Published:Updated:

``நயன்தாரா சொன்னதைத்தான் நானும் அவங்களுக்குச் சொல்றேன்!'' - ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ் ஆனந்த விகடன் இதழுக்கு முழுமையான பேட்டி அளித்திருக்கிறார். அதில் சோஷியல் மீடியா ட்ரோல்கள் குறித்து அவர் அளித்திருக்கும் பதில் மட்டும் இங்கே!

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ். இவரை மையப்படுத்திய கதைகள் நிறைய வருகின்றன. இவருக்கென்று தனி மார்கெட் உருவாகிவிட்டது. இவரின் நடிப்புக்கு பல்லாயிரம் லைக்ஸ் குவியும்போதும், சில நேரங்களில் மக்களிடம் இருந்து டிஸ்லைக்ஸ் தாக்கும்போதும் கவனமாக கையாண்டு தனது அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி செல்கிறார். அவரிடம், "'காக்கா முட்டை' சமயத்துல நீங்க கொடுத்த விகடன் பேட்டியும் சமீபமா நீங்க பேசுன Ted டாக்கையும் ஒப்பிட்டு நிறைய ட்ரோல் வருதே! அதுக்கு உங்களுடைய பதில் என்ன?" என்று கேட்டோம்.

ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ்

"ஒரு விஷயத்துக்குப் பதில் சொல்லணும்னா வாழ்க்கை முழுக்க பதில் சொல்லிட்டேதான் இருக்கணும். ஏன்னா, இங்க அவ்ளோ கேள்விகள் இருக்கு. Ted டாக்ல என் வாழ்க்கை பயணத்தை எவ்ளோ சிம்பிளா சொல்லமுடியுமோ அப்படி சொன்னேன், அவ்ளோதான். சைதாப்பேட்டையில 'காக்கா முட்டை' பண்ண இடம் வேற. நான் இருந்தது வேற இடம். ஆனா, அந்த மக்களுடைய வாழ்க்கை எனக்கு நிஜமாவே தெரியாது. எட்டு வயசுல இருந்தே ஹவுஸிங் போர்டுலதான் வளர்ந்தேன். அந்த வயசுல அந்த மக்களுடைய வாழ்க்கையை எப்படி புரிஞ்சுக்க முடியும்.

2015-ல இந்தப் பயணத்தை சொல்லியிருந்தால், இரக்கப்படுறதுக்காக நான் சொன்ன மாதிரி இருந்திருக்கும். ஒரு விஷயத்தை சொல்றதுக்கு நேரமும் இடமும் ரொம்ப முக்கியம். எங்க என்ன பேசணும்னு எனக்கு தெரியும். தெளிவான பொண்ணுதான் நான். ஒரு தளத்துல பொய்யா எதாவது சொல்லணும்னு யாருக்குமே அவசியமில்லை. ட்ரோல் பண்றவங்க பண்ணிக்கிட்டேதான் இருப்பாங்க. பிரச்னை இல்லாத வாழ்க்கையே இல்லை. நயன்தாரா ஒரு முறை 'நம்மளை கொச்சப்படுத்தி விமர்சிக்கிறவங்க அங்கயேதான் இருப்பாங்க. ஆனா, நம்ம அதைக் கடந்து பெரிய இடத்துக்கு போய்க்கிட்டே இருப்போம்'னு சொல்லிருந்தாங்க. அதுதான் உண்மை. நம்மளைப் பத்தி நெகட்டிவா பேசுறவங்களைப் பார்த்து சிரிச்சுட்டு போய்க்கிட்டே இருக்கிறதுதான் நல்லது. முடிஞ்சவரை பாசிட்டிவிட்டியை பரப்புவோம்" என்றார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ்

"போதைப்பொருள், நெப்போடிஸம், அரசியல் ப்ரஷர், காஸ்டிங் கவுச்னு பாலிவுட்ல நிறைய பிரச்னைகள் இருக்கு. இப்படி வெளிய வராத அச்சுறுத்துற விஷயமா சினிமாவுல இருக்கிறது என்ன?"

"சமூக வலைதளங்கள்ல உங்களை திட்டிவர கமென்டுகளை பார்க்கும்போது உங்க ரியாக்‌ஷன் என்ன?"

"யாருடைய பயோபிக்ல நடிக்க ஆசை?"

"ஏதாவது மூணு ஹீரோக்களுக்கு சூப்பர் ஹீரோ கேரக்டர்கள் கொடுக்கணுனா யாரெல்லாம் உங்களுடைய சாய்ஸ்?"

"அக்டோபர் 2-ம் தேதி வெளியாக இருக்கும் 'க\பெ.ரணசிங்கம்' திரைப்பட அனுபவம்?"

"எந்தப் பிரபலத்துடைய வாழ்க்கையை ஒருநாள் வாழ்ந்து பார்க்கணும்னு நினைக்கிறீங்க?"

உள்ளிட்ட பல கேள்விகளுக்கு ஆனந்த விகடனில் பதிலளித்திருக்கிறார். அவற்றை முழுமையாக வாசிக்க > "எனக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம்!" https://bit.ly/3iQfZOc

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு