Published:Updated:

விஜய் சேதுபதி ஜோடியாகும் `காற்று வெளியிடை' நாயகி!

உ. சுதர்சன் காந்தி.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார், அதிதி ராவ்

அதிதி ராவ்
அதிதி ராவ்

'96' படத்தின் வெற்றி விழாவில் விஜய் சேதுபதி தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் இப்படத்திற்கு 'துக்ளக் தர்பார்' எனப் பெயரிட்டுள்ளனர். '96' படத்தை வெளியிட்ட 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் மற்றும் வயாகாம் 18 ஆகிய இரண்டு தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

பாலாஜி தரணிதரன் - பிரேம் குமார்
பாலாஜி தரணிதரன் - பிரேம் குமார்

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', 'சீதக்காதி' படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இந்தப் படத்திற்கு வசனம் எழுதுகிறார். ஒளிப்பதிவாளரும் '96' படத்தின் இயக்குநருமான பிரேம் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க அதிதி ராவ் ஒப்பந்தமாகி இருக்கிறார். தவிர, 'நானும் ரெளடிதான்' படத்திற்குப் பிறகு, நடிகர் பார்த்திபன் விஜய் சேதுபதியுடன் இந்தப் படத்தில் இணைந்து நடிக்கிறார். விஜய் சேதுபதியின் வசம் 'சங்கத்தமிழன்', 'லாபம்', 'கடைசி விவசாயி', முரளிதரன் பயோபிக் '800' உள்ளிட்ட படங்கள் உள்ளன.