Published:Updated:

'வலிமை' அஜித்துக்கு, திலீப் சுப்பராயனின் 5 மிரட்டல் ஸ்டன்ட்ஸ்... இன்னும் 3 நாள் ஷூட்டிங் மிச்சம்!

அஜித்குமார்
அஜித்குமார்

கார்த்திகேயாவின் அர்ப்பணிப்பைப் பார்த்து நெகிழ்ந்துபோன அஜித் கடைசி நாள் படப்பிடிப்பின் போது, ‘’இன்னிக்கு நீங்க உங்க டயட்டை கைவிட்டே ஆகணும்’’ எனச் சொல்லி பிரியாணி ட்ரீட் கொடுத்து அவரை வழியனுப்பி வைத்திருக்கிறார்.

‘வலிமை’யின் வலிமை இன்னும் கூடிக்கொண்டே போகிறது. கொரோனா பரவலின் திவீரம் சற்று குறைந்துவருவதால் ‘வலிமை’ அப்டேட்டை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.

அஜித்குமாரின் 60-வது படமான ‘வலிமை’யை போஸ்ட் ப்ரொடக்‌ஷனில் பரபரப்பில் செதுக்கிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத். ‘வலிமை’யின் லேட்டஸ்ட் அப்டேட்டாக காதில் வந்து விழுந்த தகவல்கள் இனி…

ஹைதராபாத்தில் ராமோஜி ராவில் நடந்த படப்பிடிப்பின் போது அஜித், தான் தங்கியிருந்த இடத்திலிருந்து ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு ஹெல்மெட் அணிந்தபடி தினமும் சைக்கிளிலேயே வந்து சென்றிருக்கிறார்.

அஜித்
அஜித்

தெலுங்கில் வெளியான ‘ஆர்.எக்ஸ்.100’ படத்தின் ஹீரோ கார்த்திகேயா கும்மகொண்டா வலிமை படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அஜித்தின் தீவிர ரசிகரான இவர் ‘வலிமை’யில் சிக்ஸ்பேக்கோடு வலம் வருகிறாராம். அதிலும் அவரது போர்ஷன் முடியும் வரை கடும் டயட்டில் இருந்து நடித்து கொடுத்துள்ளார்.

கார்த்திகேயாவின் அர்ப்பணிப்பைப் பார்த்து நெகிழ்ந்துபோன அஜித் கடைசி நாள் படப்பிடிப்பின் போது, ‘’இன்னிக்கு நீங்க உங்க டயட்டை கைவிட்டே ஆகணும்’’ எனச் சொல்லி பிரியாணி ட்ரீட் கொடுத்து அவரை வழியனுப்பி வைத்திருக்கிறார்.

ஃபேமிலி ஆக்‌ஷன் காம்போவான ‘வலிமை’யில் திலீப் சுப்பராயன் மாஸ்டர் மொத்தம் ஐந்து ஃபைட் சீக்குவென்ஸ்களில் விளையாடியிருக்கிறார். அதில் மூன்று சண்டைக்காட்சி மற்றும் சேஸிங்குகளை ஹைதராபாத்திலும், மீதமுள்ள இரண்டு ஆக்‌ஷன் பிளாக்குகளை சென்னையிலும் எடுத்திருக்கிறார்கள்.

மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தாலும், ஃபைட் போர்ஷனில் மூன்றே மூன்று நாட்கள் மட்டும் பேட்ச் வொர்க் இருக்கிறதாம். லாக்டெளன் முடிந்து பேட்ச் வொர்க்கை ஒரே மூச்சில் ஷூட் செய்து முடித்துவிடுவார்கள் என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு