Published:Updated:

மலையாளத்தில் ஆர்வம் காட்டும் அதிதி பாலன்!

மலையாளத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் நடிக்கும் 'அருவி' அதிதி பாலன்.

அதிதி பாலன்
அதிதி பாலன்

அறிமுக இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வெளியான 'அருவி' படத்திற்கு மக்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்திருந்தது. அந்தப் படத்தின் நாயகி அதிதி பாலனின் நடிப்பு பலராலும் பாராட்டுகளைப் பெற்றது. வழக்கறிஞரான இவர் இந்தப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி முதல் படத்திலேயே எல்லோர் கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு, தமிழில் அவருக்கு பல வாய்ப்புகள் வந்தும் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில், மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக `படவெட்டு' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

அதிதி பாலன்
அதிதி பாலன்

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் லிஜூ கிருஷ்ணா என்பவர் இயக்க, நடிகர் சன்னி வெய்ன் தயாரிக்கிறார். தவிர, இந்தப் படத்திற்கு '96' படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நடிப்பதைத் தொடர்ந்து மற்றொரு மலையாள படத்திலும் நடிக்கவிருக்கிறார், அதிதி பாலன். கணவன் - மனைவி உறவை மையமாக வைத்து உருவாகவிருக்கும் இந்தப் படத்தை `சென்னையில் ஒரு நாள்' படத்தை இயக்கிய ஷாகித் காதர் இயக்குகிறார். குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் முதலில் ஒப்பந்தமாகி இருந்தது நித்யா மேனன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கவிருக்கிறது.