Published:Updated:

`வலிமை' vs `பீஸ்ட்'... பொங்கலுக்கு டபுள் ட்ரீட்! சிவாவுக்காக மனமாறினாரா அஜித்?!

அஜித்தின் 'வலிமை' டீசர் தீபாவளிக்கு வெளியாகுமென தகவல்கள் வெளிவருகின்றன. அன்றுதான் 'பீஸ்ட்'டின் டீசரோ அல்லது முதல் சிங்கிளோ வெளியாகும் என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அஜித்தின் 'வலிமை' பொங்கலுக்கு வெளியாவதாக அதன் தயாரிப்பாளரான போனி கபூர் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ஏற்கெனவே விஜய்யின் 'பீஸ்ட்' படமும் பொங்கல் ரிலீஸை பிக்ஸ் செய்திருப்பதால், அதன் படப்பிடிப்பும் படுவேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது.

'நேர்கொண்ட பார்வை'க்கு பின் அஜித் - போனி கபூர் - ஹெச்.வினோத் காம்பினேஷனில் உருவான 'வலிமை' படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் தற்போது சென்னையில் நடந்து வருகின்றன. தீபாவளி ரிலீஸைக் குறி வைத்து, படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரத்தில் ரஜினியின் 'அண்ணாத்த' தீபாவளி வெளியீடு என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துவிட்டது.

அஜித் - வலிமை
அஜித் - வலிமை

'அண்ணாத்த' இயக்குநர் சிவா, இதற்கு முன் அஜித்தின் 'வீரம்', 'வேதாளம்', 'விஸ்வாசம்', 'விவேகம்' எனத் தொடர்ந்து நான்கு படங்களை இயக்கி அஜித்தின் அபிமான அன்பைப் பெற்றவர். அதனால் தன் 'வலிமை' தயாரிப்பாளரிடம், "சிவா படம் ரிலீஸ் ஆவதால், நம் படத்தை போட்டியாகக் களமிறக்க வேண்டாம்" என அஜித் ஸ்ட்ரிக்ட்டாகச் சொல்லிவிட்டதால், படத்தின் ரிலீஸை கிறிஸ்துமஸ் தினத்தில் வைத்துக் கொள்ளத் திட்டமிட்டனர். "கொரோனா மூன்றாவது அலை அக்டோர்பர், நவம்பரில் உச்சத்திற்குச் செல்லும் என்ற பயம் நிலவுவதால், மக்கள் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பும்வரை காத்திருப்போம்" என அஜித் நினைத்திருக்கிறார்.

இதனை தன் தயாரிப்பாளர் போனி கபூரிடம் தெரிவிக்க, அவருக்கும் அதில் சம்மதம். அதனையொட்டியே 'வலிமை'யை பொங்கலுக்கு அறிவித்துள்ளனர். அன்று விஜய்யின் 'பீஸ்ட்' படமும் வெளியாவதற்கான சாத்தியங்களும் நிலவுகின்றன.

Beast
Beast

பொங்கலுக்கு அஜித் - விஜய் படங்கள் வெளியானால், தல - தளபதி ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். ஏற்கெனவே 'ஆழ்வார்' - 'போக்கிரி', 'வீரம்' - ஜில்லா' படங்கள் பொங்கலன்றுதான் விருந்து வைத்தன. அப்படி இந்த முறையும் விஜய் - அஜித் படங்கள் வெளிவரவிருப்பதால், இருவரின் ரசிகர்களும் பொங்கலை வரவேற்க இப்போதே ரெடியாகிவிட்டனர்.

அஜித்தின் 'வலிமை' டீசர் தீபாவளிக்கு வெளியாகுமென தகவல்கள் வெளிவருகின்றன. அன்றுதான் 'பீஸ்ட்'டின் டீசரோ அல்லது முதல் சிங்கிளோ வெளியாகும் என்கிறார்கள்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு