Published:Updated:

ஐ.பி.எஸ், சுவிட்சர்லாந்து ஷூட், படத்தின் வில்லி? - அஜித்தின் `வலிமை' அப்டேட்ஸ்!

Valimai Updates
News
Valimai Updates ( வலிமை )

சென்னையில் பரபரப்பாக ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும் `வலிமை’ படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான அப்டேட்ஸ் இதோ!

`நேர்கொண்ட பார்வை’ படத்தின் ரிலீஸுக்கு முன்பே, அஜித் - ஹெச்.வினோத் - போனி கபூர் கூட்டணி இரண்டாவது முறையாக இணையப்போவது உறுதியானது. `நேர்கொண்ட பார்வை’ படம் `பிங்க்’ படத்தின் ரீமேக் என்பதால், அடுத்ததாக தான் இயக்கப்போகும் படத்துக்கான கதை விவாதத்துக்கு அதிக நாள்களை எடுத்துக்கொண்டு, படப்பிடிப்புக்குக் கிளம்பினார், ஹெச் வினோத். அஜித்தின் கடந்த சில படங்களின் பெயர்கள், பெரிய எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டுவந்த நிலையில், இந்தப் படத்தின் பூஜையின்போதே `வலிமை’ என பெயரை அறிவித்தனர். முதல்கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் முடித்துவிட்டு, தற்போது சென்னையில் பரபரப்பாக ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும் `வலிமை’ படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான அப்டேட்ஸ் இதோ...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
  • `வலிமை’ படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்கிற தகவல், படக்குழுவால் அறிவிக்கப்படாமலே பரவலாக தெரிந்துவிட்டது. `என்னை அறிந்தால்’ படத்துக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தில் போலீஸ் யூனிஃபார்ம் போடுகிறார் அஜித். இந்தப் படத்தில் அஜித்தின் கேரக்டருக்கு `ஈஸ்வரமூர்த்தி ஐ.பி.எஸ்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Ajith and H.vinoth
Ajith and H.vinoth
  • நடிப்பைத் தாண்டி கார் - பைக் ரேஸ் மற்றும் துப்பாக்கி சுடுதல் போன்ற விஷயங்களில் அதிக ஆர்வமாக இருப்பவர் அஜித். அப்படி அஜித்தின் ஆல்டைம் ஃபேவரைட்டான பைக், கார் ரேஸ் சீன்களும் இந்தப் படத்தில் இருக்கின்றன. பல முக்கியமான சேஸிங் சீன்கள் படத்தில் இருப்பதால், அதன் படப்பிடிப்பை சுவிட்சர்லாந்தில் நடத்த திட்டமிட்டிருக்கிறது படக்குழு. தற்போது சென்னையில் நடக்கும் படப்பிடிப்பு முடிந்த பிறகு, மொத்த படக்குழுவும் சுவிட்சர்லாந்துக்குப் பறக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  • `வலிமை’ படத்தில் ஹீரோயினுக்கான பேச்சுவார்த்தை, நயன்தாராவில் ஆரம்பித்து தற்போது ஹூமா குரேஷியில் கமிட்டாகி இருக்கிறது. பாலிவுட் நடிகைகள் பரினிதி சோப்ரா மற்றும் யாமி கெளதமின் பெயர் அடிப்பட்டுவந்த நிலையில், `காலா’ படத்தில் ரஜினியின் காதலியாக நடித்திருந்த ஹூமா குரேஷிதான், `வலிமை’ படத்தின் ஹீரோயினாக கமிட்டாகி இருக்கிறார். இவரும் இந்தப் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

வலிமை
வலிமை
  • ஹீரோயினைப் போல வில்லன் கதாபாத்திரத்துக்கும் பல நடிகர்களின் பெயர்கள் அடிபட்டு வருகிறது. அருண் விஜய், பிரசன்னா, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, கன்னட நடிகர் கிச்சா சுதீப் எனப் பலரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால், இதுவரைக்கும் யார் கமிட்டாகி இருக்கிறார் என்பது தெரியவில்லை. இதுபோன்ற தகவல்கள் ஒருபுறம் கூறப்பட, `வலிமை’ படத்தில் வில்லி கதாபாத்திரம் ஒன்று இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் அஜித்தை தவிர வேறு யார், யார் நடிக்கிறார்கள் என்கிற தகவல் இதுவரைக்கும் அறிவிக்கப்படாததே இந்தக் குழப்பத்துக்குக் காரணம்.

  • `வலிமை’ படத்தின் படப்பிடிப்பு இடைவெளியே இல்லாமல் சென்னையில் நடந்துவந்த நிலையில், ஃபைனான்ஸ் பிரச்னை காரணமாக படம் நிறுத்தி வைக்கப்பட்டது என்றும், போனி கபூருடன் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துவந்த ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் படத்திலிருந்து விலகிக்கொண்டதாகவும் தகவல்கள் பரவின. ஆனால், அது முற்றிலும் தவறான தகவல். `வலிமை’ படத்துக்காகப் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஜீ ஸ்டுடியோஸ் எவ்வளவு தொகை தரவேண்டுமோ அதைக் கொடுத்துவிட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பண்ணுவதால் போனி கபூருக்கு சில பண நெருக்கடிகள் வரவே, அவர் சில ஃபைனான்ஸியர்களிடம் பணம் கேட்டுள்ளார். அதை வைத்தே இந்தத் தவறான தகவலைப் பரப்பியுள்ளனர்.