Published:Updated:

“ஒரு வருஷம்தான் கெடு” - ஷங்கர் கண்டிஷன்... கனவை நிறைவேற்றிய மகள்

அதிதி
பிரீமியம் ஸ்டோரி
அதிதி

இன்னிக்கும் அளவாகக் கொடுத்தால் சென்டிமென்ட் மாதிரி மனுஷனுக்கு இஷ்டமானது எதுவும் கிடையாது. அப்படியே பாசப் பிணைப்பில் கட்டிப் போடுகிற கதை.

“ஒரு வருஷம்தான் கெடு” - ஷங்கர் கண்டிஷன்... கனவை நிறைவேற்றிய மகள்

இன்னிக்கும் அளவாகக் கொடுத்தால் சென்டிமென்ட் மாதிரி மனுஷனுக்கு இஷ்டமானது எதுவும் கிடையாது. அப்படியே பாசப் பிணைப்பில் கட்டிப் போடுகிற கதை.

Published:Updated:
அதிதி
பிரீமியம் ஸ்டோரி
அதிதி

இந்த வாரத்தின் ஹாட் நியூஸ்... இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதியின் சினிமா என்ட்ரி.

`விருமன்' படத்திற்காக கார்த்தியின் ஜோடியாகப் பாவாடை தாவணியில் அதிதி அப்படி ஒரு பாந்தம்! ஜாக்பாட் மாதிரி புதுக் கதாநாயகியைக் கேட்ச் செய்தது எப்படியென தயாரிப்பாளர் 2D ராஜசேகரிடம் பேசினால் பிரவாகமாகக் கொட்டுகிறார்.

“உங்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே அதிதியைப் பிடிச்சிருக்கு. படத்திற்காகப் புதுக் கதாநாயகியைத் தேடிட்டிருந்தோம். மேனேஜர் தங்கதுரை, ‘இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கத் தயாராக இருக்காங்க’ என்றார். ‘இந்த விஷயம் ஷங்கர் சாருக்குத் தெரியுமா’ எனக் கேட்டேன். ‘ஒரு வருஷம் உனக்கு டைம் தரேன்... அதுக்குள்ள உன் வாய்ப்ப தேடிக்க’ன்னு சொல்லியிருக்கார். அவங்க இப்பதான் MBBS முடிச்சிருக்காங்க. பெரிய குடும்பத்துப் பொண்ணு. சினிமாவில் நடிப்பாங்களான்னு நினைச்சபோது பார்த்தால், சினிமாதான் அவங்க கனவுன்னு தெரிஞ்சது. ஆச்சரியம் தாங்க முடியாமல் அடுத்தடுத்து ரெடியானோம். படத்தின் கேரக்டரோ வீரத்தமிழச்சி, மதுரைப் பொண்ணு. அதிதியோ நகரத்தில் பிறந்து வளர்ந்தவங்க. நுனி நாக்கு இங்கிலீஷ் பேசுவாங்களோன்னு நினைச்சா தெளிவாகத் தமிழ் பேசுறாங்க. முதல் நாளில் அதிதியை அழைச்சு வந்து இயக்குநர், கேமராமேன் முதற்கொண்டு நின்னு டெஸ்ட் ஷூட் எடுத்தோம்.

“ஒரு வருஷம்தான் கெடு” - ஷங்கர் கண்டிஷன்... கனவை நிறைவேற்றிய மகள்
“ஒரு வருஷம்தான் கெடு” - ஷங்கர் கண்டிஷன்... கனவை நிறைவேற்றிய மகள்

முதல்நாள், முதல் தடவையா அப்பதான் கேமராவைப் பார்க்கிறாங்க. கொஞ்சமாவது பயம் இருக்கணுமே... மதுரைப் பொண்ணுங்க மாதிரியே மரியாதையா, பாசமா, பிரமாதமாகப் பேசினாங்க. கார்த்திக்கு முன்னாடி நின்னு அவரையே ஒரு அடி பின்னாடி அசந்து நிற்கிற மாதிரி அழுத்தம் திருத்தமாக நீள வசனம் பேசணும். பின்னி எடுத்தாங்க... நாங்களே அசந்துட்டோம். டைரக்டர் முத்தையா ரூட்டே தனி. உறவுகள் எவ்வளவு தூரம் முக்கியம்னு சொல்றதில் அவர் மகா கெட்டி. பக்காவான கமர்ஷியல் மாஸ்டர். அவரே அசந்து பார்த்திட்டு ‘நமக்குத் ‘தேனு' கிடைச்சுடுச்சு சார்’னு மனப்பூர்வமாகச் சொன்னார். ‘விரும’னில் அதிதிதான் தேன்மொழி.

