Published:Updated:

அஜித், தனுஷ், கார்த்தி, விஷால்... ஹைதராபாத்தில் குவியும் தமிழ் நடிகர்கள்!

அஜித், தனுஷ், விஷால். கார்த்தி

'வலிமை' படத்தில் அஜித் தொடர்பான ஆக்‌ஷன் காட்சிகளில் விடுபட்டவை மட்டும் ஹைதராபாத்தில் படமாக்கப்பட இருக்கிறது.

அஜித், தனுஷ், கார்த்தி, விஷால்... ஹைதராபாத்தில் குவியும் தமிழ் நடிகர்கள்!

'வலிமை' படத்தில் அஜித் தொடர்பான ஆக்‌ஷன் காட்சிகளில் விடுபட்டவை மட்டும் ஹைதராபாத்தில் படமாக்கப்பட இருக்கிறது.

Published:Updated:
அஜித், தனுஷ், விஷால். கார்த்தி

கொரோனா மூன்றாவது அலை ஆகஸ்ட்டில் பரவலாம் என செய்திகள் பரவுவதால் டாப் ஹீரோக்கள் அனைவரும் பிஸியாகிவிட்டனர். இப்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம்சிட்டியில் கோலிவுட்டே திரண்டுள்ளது. லாக்டெளனுக்கு பிறகு படப்பிடிப்புகள் துவங்கலாம் என அறிவிக்கப்பட்டதும், விஜய்யின் 'பீஸ்ட்' முதல் சின்ன பட்ஜெட் படங்கள் பலவற்றின் படப்பிடிப்புகளும் சென்னையில் நடந்து வருகிறது.

simbu
simbu

தமிழ்நாட்டுக்கு முன்னரே தெலுங்கானாவில் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால், ரஜினியின் 'அண்ணாத்த' மற்றும் விஷாலின் 'எனிமி' படப்பிடிப்பும் ஆரம்பமாகியுள்ளன. தனுஷ், மாளவிகா மோகனன் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கி வரும் 'டி43' படப்பிடிப்பும் அங்கே நடந்துவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

vishal
vishal

இப்போது மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பும் வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது. கார்த்தி, ஜெயம் ரவி என பலரும் ராமோஜிராவில் உள்ளனர்.

அஜித்தின் 'வலிமை' படத்தின் மொத்த படப்பிடிப்பு முடிந்தாலும் சில நாட்களுக்கான பேட்ச் ஒர்க் படமாக்க வேண்டியிருந்தது. அஜித் படப்பிடிப்புக்கு க்ரீன்சிக்னல் கொடுத்ததால், 'வலிமை' டீமும் இப்போது ஹைதராபாத்தில். அஜித் தொடர்பான ஆக்‌ஷன் காட்சிகள்தான் அங்கே நடக்க இருக்கிறது.

இவர்கள் எல்லாம் ஹைதராபாத்தில் இருந்தால் சிம்பு மட்டும் ஓசூரில் இருக்கிறார். 'மாநாடு' படத்திற்காக பழைய ஏர்போர்ட் ஒன்று தேவைப்பட, அதை வெளிநாட்டில் படமாக்க விரும்பினர். கொரோனா சூழலால் வெளிநாட்டு பயணம் கைகூடாததால், இப்போது ஓசூர் அருகே உள்ள பழைய ஏர்போர்ட்டில் 'மாநாடு' ஷூட் நடந்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism