காலங்காலமாக ஆணாதிக்க வெறி பிடித்து அலையும் தேவதாஸ்களின் கதையே ‘ஆதித்ய வர்மா!’

மருத்துவக்கல்லூரியின் சீனியர் ஆதித்யா வர்மாவுக்கு ஜூனியர் மீரா ஷெட்டியைக் கண்டதும் காதல். சில நாள்கள் சென்றதும் மீராவுக்கும் துளிர்க்கிறது அதே காதல். காதலெனும் ஆதி ஊற்றில் ஆதியும் மீராவும் களித்துத் திளைக்க, திருமணம் என வருகையில் சாதியின் ஆணவமும் ஆதியின் கோபமும் குறுக்கே வந்து காதலைப் பிரிக்கின்றன. காதல் தோல்வியில் தாடி வளர்த்து, தண்ணி அடித்து, நாயுடன் தனியாக வாழத்தொடங்குகிறான் ஆதி. அவனின் மீதி வாழ்க்கை என்னவானது என்பதே படம்!

ஆதித்யா வர்மாவாக அறிமுகம் த்ருவ். விக்ரமின் மகன், விஜய் தேவரகொண்டாவின் டிரேடுமார்க் கதாபாத்திரம் என அறிமுகப் படத்திலேயே இவருக்குப் பெருஞ்சவால்கள் காத்திருந்தன. ஆனால், அதையெல்லாம் பெரிதாய்ப் போட்டு அலட்டிக்கொள்ளாமல் அநாயசமாய் ஊதித்தள்ளியிருக்கிறார்... புகையை மட்டுமல்ல நடிப்பையும்! முதல் ஆட்டத்திலேயே அரை சதம் அடித்து இன்னும் பல நூறு இன்னிங்ஸ்கள் ஆட, வலுவான அடித்தளம் போட்டிருக்கிறார். வாழ்த்துகள் ப்ரோ!

ஆதியின் மீராவாக பனிதா சந்து. ஆதித்யா வர்மாவின் மைனஸ்! நடிக்கப் பெரிதாய் வாய்ப்பும் வாய்க்கவில்லை; வாய்த்த இடத்தில் பெரிதாய் நடிக்கவுமில்லை. த்ருவின் அப்பாவாக ராஜா, பாட்டியாக லீலா சாம்சன், நடிகையாகவே வரும் ப்ரியா ஆனந்த் மற்றும் இன்னபிற குடும்பத்தார்கள் நமக்கு அந்நியமாய் நிற்கிறார்கள். த்ருவின் நண்பனாக வரும் அன்புதாசன் மட்டுமே நமக்கு நெருக்கமாய் வந்து நிற்கிறார். அன்பு ஒன்றுதான் ஆறுதல்!

அசலின் இன்ச் பிசகாத நகலாகப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கிரிசாயா. படத்தின் பலமும், பலவீனமும் அதுவே. தமிழ்ச் சூழலுக்கேற்ப சில மாற்றங்களைப் புகுத்தியிருந்தால் ‘போட்கிளப்’ பையனாகவே மாறியிருப்பான் ஆதித்யா. அது நிகழாததால் சூலூர்பேட்டை பார்டரிலேயே நின்றுகொண்டிருக்கிறான். சிகரெட்டை ஊதி ஊதி சென்னையை டெல்லியாய் மாற்ற முயன்றதற்குக் கடும் கண்டனங்கள். ஆணாதிக்கச் சிந்தனையை விஸ்கி ஊற்றி வளர்த்த அர்ஜுன் ரெட்டிக்கு எதிராய் என்னென்ன எதிர்வினைகள் கிளம்பியதோ, அதையே ஆதித்ய வர்மாவுக்கு முன்பும் வைத்துவிடலாம். படம் முழுக்க ஆணாதிக்கச் சிந்தனையைத் திருப்திப்படுத்த ஆந்திர மீல்ஸ் படையலைப் போட்டிருக்கிறார்கள். சில வசனங்கள் எல்லை மீறியிருக்கின்றன.

ரவி.கே.சந்திரனின் ஒளிப்பதிவு படத்தின் ரிச்னஸைக் கூட்டியிருக்கிறது. விவேக் ஹர்ஷனின் எடிட்டிங் இன்னும் ஷார்ப்பாக இருந்திருக்கலாம். ரதனின் பின்னணி இசையில் உறுத்தலும் இல்லை; பாடல்களில் புதுமையும் இல்லை.

`ஆதித்ய வர்மா’வில் த்ருவை மனதாரக் கொண்டாடலாம்... ஆனால், ஆதித்யாவைக் கொண்டாட மனம் மறுக்கிறது!