படத்திற்கு அத்தனை ரசனையா தேன்மொழி கேரக்டரை முத்தையா வடிவமைச்சிருக்கார். அப்படியே கார்த்திக்கு சரிக்கு சமமாக நிற்கணும். ‘சபாஷ்... சரியான போட்டி’ன்னு பாராட்டுற இடங்கள் நிறைய வருது. அவங்களோட தெளிவான தமிழுக்கு எந்தக் குறைச்சலும் இல்லை. ஆனால் வேகமும், மதுரைத் தமிழோட மதுரமும் வேணுமில்ல. கலைராணி அவர்களுக்குப் பயிற்சி தர்றாங்க. இயல்பான நடிப்புக்கு ஆனந்த ஸ்வாமி சொல்லிக் கொடுக்கிறார்.

“ஒரு வருஷம்தான் கெடு” - ஷங்கர் கண்டிஷன்... கனவை நிறைவேற்றிய மகள்
“ஒரு வருஷம்தான் கெடு” - ஷங்கர் கண்டிஷன்... கனவை நிறைவேற்றிய மகள்

சூர்யா சார், ‘உன் வரவு நல்வரவு ஆகுக’ன்னு ட்வீட் செய்திருந்தார். இதே வார்த்தையைத்தான் சூர்யா சார் ‘நேருக்கு நேர்’ல அறிமுகமாகும்போதும் விளம்பரத்துல தாணு சார் சொல்லியிருந்தார். இரண்டும் எதேச்சையா ஒண்ணா நடந்திருக்கு.

இன்னிக்கும் அளவாகக் கொடுத்தால் சென்டிமென்ட் மாதிரி மனுஷனுக்கு இஷ்டமானது எதுவும் கிடையாது. அப்படியே பாசப் பிணைப்பில் கட்டிப் போடுகிற கதை. இதில் அதிதிக்கு நிறைய வேலையிருக்கு. முத்தையா எழுதிய வசனத்தை அப்படியே ரத்தமும் சதையுமா குணத்தை, உணர்வை, பாசத்தை இரண்டு நொடியில் கடத்திட்டு ‘அடுத்து என்ன, சொல்லுங்க’ன்னு நிற்கிறாங்க. ‘பருத்தி வீர’னில் கார்த்தியைப் புது நடிகர்னு யாரும் சொல்லலை இல்லையா, அது மாதிரி அதிதிக்கும் இதில் நடக்கும்னு எனக்குத் தோணுது.

அவங்களுக்கு மொத்த ஸ்கிரிப்ட், அதில் அவங்க ரோல் எப்படிப்பட்டதுன்னு எல்லாமே தெரியும். டாக்டர் பொண்ணு எப்படிப் பழகுமோன்னு நெனச்சா 2D ஆபீஸில் வந்ததும் எல்லோர்கிட்டயும் அவ்வளவு சகஜமா பேச ஆரம்பிச்சுட்டாங்க. வந்த நாள் தொடங்கி ஆபீஸ் உதவியாளர்கள், அக்கவுன்டன்ட்னு எல்லார்கூடவும் அவ்வளவு கேலி கிண்டல். ஆனால் ஷூட் ரெடின்னா அப்படியே முகம் மாறுது. வேகமும் கோபமும் முகத்தில் அனலாத் தெறிக்குது.

2D ராஜசேகர்
2D ராஜசேகர்

வேடிக்கை என்னன்னா, ஷங்கர் சார் இதுவரைக்கும் என்ன கதை, என்ன ரோல், என் பொண்ணுக்கு எப்படியெல்லாம் சீன் வரும்னு ஒரு வார்த்தை கேட்கலை. அந்த நம்பிக்கைக்கு நான் ஷங்கர் சாருக்கு தேங்க்ஸ் சொல்லணும். இதோ இப்போ தேனிப் பக்கம் ஷூட்டிங் கிளம்பிட்டோம். அடுத்த வருஷம் அதிதி பெரிய ஹீரோயின்” தீர்மானமாகப் பேசுகிறார் 2D ராஜசேகர்.

வாழ்த்துகள் அதிதி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism