Published:Updated:

`நெவர் எவர் கிவ் அப்!' - துருவ் விக்ரமின் ஆதித்யா வர்மா டீசர்

`விஜய் தேவரகொண்டா’ நடிப்பில் தெலுங்கில் மெகாஹிட்டான படம் அர்ஜூன் ரெட்டி. இந்த படத்தை தெலுங்கு ரசிகர்களைத் தாண்டி, பல்வேறு தரப்பு ரசிகரகளும் கொண்டாடினர். விஜய் தேவரகொண்டாவுக்கு இந்த படம் பெரும் மைல்கல்லாக அமைந்தது.

Official: Varma Reboot Full Details | Dhruv Vikram | Banita Sandhu
Official: Varma Reboot Full Details | Dhruv Vikram | Banita Sandhu

இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டார் இயக்குநர் பாலா. இதில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்திருந்தார். பட வெளியிட்டுக்கு முன்பே, பாலா டைரக்ஷனில் தங்களுக்கு உடன்பாடில்லை என்றுகூறி, வேறொரு இயக்குநரை வைத்து இயக்குவதாக E4 தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

இந்த அதிரடி அறிவிப்புக்குப்பின் படத்திலிருந்து பாலா விலகிவிட்டார். அதேபோல துருவ் விக்ரமை தவிர்த்து அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மாற்றபட்டனர். படத்துக்கு `ஆதித்யா வர்மா’ என்றும் பெயரிட்டப்படது.

`அர்ஜூன் ரெட்டி’ படத்தின் இணை இயக்குநராக பணியாற்றிய கிரிசய்யா இந்த படத்தை இயக்கியுள்ளார். பனிதா சந்து மற்றும் ப்ரியா ஆனந்த் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு