Published:Updated:

மிஸ்டர் மியாவ் - ஏ.கே 61 அப்டேட்ஸ்

ஏ.கே 61 அப்டேட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஏ.கே 61 அப்டேட்ஸ்

‘தீரன்’ படம் பார்த்துவிட்டு அஜித் அழைத்தபோது, இந்த நெகட்டிவ் கேரக்டர் கதையைத்தான் அவருக்குச் சொல்லியிருக்கிறார் வினோத்.

மிஸ்டர் மியாவ் - ஏ.கே 61 அப்டேட்ஸ்

‘தீரன்’ படம் பார்த்துவிட்டு அஜித் அழைத்தபோது, இந்த நெகட்டிவ் கேரக்டர் கதையைத்தான் அவருக்குச் சொல்லியிருக்கிறார் வினோத்.

Published:Updated:
ஏ.கே 61 அப்டேட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஏ.கே 61 அப்டேட்ஸ்

சிவா இயக்கிய ‘விவேகம்’ படம் சரியாகப் போகாத நிலையில், அஜித் - சிவா கூட்டணி பிரியப்போவதாகப் பரபரப்பு கிளம்பியது. ஆனால், அதைப் பொய்யாக்கி ‘விஸ்வாசம்’ படத்தைப் பெரிய ஹிட்டாக்கிக் காட்டினார்கள் அஜித்தும் சிவாவும். அதேபோல் ‘வலிமை’ எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறாவிட்டாலும், அடுத்த படத்தை ஹெச்.வினோத் இயக்கத்திலேயே செய்வதில் உறுதியாக இருக்கிறார் அஜித். ‘வலிமை’ படத்தின் விமர்சனங்களைத் தாண்டி அடுத்த படத்துக்கான ஆலோசனையில் இருவரும் தீவிரமாக இருக்கிறார்கள்!

கலவையான விமர்சனங்களைக் கடந்து ‘வலிமை’ வலுவாக கல்லாகட்டியதில், தயாரிப்பாளர் போனி கபூருக்கு ரொம்பவே நிம்மதி. அதனால், அஜித்தின் அடுத்த படத்தை உடனடியாகத் தொடங்கச் சொல்லிவிட்டார். ‘ஏ.கே - 61’ படம் குறித்த ஆன்லைன் அலப்பறைகளும் தொடங்கிவிட்டன. அஜித்தின் சம்பளம் இல்லாமல், படத்தின் பட்ஜெட் 50 கோடிக்குத் திட்டமிடப்பட்டிருக்கிறதாம்!

61-வது படத்தில் அஜித்துக்கு நெகட்டிவ் ரோல். அதை சிம்பாலிக்காகச் சொல்வதற்காகத்தான் சில நாள்களுக்கு முன்பு அஜித்தின் நெகட்டிவ் போட்டோ வெளியிடப்பட்டதாம். ‘மங்காத்தா’ படத்துக்குப் பிறகு, நெகட்டிவ் கேரக்டரில் அஜித் நடிக்கவிருக்கிற படம் இதுதான்!

மிஸ்டர் மியாவ் - ஏ.கே 61 அப்டேட்ஸ்

‘தீரன்’ படம் பார்த்துவிட்டு அஜித் அழைத்தபோது, இந்த நெகட்டிவ் கேரக்டர் கதையைத்தான் அவருக்குச் சொல்லியிருக்கிறார் வினோத். ‘இந்த அளவுக்கு டெரர் வில்லன் பாத்திரமா?’ என அப்போது அஜித் மிரண்டுபோனாராம். ‘வலிமை’ டப்பிங்கின்போது, ‘அந்த டெரர் கேரக்டரைக் கையில் எடுப்போமா?’ என அஜித் கேட்க, அதன் பிறகு இப்போதைய சூழலுக்கு ஏற்றபடி சிறு சிறு மாற்றங்களைச் செய்திருக்கிறார் வினோத்.

கதைக்குத் தேவையான ஒரு பிரமாண்ட வீட்டை இப்போதே செட் போடத் தொடங்கியிருக்கிறார்கள். பல அறைகளைக்கொண்ட, தப்பிக்கும் வழிகள் நிறைந்த வில்லனின் வீடாம் அது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்காக யதார்த்தமான கோர்ட் செட் போடப்பட்டதைப்போல், பிரமாண்டமான, அதேநேரம் யதார்த்தம் மீறாத வகையில் வீடு செட் போடப்பட்டுவருகிறது. வீட்டுக்கான பட்ஜெட் மட்டுமே கோடியைத் தாண்டுவதாகத் தகவல்!

‘வலிமை’ படப் புரொமோஷனுக்காக, அஜித் சில வார்த்தைகள் காணொலியாக வெளியிட்டால் நன்றாக இருக்கும் என நினைத்தாராம் தயாரிப்பாளர் போனி கபூர். இதுவரை புரொமோஷன் பணிகளில் கலந்துகொள்ளும் வழக்கமில்லாத அஜித், தன் குடும்பப் புகைப்படங்களை வெளியிட்டு வேறுவிதமான விளம்பர யுக்தியைக் கையாண்டார். ரசிகர்கள் மத்தியில் இது பெரிதாக வொர்க் அவுட்டாக, போனி கபூருக்கும் ரொம்பவே நிம்மதியாம்!

‘வலிமை’ படத்தின் சண்டைப் பயிற்சியாளர் திலீப் சுப்புராயன் என்றாலும், சண்டைக் காட்சிகளுக்கான யுக்திகளை வடிவமைத்துக் கொடுத்தவர் ஹெச்.வினோத்தானாம். அதனால், இந்தப் படத்திலும் ஆக்‌ஷன் காட்சிகளுக்குக் குறைவில்லை என்கிறார்கள். இரண்டு பாடல்கள், ஐந்து சண்டைகள் என இப்போதைக்குத் திட்டமிட்டிருக்கிறார்கள்!

மார்ச் மாதமே ஷூட்டிங்கைத் தொடங்கும்படி போனி கபூர் கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார். ஆனால், படத்துக்குத் தக்கபடி உடல் எடையைக் குறைக்க அஜித்துக்கு அவகாசம் தேவைப்படுகிறது. ஹெச்.வினோத் தரப்பில் ‘அதிக மெனக்கெடல் வேண்டாம் சார்’ என அஜித்திடம் சொல்லப்பட்டிருக்கிறதாம். ‘நேர்கொண்ட பார்வை’ பாணியில் அலட்டிக்கொள்ளாமல், விளையாடுகிற திட்டமாம். அநேகமாக ஏப்ரல் மாதம் ஷூட்டிங் ஸ்டார்ட்!