Published:Updated:

அர்ஜுன் ரெட்டியாக விஜய்தேவரகொண்டா தாறுமாறு... ஆதித்ய வர்மாவாக துருவ் விக்ரம் எப்படி?!

ஆதித்ய வர்மா
ஆதித்ய வர்மா

2K கிட்ஸின் தேவதாஸ் இந்த 'ஆதித்ய வர்மா'. விஜய்தேவரகொண்டாவை தென்னகத்து காதல் மன்னனாக மாற்றிய தெலுங்கு `அர்ஜூன் ரெட்டி'யின் தமிழ்பதிப்பு. ஆதித்ய வர்மாவில் துருவ் விக்ரம் எப்படி?

* அணையாத சிகரெட்டும் எப்போதும் விஸ்கியும் பற்றிக்கொள்ளும் பாஸ்பரஸ் போல உள்ளமெல்லாம் உக்கிரமுமாக மருத்துவக்கல்லூரி மாணவன் ஆதி என்கிற ஆதித்ய வர்மா. பணக்கார போட் கிளப் வாரிசு. அச்சமும் அமைதியுமாக கல்லூரிக்கு வருகிற மீரா ஷெட்டியைக் கண்டதும் காதலிக்க... வர்மா-ஷெட்டி காதலுக்கு அந்த வர்மா-ஷெட்டி என்கிற அடையாளங்களே பிரச்னையாக எழுகின்றன. பிரிவு... வலி... துயரம்... நிறைய கண்ணீர்... ஏராளமான போதை... `உலகே மாயம் வாழ்வேமாயம்' என ஆதித்ய வர்மா துடிதுடிக்க... பிரிந்த காதலின் கண்ணீர் எபிசோடு மீதிக்கதை.

dhruv vikram
dhruv vikram

* முதல் படத்திலேயே எல்லா ஃப்ரேம்களிலும் தோன்றி முழுப்படத்தையும் தன் பிஞ்சுத்தோள்களில் சுமக்கவேண்டிய பெரிய பொறுப்பு `சிறிய விக்ரம்' துருவுக்கு. குட்டி சளைக்காமல் பதினாறு அடி பாய்ந்திருக்கிறது. புல்லட் பாடியும், ஆர்எக்ஸ் 100 குரலுமாக கழுத்து நரம்பெல்லாம் புடைக்க நடித்துக்கொடுத்து அறிமுக ஆட்டத்திலேயே அரைசதம் அடித்திருக்கிறார் துருவ் விக்ரம்.

* 'அர்ஜூன் ரெட்டி' விஜய் தேவரகொண்டாவுக்குக் கொஞ்சமும் சளைக்காமல் நடித்திருக்கிறார் துருவ். நீதிமன்ற காட்சியில் உடைந்து அழும்போது அப்பாவின் அசுரப் பயிற்சிகள் சின்ன அசைவுகளில் கூடத் தெரிகின்றன. காது சிவக்க கோபத்தில் துடிப்பதும், 'அவ என் மீராடா' என்று அழுது புலம்பும்போதும் மீராவின் அப்பாவோடு அடங்கிப்போவதிலும் அசத்தல் வர்மா... (பல இடங்களில் அந்தக் காலத்து 'சேது' எல்லா ஃப்ரேமிலும் நினைவுக்கு வருகிறார்!)

Dhruv Vikram
Dhruv Vikram
`அர்ஜுன் ரெட்டி’, `கபீர் சிங்’, `ஆதித்யா வர்மா’ - இது வடிவேலு வெர்ஷன்! #VikatanPhotocards

* ஹீரோயின் மீராவாக பனிதா சந்து. நடிப்பும் மிஸ்ஸிங்... க்யூட்னஸும் மிஸ்ஸிங்!

* பழக்கப்பட்ட கதைதான் என்றாலும் அதை சுவாரஸ்யம் குறையாமல் இயக்கியிருக்கிறார் கிரிசாயா. ஒரிஜினல் படத்தின் ஜீவன் சிதையாமல் படத்தை அப்படியே அச்சுப்பிசகாமல் கொடுத்திருக்கிறார். ஆனால் அப்படியே கொடுத்தது சில இடங்களில் துறுத்தலாக இருக்கிறது. படம் நடக்கிற ஊர் எது என்பதில் ஏகப்பட்ட குழப்பம். சென்னை என்கிறார்கள். ஆனால் அது சென்னை போலவே இல்லை. பாத்திரங்களையும் அவற்றின் உணர்வுகளையும் நிறையவே தமிழ்படுத்தியிருக்கலாம். உதாரணத்துக்கு அந்தப் பாட்டி... அர்ஜூன் ரெட்டியில் பாட்டியின் வசனங்களும் அவருடைய மரணமும் `நம் பாட்டியின் மரணம்' போலவே பார்வையாளர்களை அசைத்துப்பார்க்கும்! ஆனால் இதில் பாட்டியாக நடித்திருக்கும் லீலா சாம்சன் மும்பை விளம்பரப் பாட்டிபோல வந்து உடைந்த தமிழில் பேசுகிறார். எமோஷனே இல்லை!

dhruv vikram
dhruv vikram

* எடுத்த எடுப்பிலேயே எதுவுமே சொல்லாமல் நாயகியை முத்தமிடுகிறார் நாயகன். அவருக்கு அந்தப் பெண் மீது காதல் என்பது ஓகே. ஆனால் நாயகி ஏன் அதற்கு சம்மதிக்கிறார். அவருக்கு ஏன் நாயகன் மேல் காதல்வருகிறது என்பதற்கான வலுவான ஒருகாரணமும் இல்லை. சொல்லப்போனால் நாயகன் மிரட்டுகிற மிரட்டிலும் பொசஸிவ்னஸில் பண்ணுகிற அடக்குமுறை அலப்பறையிலும் நமக்கே கடுப்பாகும்போது, நாயகிக்கு எப்படி காதல் வருகிறது என்பது ஆச்சர்யம்.

* ஸ்டாக்கிங்கை கண்டிக்கிற காலத்தில் காதலியை மட்டுமல்லாது அவளுடைய நண்பர்கள், சக மாணவர்கள் என எல்லோரையுமே அராஜகமாக மிரட்டி காதலிக்க வைப்பதெல்லாம் அபத்தம். அதை ஹீரோயிஸமாகக் காட்டியிருப்பது நெருடல்.

Dhruv Vikram
Dhruv Vikram
Adithya Varma

* குடித்துவிட்டு மருத்துவம் பார்ப்பது, நர்ஸ்களே அவருக்கு ஊற்றிக்கொடுத்து சிகரெட் பிடிக்க வைப்பது, வேலைக்காரப் பெண்ணை ஓட ஓட துரத்துவது, நாய்க்கு நாயகியின் பெயர் வைத்து அழைப்பது, பார்க்கிற பெண்ணையெல்லாம் படுக்க அழைப்பது... என இதெல்லாம் ஹீரோ குற்றவுணர்வே இல்லாமல் செய்கிறார். இதையெல்லாம் படம் பார்ப்பவர் ஏற்றுக்கொள்ள அவருக்கு காதல் தோல்வி என்கிற ஒரே காரணமே திரைக்கதைக்குப் போதுமாக இருக்கிறது. ஆந்திராவுக்கு இதுபோதுமானதாக இருக்கலாம்... இது தமிழ்நாடுங்கோவ்! படத்தில் நாயகனுடைய பிரதான GOAL என்ன என்றால் மனதிற்குப் பிடித்த பெண்ணைக் கண்டுபிடித்து காதலித்து பிள்ளைபெறுவதுதானா?!

* தரர... ரம்பம்... தரரம்பம்... என்கிற அந்த தீம் மியூசிக் வெறித்தனம் என்றால்... படம் நெடுக வருகிற சின்னச் சின்ன பிஜிஎம்களும் ரசிக்கவைக்கின்றன. சித் ஶ்ரீராமின் குரலில் ஒலிக்கும் 'யாருமில்லா' தவிர்த்து மற்ற பாடல்கள் எதுவுமே காதுக்குள் நுழையவில்லை.

Adithya Varma
Adithya Varma
லொக்கேஷன் லீலா பேலஸ்... ஷாலினிக்கு அஜித் கொடுத்த பிறந்தநாள் சர்ப்ரைஸ்!

* பல இடங்களில் சிரிக்க வைக்கிற சின்னச் சின்ன பன்ச்கள் அழகு. ஆனால் பல இடங்களில் நீட்டி முழக்கிப் பேசுகிற வசனங்களுக்குக் கத்தரி போட்டிருக்கலாம். மொத்தத்தில் இது முழுக்க முழுக்க 2K கிட்ஸுகளுக்கான படம்!

அடுத்த கட்டுரைக்கு