Published:Updated:

வலிமை: 2 ஆண்டுக்குப்பிறகு ரிலீஸானது; தியேட்டரில் குவிந்த ரசிகர்கள்!

போனி கபூர், ஹுமா குரைஷி

கோவிட் தொற்று பிரச்சனையால் வலிமை படப்பிடிப்பு தள்ளிப்போன நிலையில் 2021 செப்டம்பரில் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

வலிமை: 2 ஆண்டுக்குப்பிறகு ரிலீஸானது; தியேட்டரில் குவிந்த ரசிகர்கள்!

கோவிட் தொற்று பிரச்சனையால் வலிமை படப்பிடிப்பு தள்ளிப்போன நிலையில் 2021 செப்டம்பரில் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

Published:Updated:
போனி கபூர், ஹுமா குரைஷி

இரண்டு வருடங்களுக்குப் பிறகு ரசிகர்களின் நீண்ட காத்திருப்புக்கு முடிவு காட்டும் விதமாக இன்று வெளியாகி உள்ளது வலிமை திரைப்படம். 2019 ஆகஸ்டில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வெளியானது. அதன் பிறகு நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய H.வினோத் இயக்கத்திலேயே, அஜித் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. வலிமை என பெயரிடப்பட்ட படத்திற்கு அஜித் ரசிகர்கள் அப்டேட் கேட்டு செய்த அட்ராசிட்டிகள் சமூக ஊடகங்களில் வைரலாகின. கோவிட் தொற்று பிரச்னையால் படப்பிடிப்பு தள்ளி போன நிலையில் 2021 செப்டம்பரில் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. படத்தின் போஸ்ட் புரொடெக்ஷன் பணிகளில் மும்முரமாக இருந்த படக்குழு ஜனவரி 13 மூன்று மொழிகளில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பு ஊரடங்கு வரவே இந்த வெளியீடும் தள்ளிப்போனது.

போனி கபூர், ஹுமா குரைஷி
போனி கபூர், ஹுமா குரைஷி

எல்லாவற்றிற்குப் பிறகு இன்று உலகமெங்கிலும் வெளியாகி இருக்கும் வலிமை படத்தில், பேன் இந்தியா அளவில் நடிகர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 4 மணிக்கு ரசிகர் காட்சிகள் திரையிடப்பட்டன. கார்த்திகேயா கும்மகொண்டா, அஜித் இருபக்கமும் நிற்க படத்தின் இன்டர்வெல் காட்சியின் புகைப்படம் வைரலாகி வருகிறது. யுவன் மற்றும் ஜிப்ரான் இசையில் நீரவ் ஷா ஒளிப்பதிவில் உருவாக்கிய படத்தின் தயாரிப்பு போனி கபூர். ட்ரைலர், மேக்கிங் வீடியோ என பைக் ஸ்டண்ட் காட்சிகள் நிறைந்து காணப்படுகிறது என்பதால் தியேட்டருக்கு பைக் ரேஸ் உடையில் ஒரு சிலர் வந்திருந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism