Published:Updated:

#Ajith60 படத்துக்கு அஜித் வைத்த ஒரே நிபந்தனை என்ன தெரியுமா?

சந்தோஷ் மாதேவன்

திரைத்துறையில்கூட இதுநாள்வரை அஜித் நடித்த உச்சபட்ச அரசியல் படமே லிங்குசாமியின் `ஜி' மட்டும்தான். மற்றபடி, சிட்டிசன், ரெட் தொடங்கி தற்போது வெளியாகவுள்ள 'நேர்கொண்ட பார்வை' என அவ்வப்போது சமூகச் சிக்கல்கள், அல்லது தனிமனித குற்றங்கள் குறித்த படங்களில் நடித்துவருகிறார்.

Ajith
Ajith

அரசியலுக்கும் அஜித்துக்கும் ஏழாம் பொருத்தம் என்பது எல்லோரும் அறிந்ததே. நேற்று நடிக்கவந்த நடிகர்கள்கூட `அடுத்த முதல்வர் நான்தான்’ எனும் அளவுக்கு தங்கள் படங்களில் அரசியல் நையாண்டி, அரசியல் விமர்சனம் செய்யும்போது, அஜித் வழி தனி வழிதான். தங்கள் ரசிகர் கூட்டத்தைத் தொண்டர் கூட்டமாக மாற்றம் செய்யும் எண்ணம் கொண்டு செயல்படும் நடிகர்களுக்கு மத்தியில் தன் ரசிகர் மன்றங்களைக் கலைத்துவிட்டு, தான் உண்டு, தன் படம் உண்டு என நிம்மதியாக வாழ்ந்துவருகிறார் அஜித்.

H Vinoth
H Vinoth

சினிமாவில்கூட அஜித் நடித்த உச்சபட்ச அரசியல் படமே லிங்குசாமியின் `ஜி' மட்டும்தான். மற்றபடி, `சிட்டிசன்’, `ரெட்’ தொடங்கி தற்போது வெளியாகவுள்ள `நேர்கொண்ட பார்வை' வரை சமூகச் சிக்கல்கள் அல்லது தனிமனிதக் குற்றங்கள் குறித்த படங்களிலேயே நடித்துவருகிறார்.

இந்த நிலையில், தற்போது ஓர் அரசியல் திரைப்படத்துக்கான கதை அஜித் வீட்டுக்கதவைத் தட்டியுள்ளது என்றும் ஆனால், எப்போதும்போல அந்தக் கதையில் நடிக்க அஜித் மறுத்துவிட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்முறை அந்த அரசியல் கதையை அஜித்திடம் கூறியது வேறுயாருமல்ல `நேர்கொண்ட பார்வை'யை இயக்கியுள்ள ஹெச்.வினோத்தேதான்.

Ajith In Viswasam
Ajith In Viswasam

முன்னதாக, அஜித்தை வைத்து தன் சொந்தக் கதை ஒன்றைப் படமாக்கவேண்டும் என வினோத் முயன்றுவந்தார். அந்தச் சமயத்தில்தான் இந்தியிலிருந்து தமிழுக்கு `பிங்க்' படத்தை ரீமேக் செய்ய எடுத்துவந்தார் தயாரிப்பாளரும், ஶ்ரீதேவியின் கணவருமான போனி கபூர். ஸ்ரீதேவியின் மீது மிகுந்த மரியாதை கொண்ட அஜித், அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதை ஹெச்.வினோத்தே இயக்கவேண்டுமென்பது அஜித், போனி கபூர் இருவரின் விருப்பம்.

இதற்கு முதலில் மறுப்பு தெரிவித்தார் வினோத். பின்னர், `பிங்க்’ ரீமேக் முடிந்ததும், அவரின் கதை ஒன்றிலும் அஜித் நடிப்பார் என்று உறுதியளிக்கப்பட்டதால் வினோத்தும் `பிங்க்'கை தமிழில் மறுவுருவாக்கம் செய்ய ஒப்புக்கொண்டார். தொடர்ந்து, படப்பிடிப்புத் தொடங்கி, படத்தின் பெயரும் `நேர்கொண்ட பார்வை' என்றும் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் அஜித்தின் அடுத்த படத்துக்காக வினோத் இரண்டு கதைகளை எழுதியுள்ளார். அதில் ஒன்று அரசியல் கதை, மற்றொன்று சமூகச் சிக்கல் குறித்த கதை. `நேர்கொண்ட பார்வை' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், அண்மையில், அஜித்திடம் இரண்டு கதைகளையும் விவரித்துள்ளார் வினோத்.

Ajith
Ajith

அவர் சொன்ன அரசியல் கதையில் மிகவும் தீவிரமான அரசியல்தான் களம் என்பதால் அதில் நடிக்க மறுத்துவிட்டாராம் அஜித். ஆனால், இரண்டாவது கதை, தனக்கு நன்றாகப் பொருந்தும் என்பதாலும், அதில் சுட்டிக்காட்டப்படும் சமூகச் சிக்கலுக்கு ஒரு நல்ல தீர்வையும் அந்தக் கதை தருகிறது என்பதாலும் அந்த இரண்டாவது கதையில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் அஜித்.

சந்தோஷ் மாதேவன்