Published:Updated:

‘வலிமை’ மோஷன் போஸ்டர் : Power... State… Mind… என்ன சொல்லவருகிறார் அஜித்குமார்?!

வலிமை போஸ்டர்
வலிமை போஸ்டர்

நேற்று மாலை கமலின் ‘விக்ரம்‘ பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸானது. இதை அந்தப் படத்தின் இயக்குநர் லோகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர விஜய் - அஜித் ரசிகர்கள் ‘அப்டேட்‘டிற்காக கலாய்த்தது எல்லை மீறி போய் இருக்கிறது. இதன் வெளிப்பாடாகவும் 'வலிமை'யின் திடீர் ஞாயிறு ரிலீஸ் இருக்கலாம்.

அப்டேட் கேட்டே யூரோ கோப்பை வரை அலப்பறை கொடுத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் அஜித். அதுவும் தன் வழக்கமான வியாழக்கிழமை சென்ட்டிமென்ட்டை கைவிட்டு ஞாயிறு கொண்டாட்டமாக யுடியூபில் வந்துவிழுந்திருக்கிறது ‘வலிமை’ மோஷன் போஸ்டர். கூடவே ஏகப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களையும் ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.

‘‘அஜித் வியாழக்கிழமை சென்டிமென்ட் பார்க்கிறவராச்சே... அப்புறம் எப்படி ஞாயிற்றுக்கிழமை வெளியிடுகிறார்கள்?’’ என அஜித்தின் நட்பு வட்டாரத்தில் விசாரித்தேன்.

‘‘கடந்த சில நாட்களுக்கு முன்னரே ‘வலிமை‘ படத்தின் பேட்ச் ஒர்க்குக்காக அஜித்தும், யூனிட்டில் உள்ள சிலரும் ஹைதராபாத் சென்று விட்டனர். இன்றும் ஷூட் அங்கே நடக்கிறது. பேட்ச் ஒர்க் ஷூட்டின்போது மோஷன் போஸ்டருக்கான வேலைகளும் நடந்திருக்கிறது. அப்போது தயாரான போஸ்டர்கள் எல்லோருக்குமே திருப்தி தர, உடனே தயாரிப்பாளர் போனிகபூருக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். அதில் அவரும் ஹேப்பியானதில், வியாழன் சென்டிமென்ட்டை தகர்த்து, ஞாயிற்றுக்கிழமை மாலையே ரிலீஸ் செய்யும் முடிவை எடுத்துவிட்டார்கள்’’ என்கிறார்கள்.

‘வலிமை’ மோஷன் போஸ்டர் : Power... State… Mind… என்ன சொல்லவருகிறார் அஜித்குமார்?!

நேற்று மாலை கமலின் ‘விக்ரம்‘ பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸானது. இதை அந்தப் படத்தின் இயக்குநர் லோகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர விஜய் - அஜித் ரசிகர்கள் ‘அப்டேட்‘டிற்காக கலாய்த்தது எல்லை மீறி போய் இருக்கிறது. இதன் வெளிப்பாடாகவும் திடீர் ஞாயிறு ரிலீஸ் இருக்கலாம் என்கிறார்கள்.

ஓகே ‘வலிமை’ மோஷன் போஸ்டரில் என்ன ஸ்பெஷல்?

கறுப்பு ஜெர்க்கின், கறுப்பு ஹெல்மெட் அணிந்தபடி ஒருவர் நிற்க அவரின் ஹெல்மெட் வைஸரின் வழியே காட்சிகள் விரிகின்றன. தொழிற்சாலைபோன்ற செட்அப்பில் கம்பிகளின் மீதும், தொங்கியபடியும் சில மனிதர்கள் இருக்கிறார்கள்.வெல்டிங் சத்தத்தோடு வேலைகள் நடக்கிறது. அடுத்த காட்சியில் சிலர் ஓடிவர அவர்களுக்கு முன்னால் சண்டைக்கு ரெடியாக நிற்கிறார் அஜித். இதற்கு அடுத்து Power is a state of mind என்கிற வாசகம் அனிமேஷனில் வருகிறது. 'வலிமை' என்பது மனதின் ஒரு நிலைதான் என்கிற இந்த பொன்மொழி அஜித் அடிக்கடி உச்சரிக்கும் ஒன்று. அதையே படத்துக்கான டேக்லைனாகவும் வைத்திருக்கிறார்கள்.

இறுதியாக பைக் சைலன்சரில் இருந்து தீப்பொறி பறக்க அடுத்தக்காட்சியாக ஸ்டைலிஷ் அஜித் கூலர்ஸோடு வந்து நிற்கிறார். மோஷன் போஸ்டரில் 2021 ரிலீஸ் என்பதை உறுதிசெய்திருக்கிறார்கள். ஆனால், தியேட்டரா, ஓடிடியா என்பதை கொரோனாவின் அலைகள்தான் முடிவு செய்யும் என எதிர்பார்க்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு