Published:Updated:

வைரலாகும் `அஜித்'தின் துப்பாக்கிச் சுடும் போட்டோ - பின்னணி இதுதான்!

அஜித் திரைத் துறையில் மட்டுமல்லாது பல்வேறு துறைகளில் தன்னுடைய கால் தடங்களைப் பதித்து வருகிறார். பைக் மற்றும் கார் ரேஸில் ஆரம்பித்து ஏரோ மாடலிங் வரை அனைத்துத் துறைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார்.

Ajith Kumar
Ajith Kumar

இந்த வரிசையில் கோவையில் நடைபெற்றுவரும் தமிழ்நாடு அளவிலான 45-வது துப்பாக்கிச் சுடும் போட்டியிலும் கலந்துகொண்டுள்ளார், அஜித்.

அஜித்
அஜித்

நடிப்பதைத் தவிர, மற்ற துறைகளிலும் அஜித்துக்கு மோகம் இருப்பதை சமூக வலைதளங்களில் வைரலாகும் போட்டோக்களைப் பார்த்தாலே தெரிந்திருக்கும். அந்த ஒரு புகைப்படத்துக்குப் பின்னாலிருக்கும் சாதனைதான் பின் செய்திகளாக வெளிவரும். மாணவர்களோடு ட்ரோன்களை இயக்குவதுபோல் அஜித்தின் புகைப்படம் ஒன்று வைரலானது. அதற்குப் பின்னால், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆளில்லா விமான சோதனை பைலட்டாகவும், அந்த அமைப்பின் ஆலோசகராகவும் அஜித் நியமிக்கப்பட்டார் என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது எடுக்கப்பட்ட போட்டோ ஒன்று வைரலானது. இதற்குப் பின்னாலிருக்கும் செய்தி தற்போது வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அளவிலான 45-வது துப்பாக்கிச் சுடும் போட்டி கோவையில் கடந்த ஜூலை 28-ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நடக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காகத்தான் அஜித், துப்பாக்கி சுடுவதற்கான பயிற்சியில் மேற்கொண்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

வைரலாகும் `அஜித்'தின் துப்பாக்கிச் சுடும் போட்டோ - பின்னணி இதுதான்!

இதுதான் தற்போது ட்விட்டரின் டாக் ஆஃப் தி டவுன். #ThalaAJITHatRifleChampionship என்ற ஹேஷ் டேக்தான் தற்போது ட்விட்டரில் டாப். பல்வேறு பிரபலங்களும், அஜித்தின் ரசிகர்களும் ட்விட்டரில் தெறிக்கவிடுகிறார்கள். 'Tamilnadu shooting association' வெளியிட்ட அறிக்கையில் அஜித்தின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. அந்தப் புகைப்படமும், அஜித் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படமும்தான் ட்விட்டரில் பரவி வருகிறது.