Published:Updated:

துப்பாக்கி சுடும் போட்டியில் 400-க்கு அஜித் பெற்ற பாயின்டுகள்!

தார்மிக் லீ
எம்.புண்ணியமூர்த்தி

அஜித் திரைத் துறையில் மட்டுமல்லாது பல்வேறு துறைகளில் தன்னுடைய கால் தடங்களைப் பதித்து வருகிறார். பைக் மற்றும் கார் ரேஸ், ஏரோ மாடலிங் என ஆரம்பித்து துப்பாக்கி சுடும் போட்டி வரை அனைத்துத் துறைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார்.

அஜித்
அஜித்

அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது எடுக்கப்பட்ட போட்டோ ஒன்று செம வைரலானது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அளவிலான 45-வது துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் கலந்துகொள்கிறார் என்ற செய்தி பரவலாகப் பேசப்பட்டது.

Ajith
Ajith

இந்தப் போட்டியானது கடந்த ஜூலை 28-ம் தேதியிலிருந்து இன்று (ஆகஸ்ட் 2) வரை நடந்து வருகிறது. போட்டியின் கடைசி நாளான இன்று, அஜித் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டு போட்டியிட்டுள்ளார். மொத்தம் 400 பாயின்டுகள் கொண்ட இந்தப் போட்டியில், அஜித் 314 பாயின்டுகள் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுவாக அஜித் பெற்ற பாயின்ட்டுகள் ரொம்ப மிகையாகவும் இல்லாமல், மோசமாகவும் இல்லாமல் நடுத்தரமாக இருக்கிறதென அங்கிருப்பவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

அதுமட்டுமன்றி, குறுகிய காலம் மட்டுமே பயிற்சியெடுத்து போட்டியில் கலந்துகொண்டு இந்தளவிற்கு பாயின்ட்டுகள் பெற்றிருப்பது பெரிய விஷயம். போட்டியில் கலந்துகொண்டு முடித்தபின், அங்கிருந்து அப்படியே கிளம்பிவிட்டாராம், அஜித். இருப்பினும் அஜித் இப்போட்டியில் கலந்துகொள்வது தெரிந்தபின் ஏகப்பட்ட ரசிகர்கள் அங்கு கூடிவிட்டனர். கூட்டத்தில் பாட்டி ஒருவர் அஜித்தை ஆச்சர்யத்தோடு பார்க்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இப்போட்டியில் ஜெயிப்பவர்களின் பட்டியல் நாளை அறிவிக்கப்படும்.