்டும் பிரேக் விழுந்துச்சு. அப்ப தெலுங்கில் ஒரு சீரியல் கமிட் ஆனேன். அது பயங்கரமா ரீச் ஆச்சு. தமிழில் நல்ல கேரக்டருக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். இப்ப ஜீ தமிழ் சீரியல் மூலமா மறுபடி தமிழில் நடிக்க வந்திருக்கேன்" என்றவரிடம் சினிமா ரீ என்ட்ரி குறித்துக் கேட்டோம்.

விசித்ரா
விசித்ரா

பலரும் நான் சீரியல் மட்டும்தான் பண்ணுவேன். படங்கள் பண்றது இல்லைன்னுலாம் சொல்லிட்டு இருக்காங்க. கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் எழுதி அவங்களே வணக்கம் போட்டு வீட்டுக்கு அனுப்பிடுவாங்க போல! எனக்கு நல்ல கேரக்டர் ரோலில் நடிக்கணும். அப்ப கிளாமர் பண்ணினதால அப்படித்தான் பண்ணனும்னு இருந்தது. வேற எதிலும் எனக்கு பெரிய அளவில் ஸ்கோப் இல்லை. விசித்ரான்னாலே கிளாமர்னு தான் மனசுல நிற்கும்... இந்த ரெண்டாவது ரவுண்ட்ல அந்த எண்ணத்தை உடைக்கணும்!' என்றார்.

இன்னும் பல விஷயங்கள் குறித்து விசித்ரா நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!