Published:Updated:

"சிரஞ்சீவி உதவியை நினைவுகூரும்போது கண்கலங்கிட்டேன்..." - சரத்குமார் ஷேரிங்ஸ்

சரத்குமார்
சரத்குமார்

நான் ஹீரோ ஆகுறதுக்கு முன்னாடி எனக்குப் பெரிய பொருளாதாரச் சிக்கல் இருந்தது. எனக்கு நெருங்கிய ஒரு தயாரிப்பாளர்கிட்ட என்ன பண்ணலாம்னு கேட்டப்போ, 'நீங்கதான் சிரஞ்சீவிகூட நடிச்சிருக்கீங்களே.

''நீங்க சமீபத்துல சிரஞ்சீவி பத்திப் பேசினது பயங்கர வைரல் ஆகிடுச்சே?''

'' 'ராதிகா சிரஞ்சீவிகூட 28 படங்கள் நடிச்சிருக்காங்க, நீங்களும் சிரஞ்சீவிகூட நடிச்சிருக்கீங்களே'ன்னு அவங்க கேட்டதுக்கு நான் சொன்ன பதில் அது. அவர் எனக்குப் பண்ணின உதவியை நான் சொல்றதுக்கு எந்த இடமும் வாய்ப்பும் கிடைக்கலை. அந்தப் பேட்டியில அவங்க கேட்ட கேள்வி, எனக்கு அவர் பண்ணின உதவியை வெளியே சொல்ல ஒரு வாய்ப்பா இருந்தது.

சரத்குமார்
சரத்குமார்

நான் ஹீரோ ஆகுறதுக்கு முன்னாடி எனக்குப் பெரிய பொருளாதாரச் சிக்கல் இருந்தது. எனக்கு நெருங்கிய ஒரு தயாரிப்பாளர்கிட்ட என்ன பண்ணலாம்னு கேட்டப்போ, 'நீங்கதான் சிரஞ்சீவிகூட நடிச்சிருக்கீங்களே. அவர் கால்ஷீட் வாங்கிக்கொடுங்க. லாபத்துல உங்களுக்கு ஷேர் தருகிறேன்'னு சொன்னார். அதுக்காக அவர்கிட்ட போன்ல பேசிட்டு ஹைதராபாத் போய் அவரை அன்னபூர்ணா ஸ்டூடியோஸ்ல சந்திச்சேன். அவர் என் சூழலைப் புரிஞ்சிக்கிட்டு, மதியம் ஷூட்டிங்குக்கு வரமாட்டேன்னு அவங்க டீம்கிட்ட சொல்லிட்டு என்னை அவரோட வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய்ட்டார்.

முதல்ல என்னை அவர் வீட்ல சாப்பிட வெச்சார். என் மன அழுத்தத்தைக் குறைச்சு என் பிரச்னை என்ன, ஏதுன்னு விசாரிச்சார். 'எத்தனை நாள் கால்ஷீட் வேணும்?'ன்னு கேட்டு உடனே அதைக் கொடுத்துட்டார். அப்பவே எனக்கு பாரமெல்லாம் குறைஞ்ச மாதிரி ஆகிடுச்சு. சம்பளம் பத்தின பேச்சு வரும்போது, 'எனக்கு வர்ற சம்பளத்தைப் படத்தோட லாபத்துல சேர்த்துக்கோ. அந்தத் தயாரிப்பாளர் உனக்கு லாபத்துல ஷேர் தர்றேன்னு சொல்றார்ல. அப்போ உனக்கு இங்கேயே லாபமாகிடும்'னு சொன்னார்.

பேட்டியை முழுமையாக வாசிக்க > "ஷூட்டிங்கில் சமூக இடைவெளி சாத்தியமில்லை!" Click here https://bit.ly/2LILPxI

ராதிகா - சரத்குமார்
ராதிகா - சரத்குமார்

என் வாழ்க்கைக்கும் நான் அவருக்கு நன்றிக்கடன்பட்டிருக்கேன். நமக்குத் துன்பம் வர்ற சூழல்ல 'நான் கூட இருக்கேன்'னு ஒருத்தர் சொல்றதே பெரிய சக்தி. ஆனா, அவர் அதையும் மீறி எனக்காக யோசிச்சது ரொம்பப் பெரிய விஷயம். அதனாலதான் அந்த நிகழ்வைப் பத்திப் பேசும்போது கண்கலங்கிட்டேன்."

- சரத்குமாரிடம் முப்பதாண்டுகால அரசியல் பயணமும் அரசியல் அனுபவங்களும் இருக்கின்றன. அவர் கடந்து வந்த பாதையை நினைவுகூர்ந்ததுடன், லாக்டெளன் காலம் வரையிலான அனுபவங்களை ஆனந்த விகடன் இதழுடன் பகிர்ந்துள்ளார். அந்தப் பேட்டியை முழுமையாக வாசிக்க > "ஷூட்டிங்கில் சமூக இடைவெளி சாத்தியமில்லை!" Click here https://bit.ly/2LILPxI

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு