Published:Updated:

"விஸ்வாசம் காட்றதுக்காக அசிங்கப்படுத்தக்கூடாது!" - அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' டிரெய்லர்

அலாவுதின் ஹுசைன்

அஜித் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கியுள்ள 'நேர்கொண்ட பார்வை படத்தின் டிரெய்லர் ரிலீஸ் ஆனது

அஜித், இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த`பிங்க்' படத்தின் ரீமேக்கில் நடிக்க முடிவு செய்தார். நடிகை ஶ்ரீதேவிக்கு தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் விதமாக போனி கபூரின் தயாரிப்பில் இப்படத்தில் நடிக்கத் தொடங்கினார். விஸ்வாசம் படத்தின் வெற்றியை அடுத்து அஜித் நடிக்கும் படம் என்பதாலும், தீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு ஹெச். வினோத் இயக்கும் படம் என்பதாலும் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித்துக்கு ஜோடியாக, தமிழில் முதன்முறையாக அறிமுகமாகிறார் வித்யாபாலன்.

அஜித்தின் `நேர்கொண்ட பார்வை' டிரெய்லர் ரிலீஸ்!
அஜித்தின் `நேர்கொண்ட பார்வை' டிரெய்லர் ரிலீஸ்!

ஷ்ரத்தா ஶ்ரீநாத், அபிராமி, அர்ஜுப் சிதம்பரம், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் என நடிகர் பட்டாளத்துடன் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அஜித். படத்தின் முக்கியமான கேரக்டர் ஒன்றில் ரங்கராஜ் பாண்டே நடிக்கிறார். அஜித். ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. பெண்களுக்கு எதிரான அநியாயங்களைச் சுட்டிக்காட்டும் வகையில் ஒரு படம் நடிப்பது அவசியம் எனக் கருதிய அஜித்துக்கு 'பிங்க்' ரீமேக் சரியானதாக இருக்கும் என முடிவெடுத்துள்ளார்.

அலாவுதின் ஹுசைன்